எண்டோசல்பான் -தடை செய்ய வேண்டும்.

 ‎

மண்ணையும், நீரையும் விஷமாக்கும் எண்டோசல்பான்

 எண்டோசல்பான் உள்பட கொடிய விஷம் கொண்ட பூச்சி மருந்து களை கட்டாயமாக விவசாயிகளை பயன்படுத்த செய்து, இந்திய விவ சாயிகளுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்து வருகிறது மத்திய காங்கிரஸ்  அரசு என்று கேரள முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் சாடியுள்ளார்.

கேரளமும், கர்நாடகமும் தடை செய்துள்ள எண்டோசல்பான் பூச்சி மருந்தை உடனடியாக நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி யுள்ளன.
”ஒரு முழுமையான விஷமான எண்டோசல்பான் பூச்சி மருந்து, மனிதர்களுக்கு பெரும் தீங்கு விளை வித்து வருவது மட்டுமின்றி, சுற் றுச்சூழலுக்கும் ஈடு செய்ய முடி யாத சேதாரத்தை ஏற்படுத்தி வரு கிறது. அப்படிபட்ட இந்த ரசாயன மருந்து இன்னும் நமது நாட்டில் பகிரங்கமாக விற்கப்பட்டு வரு கிறது.

கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்தில் எண்டோசல்பான் பூச்சி மருந்தால் ஏற்பட்ட துயரங் கள் தொடர்கின்றன. 1995ம் ஆண்டு முதல் எண்டோசல்பான் பூச்சி மருந்தை தொடர்ந்து தெளித்ததன் மூலம் 500 உயிர்கள் பறிக்கப்பட் டுள்ளன என்று அதிகாரப்பூர்வ கணக்கு தெரிவிக்கிறது. 1970களுக்கு பிறகு என்று கணக்கிட்டால் சுமார் 4 ஆயிரம் பேர், எண்டோசல்பான் தெளிக்கும்போது அதை சுவாசித்த தால் உயிரிழந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. இந்த பூச்சி மருந்தை பயன்படுத்தி பிறகு அதன் தொடர்விளைவால் இன்றைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரும் துயரத்தை அனுபவித்து வரு கிறார்கள். 9 ஆயிரத்திற்கும் அதிக மான மக்கள் செவித் திறனை இழந் திருக்கிறார்கள்; உடல் உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அது மட்டுமின்றி எண்டோசல்பான் பூச்சி மருந்து கலந்ததால் மண் ணும், நீரும் விஷமாக மாறியிருக் கிறது. இந்த மண்ணில் விளையும் உணவுப் பொருட்கள் மனித உட லில் பெரும் பாதிப்புகளை நீண்ட காலத்திற்கு ஏற்படுத்தும் அபாய மும் உள்ளது.

எண்டோசல்பானின் வர லாற்றை ஆராய்ந்தால் உலகம் முழு வதிலும் 74 நாடுகளில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நமது நாட் டில் கேரளாவும், கர்நாடகமும் தடை செய்துள்ளன. கேரள அரசு தனது அதிகார வரம்புக்கு உட் பட்டு, எண்டோசல்பானால் பாதிக் கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளித்து வருகிறது.

ஆனால், மத்திய அரசு, பாதிக் கப்பட்ட இந்த மக்களை பற்றி இது வரையிலும் சிந்திக்கவில்லை. கேர ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிக் கூட அளிக்க தயா ராக இல்லை. மாறாக, கேரள அரசு, எண்டோசல்பானால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயி ரம் நிவாரணமும், அவரை சார்ந்தி ருக்கும் குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரமும், இலவச ரேசன் பொருட்களும் வழங்கி வருகிறது. காசர்கோடு மாவட்டத்தில் 11 பஞ் சாயத்துகளில் இதன் பாதிப்பு தீவி ரமாக இருப்பதால் மேற்கண்ட நிவாரணத்தை இடது ஜனநாயக முன்னணி அரசு முழுமையாக அமல்படுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியில், நாடு முழு வதும் கொடிய பாதிப்புகள் ஏற் படாமல் இருக்க உடனடியாக எண் டோசல்பான் பூச்சி மருந்துக்கு மத் திய அரசு தடை விதிக்க வேண்டும். மேலும், இந்த மருந்தை பயன்படுத் தியதால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடவும், பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரணம் அளிக்கவும் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி, இதுதொடர் பாக ஸ்டாக்ஹோம் நகரில் விரை வில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில், எண்டோசல்பானை உலகம் முழுவதிலும் தடை செய்ய வேண்டுமென இந்தியாவின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச் சகம் வலியுறுத்த வேண்டும். இதை செய்தால்மட்டுமே உலகம் முழு வதிலும் இந்தக் கொடிய விஷ முள்ள பூச்சி மருந்துக்கு முடிவு கட்ட முடியும்.

ஐக்கிய நாடுகள் சபையின் சுற் றுச்சூழல் மையத்தின் ஆய்வுக் குழு வானது, 3 ஆண்டு காலம் தீவிரமாக விவாதித்து, எண்டோசல்பான் பூச்சி மருந்தை உலகம் முழுவதி லும் தடை செய்ய வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. ஸ்டாக் ஹோம் சுற்றுச்சூழல் மாநாட்டில், தடை செய்யப்பட வேண்டிய மருந் துகள் தொடர்பாக இந்தக் குழு முன்வைத்துள்ள பட்டியலில் எண் டோசல்பான் முதலிடத்தில் உள் ளது.

இத்தகைய பின்னணியில், ரசா யன மருந்துகள் உற்பத்தியில் ஈடு பட்டுள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்ப்பந்தத்திற்கு பணியாமல், கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும்மக்கலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எண்டோசல்பான் பூச்சி மருந்தை உடனடியாக இந்திய அரசு தடை செய்ய வேண்டும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?