அடிமைகள்

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் செயல்பட்டு வந்த டிரிவேலி பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்கு போலி விசா வழங்கிய குற்றச்சாட்டின்பேரில் அமெரிக்க போலீசாரும், குடியுரிமை அதிகாரிகளும் அண்மையில் சோதனை நடத்தினர். பின்பு பல்கலைக்கழகம் மூடப்பட்டது.
 
.
அந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சுமார் 1,555 மாணவர்களில் 95 சதவீதம் பேர் இந்தியர்கள். குறிப்பாக 750 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள் இவர்கள் அனைவரிடமும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில்,  மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு ரேடியோ கருவியை போலீசார் பொருத்தி இருக்கிறார்கள். இதற்கு இந்தியா தரப்பில் அமெரிக்காவிடம்  கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட 2 மாணவர்கள் போலீசாரிடம் சென்று, தங்கள் காலில் பொருத்தப்பட்ட கருவியை அகற்றுமாறு கூறி தகராறு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை அங்குள்ள கண்காணிப்பு முகாமில் போலீசார் வைத்து இருக்கிறார்கள்.
சும்மாவே இந்தியர்கள் தங்கள் வேலை வாய்ப்பை பறிக்கிறார்கள் என்று அமெரிக்கர்களிடம் கோபம் உள்ளது. இப்போ போலி விசா. 
 நம்மை இழிவு படுத்துவதில் சில அமெரிக்கர்களுக்கு இன்பம் கிடைக்கும் ..நாமும் அதற்க்கு வாய்ப்பளிப்பது கொடுமை.முன்னாளைய அதிபர் புஷ்  நாய்க்கு இந்தியானு பெயர்வைக்கலையா? இந்திய அமைச்சர் என்றும் தெரிந்தே ஆடைகளை களைந்து சோதனை செய்யவில்லையா? 
 அவர்கள் நம்மை நாயை விடக்கேவலமாக ,அடிமைகளாக நடத்தினாலும்
 ஏன் அமெரிக்கப்பைத்தியம் பிடித்து பிரதமர் முதல் சாதா குடிமகன் வரை 
 அலைகிறீர்கள்.
 இப்படி அலைந்தால் அடுத்து மனோகரா இரும்புசங்கிலி தாம்ல,,,,,,,,,,,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?