தங்கமே,,,தங்கம்.!


 
தங்கக் கட்டிகள்
உலக சந்தையில் தங்கத்தின் விலை இதுவரையில்லாத புதிய உயரத்தை எட்டியுள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து ஐநூறு டாலர்களுக்கு சற்று குறைவு என்ற நிலையில் உள்ளது.
அதாவது ஒரு கிராம் தங்கம் ஐம்பத்து இரண்டு டாலர்களுக்கும் அதிகமான விலை போகிறது.
செல்வந்த நாடுகளின் அரசாங்க கடன்கள் குறித்து கவலைகள் அதிகரித்துவருவதே தங்கத்தின் விலையேற்றத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
அரசாங்க உத்திரவாதப் பத்திரங்கள், செல்வந்த நாடுகளின் கடன் பத்திரங்கள் போன்ற மற்ற விஷயங்களில் தாங்கள் செய்த முதலீடுகள் பலன் தராமல் போகலாம் என்ற கவலை ஏற்படும் நேரத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் பலர் தமது பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று கருதுகின்றனர்.
ஐரோப்பாவைப் பொறுத்தவரை, கிரேக்கம் தான் திரும்பி செலுத்த வேண்டிய சர்வதேச கடன்களை திருப்பி செலுத்தாமல் போக வாய்ப்புள்ளது என்ற சந்தேகங்களும் ஊகங்களும் அதிகரித்து வருகின்றன.
ஐரோப்பாவின் மற்ற நாடுகளும் தாங்கள் வாங்கக்கூடிய சர்வதேச கடன்களின் அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என்ற ஐயம் நிலவுகிறது.
தவிர தற்சமயம் அமெரிக்காவின் சர்வதேச கடன்கள் குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன.
அண்மையில் அமெரிக்காவின் சர்வதேசக் கடன்களின் எதிர்காலம் குறித்து கடன் பெறுவதற்கான தகைமை குறித்து மதிப்பீடு செய்யும் நிறுவனம் ஒன்று எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இது அமெரிக்காவின் சர்வதேச கடன்களின் நிலை தொடர்பான கவலைகளுக்கு வலுசேர்த்துள்ளது.
கடனை திருப்பி செலுத்துவதற்கான தகைமையைப் பொறுத்தவரை முதல் தரமான 'AAA' வை அமெரிக்கா இதுவரை இழக்கவில்லை என்றாலும், அத்தரத்தில் இருந்து அது கீழ் இறங்கிவிடுவதற்கான வாய்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்கா இந்த தரத்தில் இருந்து இறங்குகிறது என்றாலே, தான் திருப்பி செலுத்த வேண்டிய சர்வதேச கடனை அமெரிக்காவால் திருப்பி செலுத்த முடியாமல் போகும் என்று அர்த்தம் இல்லை.
ஆனால் பணவீக்கம், டாலரின் மதிப்பு குறைதல், அரசு உத்திரவாதப் பத்திரங்களின் விலை வீழ்ச்சி போன்றவற்றால் அமெரிக்க அரசு உத்திரவாதப் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டவர்கள் நஷ்டம் அடையலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது.
இந்த பின்னணியில்தான், தங்கத்தில் முதலீடு செய்வதென்பதில் வர்த்தகர்களின் கவனம் குவிகிறது என்றும், தங்கம் அதனால் தொடர்ந்து விலை ஏறிவருகிறது என்றும் சொல்லலாம்.
தற்சமயம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ஐம்பது டாலர்களை நெருங்கிவருகிறது.
வரும் காலங்களில் தங்கத்தின் விலை உயரும் வாய்ப்புதான் உள்ளது.இப்போதைக்கு விலை குறையும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.தங்கத்தின் விலையுடன் வெள்ளியும் போட்டி போடுவது  தொடரும் என்றேத் தெரிகிறது.பிரிட்டனில் உள்ள 14பேர் கொண்ட தங்கவிலை நிர்ணயக் குழு கையில்தான் உலக தங்க சந்தையின் அன்றாட விலையின் தலையெழுத்து உள்ளது.  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?