வெப்ப காலம்,,

இப்போது தேர்தல் சூடு பறக்க ஆரம்பித்து விட்டது. இது அதை பற்றியது அல்ல. தமிழகத்தில் வெயில் காலம் ஆரம்பம்.கோடையில் சுற்றுப்புறவெப்பம் மட்டுமின்றி, நமது உடல் வெப்பமும்அதிகரிக்கிறது. இதனால், பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சிறுநீர் கழித்தலில் தொல்லை, வியர்வை கோளங்களில் அடைப்பு, தோல் நோய்கள், தோலில் கிருமிகள் வளர்ச்சி,நாவறட்சி, அதிக தாகம், கண்மற்றும் உடல் எரிச்சல், மலச்சிக்கல், நீர்ச்சத்து குறைவால் திடீர் மயக்கம், வெப்பத்தாக்குதல், மூர்ச்சையாதல் தொந்தரவுகளை நீக்கிட சில எளிய வழிகல். உடல் வெப்பம் அதிகரிப்பால் மலச்சிக்கல், கபால அறை மற்றும் உள்ளுறுப்புகளில் வறட்சி ஏற்பட்டு நீர்கோர்த்தல், தூக்கமின்மை, சுவையின்மை, தோல் மற்றும் அவயங்களில் ஒருவித கசகசப்பு ஏற்படும். உடல் பருமனாக இருப்பது போன்ற உணர்வு, தோல் நிற மாற்றம், பல் கூச்சம், கொட்டாவி, மயக்கம், குடைச்சல் ஏற்பட்டு கிறுகிறுப்பு, அதிவியர்வை வெப்பத்தால் தோன்றும் துன்பங்கள் என அகத்தியர், யூகி முனிவர் குறிப்பிடுகின்றனர். இதை தணிக்க உணவில் காரம், புளிப்பு, உப்பை குறைக்கவேண்டும். அனல் அருகில்இருத்தல், வெயிலில் அலைச்லை தவிர்க்க வேண்டும். நன்கு தூங்க வேண்டும். பங்குனி, சித்திரையில் பித்தநோய் எல்லை மீறி, உடல் முழுவதும் பரவி 42 வகை பித்த நோய்களாக உருவாகின்றன.

ஒரு தேக்கரண்டி தேனை 100 மில்லி நீரில் கலந்து தினமும் 2 வேளை சாப்பிட, உடல்வெப்பம் தணியும். தண்ணீர்விட்டான் நெய் அல்லது "சதாவரி கிருதம்' என்னும் மருந்தை ஒரு தேக்கரண்டி தினமும் இரு வேளை சாப்பிடலாம். குங்கிலியப் பற்பம் என்னும் மருந்தை 500 மில்லி கிராம் இளநீரில் கலந்து சாப்பிட உடல் குளிர்ச்சியடையும். நாவறட்சி, உட்சூடு தணியும். நாவறட்சி, உதடு வெடிப்பு நீங்க குங்கிலிய வெண்ணெயை உதடு, நாவின் உட்புறம் தடவவேண்டும்.

உணவில் கத்தரி, முருங்கை மற்றும் அத்திப்பிஞ்சுகள், வாழைப்பூ, பீர்க்கு, புடலையை அதிகம் சேர்க்கலாம். புளியாரை, மிளகு தக்காளி, காசினிக்கீரை, தாளிக்கீரை,மல்லிக்கீரை, அரைக்கீரை, முள்ளங்கி கீரை, வெந்தயக்
கீரையை அடிக்கடி சாப்பிடலாம். உளுந்து, துவரை, பச்சைப்பயறு, வெந்தயக் கஞ்சி அடிக்கடி உட்கொள்ளலாம். வெங்காயம், சீரகம், சோம்பை உப உணவாக பயன்படுத்தலாம்.நெய், பால், தயிரை அதிகம் சேர்க்க வேண்டும். உஷ்ண வீரியமுள்ள கோழி, மீன் உணவுகளை தவிர்ப்பது நல்லது. குழைவாக வடித்த சாதம் அல்லது குருவை அரிசி சாதம் சாப்பிட்டால் உடலில் நீர்ச்சத்தை நிலைநிறுத்தும்.

வியர்க்குரு, தோல் தடிப்பு நீங்க பனை நுங்கு சதையை வியர்க்குரு உள்ள இடங்களில் தடவ வேண்டும். வியர்வை, பூஞ்சை கிருமியால் ஏற்படும் சொறி, சிரங்கு, படை நீங்க வேப்பங்கொழுந்து, குப்பைமேனி இலையை அரைத்து தடவலாம். வேனல் கட்டி மாறவெண்ணெயை உருக்கி இளஞ்சூட்டில் தடவலாம்.உடல் பலம், நோய் எதிர்ப்பு சக்திக்கு நெல்லிக்காய் லேகியம் அல்லது "சயவனபிராச' லேகியம் 5 கிராம் தினமும் இருவேளை உணவுக்குப்பின் சாப்பிடலாம். வெள்ளரிப்பிஞ்சு, தண்ணீர்ப்பழம், இளநீர், நுங்கு அடிக்கடி சாப்பிடலாம். இலவம் பஞ்சு மெத்தை அல்லது கோரைப்பாயில் தூங்கினால் உடல் வெப்பம் தணியும்.
                தேவையின்றி மேலைநாட்டு ரசாயனக்கலவை குளிர்பானங்களை அடிக்கடி அருந்துவது அப்போது நம்மைக் குளிர்வித்தாலும் பின் வரும் காலங்களில் உடல் நலக்கேட்டை உண்டாக்கிவிடும்.நம் நாட்டு இயற்கை வளங்கள் நம்மை ஆரோக்கியப்படுதும்.மேலை நாட்டு இயற்கை வளங்கள் அவர்கள் நலத்தை சீர் செய்யும். இயற்கை ஒவ்வொரு மண்ணிலும் அதற்கேற்பவே மாறுபடுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?