அண்ணாவின் ஆவி



தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தின் போது  "நான் முன்னரே தெரிவித்தது போல மக்களுடனும், தெய்வத்துடனும் தான் கூட்டணி வைத்திருக்கிறேன். சிறு வயதில் இருந்தே எனக்கு எம்.ஜி.ஆர் மீது அதிக பற்று உண்டு. அவர் எந்தெந்த படத்தில் என்னென்ன உடையில் வந்தார் என்று கூட என்னால் சொல்ல முடியும்.
விஜயகாந்த் ஏன் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று நீங்கள் நினைக்கலாம்.பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றால் தான் அவர் பெயர் கொண்ட அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துள்ளேன். அண்ணாவின் ஆவி கூறியதின்பேரிலேயே அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறேன்.
விஜயகாந்த் பணம் வாங்கிக் கொண்டு தான் அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று தி.மு.க.,வினர் கூறுகின்றனர். இது உளவுத் துறையின் தவறான தகவல் ஆகும். நான் பணத்தை மதிப்பவன் அல்ல. கோடிக்கு மயங்கியிருந்தால் நான் மக்களைத் தேடி வந்திருப்பேனா?
கடைக்குப் பொருள் வாங்கச் சென்றால் பார்த்து வாங்குவது போல, தேர்தலில் நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள். நாளைக்கு நல்லது நடக்கும், நடக்காவிட்டால் யாரையும் விடமாட்டேன். என் குணத்தை மாற்ற யாராலும் முடியாது என்றார்.
வடிவேலுதான் காமெடி பீசு என்று நினைத்தால் விஜயகாந்த் அவரைவிட காமெடி பண்ணுகிறார்.
 தேர்தலில் நிற்பதற்கும்,கட்ச்சிதலைவராவதற்கும்  எம்.ஜி.யார் படங்களில் போட்டுவரும் உடைகளின் நிறம்,மணம்,குணம் தெரிந்தால் போதுமா.அதுதான் தகுதி என்று விஜய்காந்த் நினைக்கிறாரா?
அதைவிடக்கேவலம் ‘பகுத்தறிவுவாதி என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் அண்ணா ஆவியாகவந்து இவரிடம் அ.தி.மு. க,உடன் கூட்டணிவைக்கக்கூறியதுதான். இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம். அண்ணா தான் உருவாக்கிய தி.மு.க.வை விடுத்து அவர் இருக்கும் போது இல்லாத கட்சியான அ,தி.மு.க,உடன் கூட்டணிவைக்கக் கூறியதுதான்.அதுவும் அண்ணா காலத்தில் சாதாரண நடிகராக க்கூட இல்லாத இவரிடம் வந்து கூறியதுதான் . இது அண்ணாவின் ஆவிக்கு பெருத்த அவமானம் .
அன்புள்ளவிஜய்காந்த் அவர்களே. நீங்கள் கூட்டணியேக் கிடையாது என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர். இப்போது எனக்கு பக்கத்தில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா என்று உங்களால் கேள்வி எழுப்பப்பட்டு இன்னமும் நாங்கள் விடை தெரியாமல் அலையும் ஜெயலலிதாவுடன் கூட்டணிவைத்துக்கொண்டவர் நீங்கள். 40 சீட்டும் 100கோடியும் ஜெ,விடம் கேட்பதாக செய்திகள் வந்தபோது அதை முதலில் மறுத்தவர் நீங்கள். இப்போது பணத்தை வாங்கவில்லை ,அதை மதிக்க மாட்டேன் என்பதை நாங்கள் நம்பவேண்டுமா?
உங்கள் கட்சிக் கொள்கைகளைக்[இருந்தால்]கூறி வாக்குகேளுங்கள். மக்கள் எல்லோரும் முட்டாள்கள் என்ற தற்போதையப் பாணியிலேயே சென்றால் ,காமெடியெ செய்துவந்தால் மக்கள் உங்களை முட்டாளாக்கி விடுவார்கள் .ஜாக்கிரதை.
அப்புறம் அண்ணாவின் ஆவி மட்டுமல்ல,எம்.ஜி.ஆரின் ஆவியாலும் கூட இந்த கருப்பு எம்.ஜி.யாரைக்{?} காப்பாற்ற இயலாது,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?