ஏழைகளை ஏழைகளாக்கும் பிரனாப் பட்ஜெட்


2011-12 மத்திய பட்ஜெட், நாட்டு மக்கள் மற்றும் பொருளாதாரத்தின் மிகக்கடுமையான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதில் தோல்விய டைந்துள்ளது. உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் ஈவிரக்கமற்ற முறையில் உயர்த்தப்பட் டுள்ள சூழலில், கடுமையான பண வீக்கத்தால் மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் தரு ணத்தில் இந்த பட்ஜெட் தாக்கல் செய் யப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில், 2011-12ம்ஆண்டிற்கு எரிபொருள், உரம் மற்றும் உணவு போன்ற மிக முக்கிய பொருட்களுக்கான மானியங்கள், 2010-11ம் ஆண்டில் செலவழித்த தைவிட ரூ.20 ஆயிரம் கோடி அள விற்கு மிகக்கடுமையாக வெட்டப்பட்டி ருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. உணவு மானியம் ரூ.27 கோடி அள விற்கு வெட்டப்பட்டிருப்பது, ஒரு அர்த் தமுள்ள உணவுப்பாதுகாப்புச் சட் டத்தை நிறைவேற்ற இந்த அரசு தயா ராக இல்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரி மற்றும் சுங்க வரிகளை குறைக்க முடியாது என்று நிதியமைச்சர் பிடிவாதமாக மறுத்திருப்பதும், ஒருங்கிணைந்த வரி விதிப்பு முறையிலிருந்து விலகிச்செல் வதுமாக இந்த அரசு எரிபொருள் மானியத்தில் ரூ.15 ஆயிரம் கோடி அளவிற்கு கடுமையாக வெட்டியுள் ளது. இது வரும் நாட்களில் எரிபொருள் விலை மிகப்பெருமளவு உயரும் என் பதை முன்கூட்டியே உணர்த்துகிறது. இத்தகைய அறிவிப்புகள், மத்திய அரசின் மக்கள் விரோத குணத்தை அம்பலப்படுத்துகிறது.

இப்படி மானியம் வெட்டியிருப்பதை மூடி மறைக்கும் நோக்கத்துடன், அடுத்த ஆண்டு முதல் நேரடியாக பணம் பட்டுவாடா செய்யும் திட்டம் அம லாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமலில் இருக்கும் “வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர்” பட்டியலில் நாட்டின் ஏழை மக்களில் மிகப்பெருவாரியானோர் இடம்பெறவில் லை. இந்நிலையில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு நேரடி பணப்பட்டுவாடா செய்வது என்ற திட்டம், உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மானிய விலையில் கிடைக்கச் செய் வதற்கு ஒருபோதும் மாற்றாக அமைய முடியாது. மண்ணெண்ணெய் விலை யும் உயர இருப்பது ஏழைகளை மிகக் கடுமையாக பாதிக்கும்.

இந்த பட்ஜெட், ரூ.11,500 கோடி அளவிற்கு நேரடி வரிகளில் நிவாரணம் அளித்துள்ளது; அதே நேரத்தில் மறை முக வரிகள் மூலம் ரூ.11,300 கோடி அளவிற்கு திரட்டப்போவதாக தெரிவிக் கிறது. இந்த மறைமுக வரியானது முற் றிலும் நுகர்வோராகிய மக்கள் மீதே சுமையாக ஏற்றப்படும். இது, பணக்காரர் களை மேலும் பணக்காரர்களாக்கவும், ஏழைகள் மீது மேலும் மேலும் சுமை களை ஏற்றவும் வழிவகுக்கிற ஒரு அரா ஜகமான வரி விதிப்பு நடவடிக்கை யாகும். வருவாய் இனங்கள் குறித்த அறிக்கையின்படி, 2010-11ம் ஆண்டில் அளிக்கப்பட்ட மொத்த வரிச்சலுகை யானது ரூ.5 லட்சம் கோடியை தாண்டி யுள்ளது. இதில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு மட்டும் ரூ.88 ஆயிரம் கோடிக் கும் அதிகமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரிவிகிதமானது 2007-08ம் ஆண்டில் 12 சதவீதத்தை எட்டி யது; இது தற்போதைய பட்ஜெட்டில் 10 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. மக்களிடையே வருமான ஏற்றத்தாழ்வு கள் மிக வேகமாக அதிகரித்து வரும் தருணத்தில், மொத்த உள்நாட்டு உற் பத்தியில் வரியின் விகிதம் வீழ்ச்சிய டைந்திருப்பது இந்த அரசின் மோச மான பொருளாதாரக் கொள்கைகளையே பிரதிபலிக்கிறது.

வரி ஏய்ப்பு செய்யப்பட்டு, வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மிகப்பெருமளவிலான கருப்புப்பணத் தை கைப்பற்றுவது தொடர்பான எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

மொரீசியஸ் நாட்டுடன் மேற்கொள் ளப்பட்டுள்ள இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் வழியாக இந்தி யாவிற்குள் 42 சதவீதம் அந்நிய நேரடி முதலீடுகள் வந்துகொண்டிருக்கின் றன. இது, அந்நிய பன்னாட்டு நிறுவ னங்கள் மற்றும் இந்திய பெரும் நிறுவ னங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்கான மிகப்பெரும் களமாக இருக்கிறது. இத் தகைய வழிகளை அடைப்பதற்கு பதி லாக, இன்னும் பல்வேறு நாடுகளுடன் இதுபோன்ற ஒப்பந்தங்களை நிதிய மைச்சர் கையெழுத்திட்டுக்கொண்டி ருக்கிறார்.

நிதியாதாரங்களைத்திரட்டுவது பின்னுக்குச்சென்றுள்ளது; கடந்த ஆண்டு செலவழித்ததைவிட 2011-12ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற் பத்தியில் திட்டச்செலவினம் என்பது குறைக்கப்பட்டுள்ளது. 2011-12 ஆண்டுக்கான மத்திய திட்டத்திற்கு, மொத்த உள் நாட்டு உற்பத்தி 14 சதவீதம் அளவிற்கு அதிகரித்தபோதி லும், பட்ஜெட்டில் வெறும் 12 சதவீதம் அளவிற்கே நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள் ளது. இத்தகைய குறைப்பு என்பது, அனைத்து முக்கிய வளர்ச்சி திட்டங்களிலும் பிரதி பலிக்கும். சமூகத்துறையின் மிக முக்கியத்திட்டங்கள் அனைத்தும் இந்த பட் ஜெட் டில் புறக்கணிக்கப்பட்டுள் ளன. இந்த திட்டங்களுக்கு உண்மையில் செலவழிக் கப்பட உள்ள தொகை தனிநபர் அடிப்படையில் பார்த்தால் பெருமளவில் குறைக்கப்பட் டுள்ளது என்பதே உண்மை. தேசிய கிராமப்புற வேலை உத்தரவாத திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.100 கோடி அளவிற்கு குறைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கூலி உயர்த்தப்பட்டிருப்பதாக அரசு கூறிக்கொள்கிற போதிலும் நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது. அங்கன்வாடி பணியாளர் களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊதியமும் கூட, உச்சநீதிமன் றம் அறிவித்த மதிப்பீட்டைவிட மிகக்குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாய வளர்ச்சி என்ப தில் 4 சதவீதம் இலக்கு நிர் ணயிக்கப்பட்டுள்ள போதிலும் 11வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் 4 ஆண்டு காலத்தில் சராசரியாக 3 சதவீதத்திற்கும் குறைவாகவே வளர்ச்சி விகிதம் இருக்கிறது. இந்தப் பின்னணியில் விவசாயத் துறைக்கும் நிதி ஒதுக்கீடு கடுமையாக வெட்டப்பட்டி ருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள் நலம், சிறுபான்மை யினர், தலித் மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் நலன்களுக் கான நிதி ஒதுக்கீடுகளும் போதுமானதாக இல்லை. மூலதனச்செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7 சத வீதம் என்று இருந்தபோதிலும் பட்ஜெட் அறிவிப்பில் 1.2 சத வீதம் என்ற அளவிற்கே அறி விக்கப்பட்டுள்ளது. இது மக் களுக்கான அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை செய்துதரு வதில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மிக முக்கியமான நிதித் துறை கட்டமைப்புகளான இன்சூரன்ஸ், வங்கி மற்றும் ஓய்வூதிய நிதி போன்றவற்றை முற்றிலும் தாராளமயமாக்கும் நோக்கத்துடனும், இத்துறை களில் அந்நிய நிதி மூலத னத்தை தாராளமாக அனுமதிக் கும் நோக்கத்துடனும் கூடிய சட்ட மசோதாக்கள் இந்த பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள் ளன. இந்திய பரஸ்பர நிதி நிறு வனங்கள் அந்நிய முதலீட்டா ளர்களை எளிதாக ஈர்த்துக் கொள்ளும் விதத்தில் விதிகள் முற்றிலும் தளர்த்தப்படும் என்று அறிவித்திருப்பது இந் திய பொருளாதாரத்திற்குள் நிதி ஊக வணிகத்தை தீவிரப்படுத் தும். இந்தியாவின் நடப்பு நிதி பற்றாக்குறை மேலும் விரிவ டைந்துள்ள சூழலில் பொரு ளாதாரத்திற்குள் இத்தகைய ஊக நிதி மூலதனம் மிகப் பெருமளவில் பாய்வது பொரு ளாதாரத்திற்கு எந்தவிதத் திலும் நல்லதல்ல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?