தீவிரவாதங்கள்,,,,

==========================================================================

பின்லேடனுக்காக 10 ஆண்டில் ரூ. 60 லட்சம் கோடி செலவு செய்த அமெரிக்கா.
 
2001-ம் ஆண்டு பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவில் தாக்குதல் நடத்தியதை அடுத்து பின்லேடனை பிடிக்க அமெரிக்க தீவிரம் காட்டியது.
 
பின்லேடன் ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கருதிய அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சோமாலியா உள்ளிட்ட நாடுகளிலும் அமெரிக்க படைகள் தேடுதல் பணியில் ஈடுபட்டன.  
 
பின்லேடனை பிடிக்க 10 ஆண்டுகளில் அமெரிக்க ரூ. 60 லட்சம் கோடி செலவிட்டு உள்ளது. இன்னும் தேடுதல் வேட்டை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டில் மேலும் ரூ. 80 லட்சம் கோடி வரை செலவாகும் என்று கணக்கிட்டு இருந்தனர்.
 
இப்போது பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதால் அமெரிக்காவுக்கு பெருமளவு பணம் மிச்சமாகி இருக்கிறது.   பின்லேடனை பிடிக்க நடத்திய வேட்டையில் அமெரிக்கா இதுவரை 6 ஆயிரம் வீரர்களை பலி கொடுத்து உள்ளது. 55 ஆயிரம் வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
 
அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நடத்திய போரினால் 20 ஆயிரம் பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 50 ஆயிரம் பேர் காயம் அடைந்து உள்ளனர். ஈராக்கில் நடந்த போரினால் 12 லட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். சோமாலியாவில் தேடுதல் வேட்டையின்போது நடந்த தாக்குதலில் 6,500 பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
 
2001-ல் அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவில் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இதுவரை 13 தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இதில் 1000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 
===========================================================================
இந்தியாவில் தாக்குதல் நடத்திய 6 முக்கிய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம்,,,?
பின்லேடன் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்டிருப்பதை அடுத்து பின்லேடனுக்கு இதுவரை பாகிஸ்தான் தான் அடைக்கலம் கொடுத்து இருப்பது உறுதியாகி உள்ளது.
 இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி உள்ள முக்கிய தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான்தான் அடைக்கலம் கொடுத்து உள்ளது.
அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அரசின் ராஜ உபசரிப்புடன் முக்கிய பிரமுகர்கள் போல பாகிஸ்தானில் வந்து கொண்டிருக்கிறார்கள்.  
பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துள்ள 6 முக்கிய தீவிரவாதிகள் விபரம்:-
1. தாவூத் இப்ராகிம்:- 1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி 257 பேர் பலியாக காரணமாக இருந்தவர். தற்போது கராச்சியில் வசிக்கும் அவரும் உலக அளவில் கடத்தல் தொழிலில் கொடிக்கட்டி பறக்கிறான்.
2. ஹபிஸ் சயீத்:- லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தலைவன். 2008-ம் ஆண்டு முமபையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு காரணமாக இருந்தவன்.
3. ஷகி உர் ரகுமான் லக்வி:- 2006-ம் ஆண்டு மும்பையில் ரெயில்களில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதலுக்கு காரணமாக இருந்தான்.
4. மசூத் ஆசார்:- ஜெய் சீ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன். 2001-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்தான்.
5. யூசுப் முசாம்மில்:- லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் இந்தியாவுக்கு எதிரான தாக்குதலுக்கான தலைவன். 2000-ம் ஆண்டில் காஷ்மீர் மாநிலம் சத்திசிவ்பூராவில் 34 சீக்கியர்களை கொல்ல காரணமாக இருந்தவன்.
6. ஷாஜித் மிர்:- 2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பாகிஸ்தானில் இருந்தபடி இயக்கியவன்.
 இவர்கள் அனைவரும் இப்போது பின் லேடன் போன்று பாதுகாப்புடன் பாகிஸ்தானில் தான் உள்ளனர்.
ஆனால் அதையும் அது மறுக்கும். அமெரிக்காவுடன் சேர்ந்து பிலேடனைத்தேடிக்கொண்டே, அவனுக்கு ராணுவ முகாம் அருகே  பங்களா கொடுத்து பாதுகாப்பும் கொடுத்த அனாதை ரட்சகன் அல்லவா பாக்,,
அமெரிக்காவிற்கே அல்வா கொடுத்து வந்தவர்கள் எதிரியாகக் கருதும்  நமக்கு  அல்வாவுடன்,பூவும்காதில் சுற்றிவிட்டுவிடுவார்களே.
============================================================================
  

  பெட்ரொல்,டீசல் விலையை உயர்த்த ரிசர்வ் வங்கி அரசுக்கு வலியுறுத்தல்.

பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

பெட்ரோலியப் பொருட்களின் சில்லறை விற்பனை விலைக்கும், அதன் தயாரிப்புச் செலவுக்கும் இடையே உள்ள அதிக வித்தியாசத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

2011-2012-ம் ஆண்டுக்கான நிதிக் கொள்கை குறித்தை அறிக்கையை வெளியிட்ட பின்னர், மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது ரிசர்வ் வங்கி ஆளுநர் டி. சுப்பா ராவ் இவ்வாறு தெரிவித்தார்.

"பெட்ரோலியப் பொருட்களின் சில்லறை விற்பனை விலையில் கட்டாயம் உயர்வு தேவை. அவ்வாறு செய்யத் தவறினால் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்." என்றார்.
நம் நாட்டின் சாபக்கேடே அநியாயத்திற்கு பொருளாதாரப்புலிகள் நிஜப்புலிகளைவிட அதிக எண்ணிக்கையில் உள்ளதுதான்.’எனக்கு ஒன்றும் தெரியாது’புகழ் மன்மோகஜி முதல் சேவைவரி சிதம்பரம் வரை.
இப்போது இவர்.
நாட்டில் விலைவாசி உயர்வைபற்றிக் கொஞ்சம் கூட கூச்ச உணர்வே இல்லையே இவர்களுக்கு.பெட்ரோலிய விலை ஏற்றத்தினால் இன்னும் விலைகள் உயருமே.அதை மாச சம்பளம் பெற்று வரும் பாமரன் எப்படி சமாளீப்பான்.என்ற குற்ற உணர்வும் இல்லையே. 
ஸ்பெச்ட்ரம்,காமன்வெல்த் என்று அடித்த நீங்கள் சமாளித்துக்கொள்வீர்கள்.ஏழைகள்?
    சுவிஸ் வங்கி கருப்புப்பணத்தை உடனே தேச உடமையேன சேருங்கள்.ஸ்பெக்ட்ரம் ஊழல் கைமாறியவர்கள் அளவுக்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களை அரசுடமையாக்குங்கள். ப்aனப்பற்றாக்குறை தானாக நீங்கிவிடும் இப்படி ஆலோசனைகளை சொல்லாமல்,செயல் படுத்தாமல் சுப்பாராவ் சொல்வது சரியானதல்ல.
நீங்கல் என்ன சொல்லுகிறீர்கள்... 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?