2-ஜியும் அல்கொய்தா அணுகுண்டும்,,,,,,,


ஜப்பான் நிலநடுக்கம். அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள்
ஜப்பான் நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர சுனாமிக்கு பின் தொடர்ந்து 400 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால்ஜப்பான் மக்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஜப்பானை கடந்த மார்ச் 11ம் தேதி 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர சுனாமி ஏற்ட்டது அல்லவா?. இதன் பின் கடந்த 40 நாட்களில் 5.0 ரிக்டர் அளவில் 400 முறை ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், ஜப்பான் மக்களை மனரீதியாக பாதித்துள்ளது.
புகுஷிமா டாய்ச்சி அணு உலை கதிர்வீச்சை கட்டுப்படுத்த ஊழியர்கள் திணறி வரும் நிலையில் தொடர் நிலநடுக்கம், பணியை பெரிய அளவில் பாதித்துள்ளது. ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போது இன்னும் அணு உலை கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்துமா? கதிர்வீச்சு தாங்கிய புதிய மேகம் நகர்ந்து வருமா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது.
சில நேரங்களில் நிலநடுக்கம் இல்லாத போதும், சாதாரண நிலஅதிர்வின் போதும், மரக்கிளைகள் அசையும் போது, நிலநடுக்கம் வருவதை போன்ற பயத்தில் உறைந்துள்ளனர். இதனால் ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போது டோக்கியோ எலக்ட்ரிக் பவர் செய்தி தொடர்பாளர் தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார்.
 புவியியல் ஆராய்ச்சியாளர் ரோஸ் எஸ்.ஸ்டெயின்என்பவர் ஜப்பானில் நடத்திய ஆய்வுக்குப் பின் கூறுகையில்,"அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இது தொடர்ந்து ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும்" என்றார்.
மார்ச் 11ம் தேதிக்கு பின் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவது குறைந்துள்ளது. தொடர்ந்து குறையும். ஆனால் சாதாரண நிகழ்வை விட அதிகளவில் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் என்று புவியியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


 பலரும் திடீரென அதிர்வு ஏற்படுவது போல உணர்ந்து பாதிக்கப்படுகின்றனர். கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 400க்கும் அதிகமாக இருக்கும் என்றும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 800க்கும் அதிகமாக இருக்கும் என்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது.
........................................................................................................................................................................ 

அணு ஆயுதத் தாக்குதலை நடத்துவோம்.

ஒசாமா பின்லேடன் பிடிபட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ ஐரோப்பாவில் நாங்கள் மறைத்து வைத்துள்ள அணு குண்டை வெடிக்கச் செய்வோம் என்று அல் கொய்தா அமைப்பு எச்சரித்ததாக விக்கிலீக்ஸ் ஆவணத் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ஐரோப்பாவில் நாங்கள் ஒரு அணுகுண்டை மறைத்து வைத்துள்ளோம். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டாலோ அல்லது பிடிக்கப்பட்டாலோ, உடனடியாக அந்த குண்டை வெடிக்கச் செய்வோம் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் இணையதளம் இதுதொடர்பான ஆவணத்தை வெளியிட்டுள்ளது. கியூபாவின் குவான்டனாமோவில் அமெரிக்கா அமைத்துள்ள கொடுங்கோல் சித்திரவதைச் சிறை தொடர்பான ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் பல பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒன்றில், அல் கொய்தாவின் இந்த எச்சரிக்கை செய்தியும் இடம் பெற்றுள்ளது.
இந்த ரகசிய ஆவணங்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய செய்தி நிறுவனங்கள் சிலவற்றுக்கு விக்கிலீக்ஸ் கொடுத்துள்ளது. அந்த ஆவணத்தில் இடம் பெற்றுள்ள முக்கியத் தகவல்கள் விவரம் வருமாறு:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீவிரவாத தாக்குதலை அல் கொய்தா தொடுத்த சமயத்தில், கராச்சி நகரில் முக்கிய அல் கொய்தா தலைவர்கள் ஒரே இடத்தில் குவிந்து அந்த தாக்குதலைக் பார்த்தனர். மேலும் இந்த தாக்குதலுக்கு தி்ட்டமிட்ட முக்கிய்த தலைவர் விமானங்கள் இரட்டைக் கோபுரத்தை தாக்கி சிதைத்த காட்சிகளை நேரடியாக பார்த்து ரசித்தார். கராச்சியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து மிக மிக பாதுகாப்பான முறையில் இவர்கள் அந்தக் காட்சிகளை டிவி ஒளிபரப்பின் மூலம் பார்த்துள்ளனர்.
இந்த வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில்தான், ஏமன் நாட்டில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். கோல் கப்பல் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளில் முக்கியமான நபர், டான்சில் ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நியூயார்க் நகரில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் ஒரு சில நாட்களில் அத்தனை அல் கொய்தா தலைவர்களும் ஆப்கானிஸ்தானுக்கு ஓடி விட்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டைக் கோபுரத் தாக்குதல் சம்பவத்திற்கு முக்கியக் காரணமான பின்லேடனும், அவனது துணைத் தளபதியான அய்மான் அல் ஜவாஹிரியும் சம்பவத்தன்று கராச்சியில் இருந்தது இந்த ஆவணம் மூலம் தெரிய வருவதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 11ம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பின்னர், நான்கு நாட்கள் கழித்து காந்தஹாருக்கு பின்லேடன் போயுள்ளார். அங்கு அல் கொய்தா தீவிரவாதிகள் கூடியுள்ளனர். அப்போது, ஆப்கானிஸ்தானை நாசகார அமெரிக்க கும்பலிடமிருந்து காப்போம் என்று உறுதி மொழி எடுத்துள்ளனர்.

2ஜி- குற்றப் பத்திரிக்கை தாக்கல்


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதே போல கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் இன்றைய குற்றப் பத்திரிக்கையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை.
இதையடுத்து வரும் மே 6ம் தேதி ஆஜராகுமாறு கனிமொழிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.பி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மற்றும் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனம் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதியதவி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டாலும், அந்த நிதியுதவியை டிபி ரியாலிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது.
குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கித் தந்தததற்கு லஞ்சமாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக சிபிஐ கருதுகிறது.
இதையடுத்து கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமார் ரெட்டியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கலைஞர் டிவி அலுவலகத்திலும் சோதனை நடத்திய சிபிஐ, அதன் பங்குதாரர்கள் என்ற வகையில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.
இந் நிலையில் சிபிஐ இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி, சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், இன்றைய குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை. கனிமொழி, சரத் குமாரின் பெயர்களே இடம் பெற்றன.
கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் களில் ஒருவரான கனிமொழி, 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான குற்றச் சதியில் இணைந்து செயல்பட்டதாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் 80,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது நினைவிருக்கலாம். அதில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா, நீரா ராடியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அதிகாரிகள், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாஹித் உஸ்மான் பல்வா, இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் நிறுவன இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் நிர்வாக இயக்குனர் சரத் குமார் ரெட்டி ஆகியோருக்கு முறையே 20, 60 மற்றும் 20 சதவீத பங்குகள் உள்ளன.
சிபிஐ இன்று தாக்கல் செய்த துணைக் குற்றப் பத்திரிகையிலும் ஆ.ராசாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் ஸ்பெக்ட்ரத்தை குறைந்த விலையில் ஒதுக்க தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டை சிபிஐ கூறியுள்ளது.
கனிமொழி, சரத் குமார் தவிர சினியுக் நிறுவனத்தின் கரிம் மொரானி மற்றும் குசேகாவ் நிறுவனத்தின் ராஜிவ் அகர்வால் மற்றும் இந்த நிறுவனங்களின் பங்குதாரரான ஷாகித் உசேன் பல்வாவின் தம்பி ஆஷிப் பல்வா ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சிபிஐ குற்றப்பத்திரிகையில் கலைஞர் டி.வியின் 60 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்படாதது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
===========================================================================
அய்.நா,அறிக்கையை கண்டுகொள்ளாமல் இலங்கை அரசு விட்டுவிடும்படியும்,அய்.நா,சபையில் தாங்கள் பார்த்துக்கொள்வதாகவும் ரஷ்யாவும்,சீனாவும் பக்சேக்கு ஆலோசனைவழங்கியுள்ளன. வீட்டோ வாக்கு உள்ள இந்நாடுகளால் அறிக்கையின் நோக்கமே மழுங்கடிக்கப்பட்டுவிடும். இது போன்று வீட்டோ பயன்பாட்டை தீயவழிகளுக்கு செயல்படுத்தும் நாடுகள் இருக்கையில் அய்.நா,சபை என்ன பயனுள்ள சேவைகளை செய்ய இயலும்.
 //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?