வாக்கும் ,வக்கும்


அசாமின் திஸ்பூர் பேரவைத் தொகுதியில் மன்மோகன் சிங்கும், அவரது மனைவி குரசரண் கெளரும் வாக்காளர்களாக பதிவுசெய்துள்ளனர். ஆனால் அசாம் சட்டமன்றத் தேர்தலில், தனக்கு வாக்கு இருந்தும் அங்கு சென்று வாக்களிக்கத் தவறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

கடந்த 20 ஆண்டுகளாக அசாமில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அப்போதிலிருந்து அவர் அசாமில் வாக்காளராக இருந்து வருகிறார்.
திஸ்பூர் தொகுதிக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மன்மோகன் சிங் அவரது வாக்கைப் பதிவு செய்யவில்லை என அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரியான ஜே.பாலாஜி தெரிவித்தார். திஸ்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 175-ல் வாக்காளர் பட்டியலில் 721-வது பெயராக மன்மோகன் சிங்கின் பெயர் உள்ளது.
அசாம் முன்னாள் முதல்வர் ஹிதேஸ்வர் சைகியாவின் மனைவியும், அசாம் முன்னாள் அமைச்சருமான ஹேமோபிரவா சைகியாவின் வீட்டில்தான் மன்மோகன் சிங் வாடகைக்கு இருப்பதாக பதிவாகி உள்ளது. ஆனாலும் தலைமைச்செயலக வளாகத்துக்கு அருகில் உள்ள அந்த வீட்டில் மன்மோகன் சிங் ஒருபோதும் தங்கியதில்லை.


2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் மன்மோகன்சிங் வாக்களிக்கவில்லை. அஞ்சல் மூலம் வாக்களிக்கும் உரிமை தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு மட்டுமே உள்ளது. பிரதமருக்கு அந்த உரிமையில்லை.                                                    சீனா, கஜகஸ்தான் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய பிரதமர் செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் செல்கிறார். இதையடுத்து தில்லியில் திங்கள்கிழமை பணிகளில் பிரதமர் ஈடுபட்டிருந்ததால் அசாம் சென்று வாக்களிக்க முடியவில்லை என்று தெரியவருகிறது.
வாக்களிப்பது உங்கள் கடமை என்று தேர்தல் ஆணையம் சொல்வது எளிய மக்களுக்கு மட்டும் தானா? பெரிய அதிகாரிகள்,அரசியல் வாதிகள்,தொழிலதிபர்கள் வாக்களிப்பது இல்லையே.
பொதுமக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களை அவர்கள் மொத்தமாக விலக்கு வாங்கிவிடுகிறார்களே,.பின் எதற்கு வாக்களிக்க செல்லவேண்டும்,
சீனா செல்லும் பிரதமருக்கு வாக்களிப்பது தனது ஜனநாயகக் கடமை எனத்தெரியாதா? 
அல்லது வழக்கம் போல் தேர்தல் நடப்பது பற்றி “எனக்கு ஒன்றும் தெரியாது” பதில்தானா?
    மன்மோகன்சிங் கொல்லைபுறமாகவே பிரதமரானவர். தேர்தலி நிற்பதும்,மக்களை சந்திப்பதும் அவர் அறியாத ஒன்று.மக்கள் தேவைகளும்,மக்கள்நலனும் அவருக்கு பிரியாத ஒன்று.
அவருக்குத்தெரிந்ததெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது,,
மன்மோகன் மட்டுமல்ல நம் முன்னாள் தேர்தல் அலுவலர் நரேஸ்குப்தாவும் சென்றதேர்தலில் வாக்களிக்க வில்லை.காரணம் வேலை.
வாக்களிக்க வரிசையில் நிற்கும் நாமெல்லாம் வேலை வெட்டி யில்லாதவர்களா? பொழுது போகாமல் வாக்களிப்பவர்களா? 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?