இந்திய வரவு செலவு


பிரணாப் முகர்ஜி


 
இந்திய நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை, பொருளாதார வளர்ச்சியையும் அடிப்படைக் கட்டமைப்பையும் மேம்படுத்த உதவிகரமாக இருக்கும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவோ, வெகுஜனங்ளின் மேம்பாட்டுக்கோ எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், வருமான வரி செலுத்துவோருக்கு சிறிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி விலக்கு வரம்பு 1.6 லட்சத்தில் இருந்து 1.8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒவ்வொருவருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கிடைக்கும்.
பெண்களுக்கான வரி விலக்கு வரம்பு ஏற்கெனவே 1.9 லட்சமாக உள்ளது.
மூத்த குடிமக்கள்
80 வயதைத் தொட்டவர்கள் 'மிக மூத்தக் குடிமக்கள்'
மூத்த குடிமக்களுக்கான வருமான வரி வரம்பு 2.4 லட்சத்தில் இருந்து 2.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மூத்த குடிமக்கள் என்ற தகுதி 65 என்ற அடிப்படை வயதில் இருந்து 60 வயதாகக் குறைக்கப்பட்டுள்ளது.
புதிதாக, மிக மூத்த குடிமக்கள் என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்படுகிறது. அதாவது, 80 வயதைத் தொட்டவர்கள் அந்த பிரிவி்ல் அடங்குவார்கள். அவர்களுக்கான வருமான வரிவிலக்கு வரம்பு 5 லட்சம் ரூபாயாக இருக்கும்.
நிறுவனங்களுக்கான சர்சார்ஜ் ஏழரை சதத்தில் இருந்து 5 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சேவை வரி தொடர்ந்து 10 சதமாக இருக்கும். இந்த அறிவிப்புக்களை தொழில்துறையினர் சாதமாகப் பார்க்கிறார்கள்.
புதிதாக, 130 பொருட்கள் மீது ஒரு சதம் சுங்கவரி விதிக்கப்பட உள்ளது.
நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கும் ஹோட்டல்கள், மதுபானம் வழங்கும் உணவகங்கள், சில மருத்துவமனைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களும் சேவை வரி வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
உள்நாட்டு விமானப் பயணத்துக்கு 50 ரூபாயும், சர்வதேச விமானப் பயணத்துக்கு 250 ரூபாயும் சேவை வரி
விதிக்கப்படுகிறது. இவை சாதாரண வகுப்புக்களுக்குப் பொருந்தும். உயர் வகுப்புக்களுக்கு 10 சதம் வரி விதிக்கப்படும்.
வீட்டுக் கடன்களுக்கு சிறிதளவு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கெரசின், எல்.பி.ஜி மற்றும் உரம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மானியங்கள், அடுத்த ஆண்டு முதல் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. தற்போது, கெரசினுக்கு பொது விநியோக முறையிலும், எல்பிஜி மற்றும் உரங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலமும் மானியம் வழங்கப்படுகிறது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு 8 ஆயிரம் கோடி
பாதுகாப்பு செலவினங்களுக்கான ஒதுக்கீடு சுமார் 12 சதம், அதாது, ஒரு லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில மேம்பாட்டுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த 60 மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்காக தலா 30 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.
பல்வேறு சமூகத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை 17 சதமும், கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கான திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை 23 சதமும் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கறுப்புப் பணத்தை ஒழித்துக்கட்ட ஐந்து முனைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.
    வரவு செலவை படிதீர்களா? எனது குறிப்புகளை தனியே தருகிறேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?