போஸ்கோ போராட்டம் தொடர்கிறது

ஒரிசா மாநிலத்தில் போஸ்கோ எஃகு ஆலை அமைய ஒரு அங்குல நிலம்கூடக் கொடுக்க மாட்டோம் என்று போஸ்கோ எதிர்ப்பு இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.  மனித உரிமைகள் குறித்தும் ஊழலுக்கு எதிராகவும் கோவா மாநிலம் பனாஜியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று போஸ்கோ பிரதிரோத் சங்கிரம் சமிதியின் தலைவர் அபய் சாஹு பேசியது: "மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் போஸ்கோ ஆலைக்கு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து போஸ்கோ எதிர்ப்பு இயக்கத்துக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த ஆலையை அமைக்க சுற்றுச் சூழல் அமைச்சகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவை அனைத்தும் வெறும் கண்துடைப்புதான். தென்கொரிய நிறுவனத்துக்காக அரசே மக்களின் மீது அடக்கு முறையை ஏவி விடுகிறது.  இந்தத் திட்டத்துக்காக மாநில அரசு நில ஆர்ஜிதம் செய்யத் தயாராகி வருகிறது. எனினும் நாங்கள் எக்காரணம் கொண்டும் எங்களது ஒரு அங்குல நிலத்தைக் கூட ஆலை திட்டத்துக்காக வழங்க மாட்டோம்.  இந்த ஆலை அமைவதை எதிர்த்து கடந்த ஐந்தரை ஆண்டு காலமாக போராடி வருகிறோம். எங்கள் போராட்டத்தை எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டோம்' என்றார் அவர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?