ஞாயிறு, 23 அக்டோபர், 2016

தீபாவளி - தமிழர் விழா அல்ல!

தற்பொது  தமிழ்நாட்டில் வட்டிக்கு வாங்கியாவது விறுவிறுப்பாகக் கொண்டாடப் பெறும் திருவிழா தீபாவளி. 
நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, எண்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந் தொழில்களின் பொருளாதாரம் சார்ந்த தாகவும் இத்திருவிழா கொண்டாடப்படு கிறது. 
தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் தேசியத் திருவிழா போலக் காட்டப்படுகிறது. 

ஆயினும் தைப் பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்கு களோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. 

தைப் பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. 

இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவேதான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில்கூடத் தைப் பொங்கல் கொண்டாடப் பெறுகிறது. 

ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் இந்துக்களின் திருவிழா வாக அமைகிறது.
தமிழர் திருவிழா - இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? -

 பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே தமிழர்களின் பழைய மதங்களாகும். 

இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலை பெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். 

பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன.
தீபாவளி, தமிழ்நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவ நிலை களோடும் சடங்குகளோடும் தொடர்பில் லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண் டாடப்படுவதில்லை. 

தீபாவளியின் அடை யாளமான வெடி, அதன் மூலப் பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டுவரை அறிமுக மாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 

விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளி) என்னும் வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருக்கார்த்திகைத் திருவிழாவே. நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ் ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும். 

தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும். 

இந்தநாளே பிராமணிய மதத்தின் எதிரி யான சமண மதத்தின் இருபத்து நாலாம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும். 
தான் இறந்த நாளை வரிசையாகத்தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக் கொண்டார். 

ஆகவே, பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும். 

விசய நகரப் பேரரசான, இந்து சாம்ராஜ்ஜியம், தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பிராமணர்களைவிட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் பக்தி சிரத்தையுடன் கொண்டாடுகின் றனர். 

வடநாட்டு இந்துக்களிடமும் சமணர் களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் மட்டும்தான் தீபாவளி  நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். 

எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ் நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும், சடங்காகும். 

தமிழ் நாட்டுப் பிராமணர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல கங்கா ஸ்நானம் செய்துகொண்டாடுவது குறிப் பிடத்தக்கது. 

ஆகவே உண்மையில் இத் திருவிழா பார்ப்பனிய மதத்தின் திரு விழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.
நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா என்று பாரதிதாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.

பேராசிரியர் தொ. பரமசிவன் -"அறியப்படாத தமிழகம்" நூலிலிருந்து.


========================================================================================
தமிழ் நாடு : "ஹைமா"வால் பருவ மழை தாமதம்.?
சீனா மற்றும் ஹாங்காங்கை தாக்கிய, 'ஹைமா' புயலால், வடகிழக்கு பருவமழை துவங்குவது தள்ளிப்போவதாக, தகவல் வெளியாகி உள்ளது. 

தென் மேற்கு பருவமழை விடை பெறும் நிலையில், அக்., 20ல் வடகிழக்கு பருவமழை துவங்கலாம் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதற்கேற்ற வகையில், வங்க கடலின், வடக்கு மத்திய பகுதியிலும், தென் கிழக்கு பகுதியிலும், இரண்டு மேல் அடுக்கு சுழற்சிகள் ஏற்பட்டன. 
துரத்தப்பட்டது:இதில் ஒன்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், மற்றொன்று மேல் அடுக்கு சுழற்சியாகவும் மாறின. 

இவை இணைந்து, வடகிழக்கு பருவமழையாக மாறும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வங்கக்கடலின் தென் மேற்கு பகுதியில் இருந்து வீசிய காற்றால், காற்றழுத்த தாழ்வு பகுதியும், மேல் அடுக்கு சுழற்சியும், நாட்டின் கிழக்கு பக்கமாக துரத்தப்பட்டன. 

இந்நிலையில், பசிபிக் கடலில், 'ஹைமா' என்ற புயல் உருவானது. இப்புயல், வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியையும், மேல் அடுக்கு சுழற்சியையும் தன் பக்கம் ஈர்த்தது. 
புயலாக மாறும்அதனால், தென் இந்திய கடற்பகுதியில் மையம் கொண்டிருந்த ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. 

இந்த மண்டலம், இன்று காலையில் புயலாக மாறும் என, வானிலை மையம் எதிர்பார்த்துள்ளது.
ஹைமா' புயல், வங்க கடலின் கிழக்கு பகுதியை ஒட்டியுள்ள மியான்மரை நோக்கி செல்வதால், அங்கு கரையை கடக்கலாம்; இல்லையெனில், ஒடிசாவை நோக்கி திரும்பவும் வாய்ப்புள்ளது. 
எனவே, ஆந்திரா, ஒடிசா, அந்தமான் மற்றும் மேற்கு வங்க மாநிலத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்திய கடற்பகுதியில் உருவான ஈரப்பதத்தை, ஹைமா திசை மாற்றி விட்டதால், வடகிழக்கு பருவ மழைக்கான சூழல் மாறி விட்டது. 
இம்மாதம் கடைசி  வரை பருவமழை பெய்ய  வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது .
=======================================================================================

ன்று,

அக்டோபர்-24.
 • ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி வெடித்தது  (1917)

 • பிரேசிலில் ராணுவ புரட்சி உண்டானது (1930)

 • ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் திறப்பு (1931)

 • ஐக்கிய நாடுகள் தினம்(1945)

 • ஜாம்பியா விடுதலை தினம்(1964)
 • ========================================================================================


சனி, 22 அக்டோபர், 2016

ஜியோ வாங்கியவர்களின் " ஐயோ " குரல்,

தகவல் தொழில்நுட்ப உலகில் மாபெரும் புரட்சி என்ற அறிவிப்போடு, களத்திற்கு வந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க்தான் இருப்பதிலேயே மிகக் குறைந்த இணைய வேகம் கொண்டது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ அமைப்பின், ஸ்பீட் வெப்சைட் மூலம் இது தெரியவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, புதிதாக ஜியோ சிம்மை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம், நாடு முழுவதும் 3 மாதங்களுக்கு இலவசமாக பேசிக் கொள்ளலாம்; மாணவர்களின் இணையப் பயன்பாட்டிற்கு 25 சதவிகிதம் மட்டுமே கட்டணம், 1 ஜிபி-க்கான 4ஜி டேட்டா வெறும் 50 ரூபாய் மட்டுமே; ரோமிங் கட்டணம் முற்றிலும் ரத்து என ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

வெறும் 50 ரூபாய்க்கு 4ஜி டேட்டா வழங்கப்படுவது உலகிலேயே எங்கும் இல்லாதது என்று பெருமையடிக்கப்பட்டது.

ஆனால், ரிலையன்ஸ் ஜியோ-வின் சராசரி இணையதள வேகம் 6.2 Mbps என்ற அளவில் மட்டுமே இருப்பதும், இது தேசிய சராசரியை ஒப்பிடும்போது இணையதள வேகத்தில் 5-ஆவது இடத்தில்தான் இருக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது. 

தில்லி வட்டத்தில் ஜியோ வேகம் 5.9 Mbps ஆகவும், கர்நாடக வட்டத்தில் 7.5 Mbps
என்ற அளவிலும் கிடைத்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் ஜியோவுக்கு போதிய அளவு டேட்டா தர முடியவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

மும்பை வட்டத்தில் 10.7 எனும் அளவிற்கு வேகம் கிடைத்தாலும், மும்பை வட்டத்தில் ஜியோ 2-வது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.

அதேபோல அப்லோடுவேகத்திலும், 2.6 Mbpsஎன்ற அளவில் ஜியோ பின்தங்கியே உள்ளது. 
இந்த பிரிவில் ஜியோ, இந்திய அளவில் 6-வது இடத்துக்குத்தான் வர முடிந்துள்ளது.

ஜியோவைவிட குறைந்த அப்லோடு வேகம் கொண்ட நெட்வொர்க் நிறுவனம் என்று பார்த்தால், அது முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனாக இருக்கிறது. அதன் அப்லோடு வேகம் 2.1 Mbps ஆகும்.

ஜியோவின் அப்லோடு வேகம் தில்லி மற்றும் மும்பையில் 2.3 Mbps மற்றும் 3 Mbps என்ற அளவிலும், கர்நாடகாவில் 2.6 Mbps என்ற அளவிலும் உள்ளது.


ஜியோ நெட்வொர்க்கின் வேகம் இருப்பதிலேயே மிகவும் குறைவானது என்ற உண்மை வெளிவந்திருக்கும் நிலையில், ஜியோ சிம்கார்டுக்கான இலவச சலுகைகள் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே நிறுத்தப்பட உள்ளதாக வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.ஜியோ சிம் மூலமான இலவச சலுகைகள், டிசம்பர் 31-ஆம் தேதிவரை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் கூறியிருந்தது. 
ஆனால், டிசம்பர் 3-ஆம் தேதி வரை மட்டுமே இச்சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், ஜியோ நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. 

டிராய் விதிமுறைகளின்படி, எந்தவொரு நிறுவனமும் அறிமுகச் சலுகை என்ற பெயரில் 90 நாட்களுக்கு மேல் இலவச திட்டங்களை நீட்டிக்கக் கூடாது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, டிராய் விதிமுறைகள் தெரிந்தும் ரிலையன்ஸ் நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் அதிருப்தி எழுந்துள்ளது. 
90 நாட்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்க முடியும் என்பது, ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்திற்குத் தெரியாமல் இருக்காது. இருந்தும் அது டிசம்பர் 31-ஆம் தேதி வரை சலுகைகள் வழங்கப்படும் என்று ஏன் அறிவித்தது? என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் தனது இலவச சலுகை மூலம் கடந்த 2 மாதத்திற்குள் மட்டும் 1 கோடி புதிய வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் டிராய் ஜியோ புகாரை அடுத்து பிற அலைபேசி நிறுவங்களுக்கு அபராதம் வித்தித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ சிம்மிலிருந்து அழைக்கப்படும் கால்களுக்கு சரிவர இணைப்பு வழங்காத தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு டிராய் மொத்தம் 3,000 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை செய்துள்ளது. 
 ரிலையன்ஸ் நிறுவனம் வாய்ஸ் கால்ஸ் இலவசம், குறிப்பிட்ட காலத்துக்கு இன்டர்நெட் டேட்டா இலவசம் என்று இலவசங்களை அள்ளி விடுவதால் தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த பல முன்னணி நிறுவனங்களுக்கு ஜியோ வருகை பலத்த அடியாக அமைந்தது. 

ஜியோ அறிவிப்புகள் மற்ற நிறுவனங்களை அழித்து விடும் என்று அவை டிராயிடம் முறையிட்டன. ஆனால் டிராய் ஜியோவுக்கு சாதகமாக முடிவை அறிவித்தது. 
இதனையடுத்து ஜியோ போட்டியை சமாளிக்க அந்த நிறுவனங்களும் கட்டண குறைப்பு ஆயுதத்தை கையில் எடுக்க தொடங்கின. 

இந்த நிலையில், தனது வாடிக்கையாளர்களின் அழைப்புகளுக்கு சந்தையில் உள்ள நிறுவனங்கள் சரிவர இணைப்பு வழங்கவில்லை. 

இதனால் ஜியோ நெட்வொர்க்கில் தினந்தோறும் 52 கோடி அழைப்புகள் பெயிலர் ஆகிறது என்று  பிரதமர் அலுவலகம், டிராய், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் ரிலையன்ஸ் ஜியோ புகார் அளித்தது.  டிராய் அந்த நிறுவனங்களிடம் விசாரணை நடத்தியது. 

அதன் அடிப்படையில், ஏர்டெல், ஐடியா, வோடா போன் ஆகிய நிறுவனங்களுக்கு மொத்தம் 3,000 கோடி அபராதம் விதிக்க டிராய் பரிந்துரை செய்துள்ளது.

டிராய் அபராதம் விதிக்க பரிந்துரை செய்து இருப்பது தொடர்பாக அந்த  நிறுவனங்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 

ஆனால்  `டிராயின் உத்தரவை எதிர்த்து அந்த நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவு ள்ளது’ .
======================================================================================

ன்று,
அக்டோபர்-23.


 • ஹங்கேரி தேசிய தினம்

 • முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது(1911)

 • "புரட்சித்தலைவர்" லெனின், அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்(1917)

 • ஐ.நா., சபையின் முதலாவது கூட்டத் தொடர் நியூயார்க்கில் துவங்கியது(1946)

 • முதல்   ஐபாட்  ஆப்பிள் நிறுவனம்  வெளியிடப்பட்டது(2001)

========================================================================================
இன்று மணவிழாக்களில், நாகரிக உணவு விடுதிகளில் சாப்பாட்டுடன் ஐஸ் கிரீம் தரும் பழக்கம் வளர்ந்துவிட்டது. சாப்பிட்ட பின்பு ஐஸ்கிரீம் உண்பது உணவைச் செரிக்க உதவுகிறது என்று தவறாகக் கருதி வருகிறார்கள்.
இது தவறானது.ஜீரணத்திற்கும் ஐஸ்கிரீமிற்கும் எந்த தொடர்பும் இல்லை.சாப்பிட்டவுடன் நீர் அருந்துவதே போதுமானது.சாப்பிட்டு அரை மணிநேரம் கழித்துத் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற தீவிர வறட்டு முடிவுடன் காத்துக் கிடப்பது அவசியமற்றது.
கம்மஞ்சோறும்,சோளச் சோறும் நன்கு நீர்விட்டுக் கலந்து அதாவது உணவையும் நீரையும் ஒன்றாய் கலந்துஉண்டு ஆரோக்கியமாய் வாழ்ந்த மக்களின் அனுபவம் உடலியல் அறிவியலுக்குப் புறம்பானதா?
ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் பலரும் வெயிலில் அலைந்து விட்டோ அல்லது வெப்பத்தால் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தோ ஐஸ்கிரீம் சாப்பிடுகின்றனர். இதனால்... சைனஸ் பிரச்சனை, டான்சில் பிரச்சனை, குரல் பாதிப்பு போன்ற மூன்று பாதிப்புக்கள் வர நேரிடும்.
சிலர் ஐஸ் கிரீம் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் என்று கருதியும் உண்கின்றனர்.ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஆரோக்கியமான எடை அதிகரிப்பிற்குப் பதில் ஸஐஸ்கிரீமிலுள்ள சர்க்கரைச் சத்தும், கொழுப்புப் பொருட்களும் கொழுப்பை அதிகரித்து குண்டாக்கிவிடும். 
இந்தக் கொழுப்பு ரத்த நாளங்களில் படிவதால் ரத்த நாளங்களின் குறுக்களவு குறைந்து ரத்த ஓட்டம் தடைபடுகிறது. 
விளைவுகளாக.., பலப்பல உடல்நல ஆபத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாய் ஓடிவரும்.