தாவூத்துக்கு ஒரு பாஸ்போர்ட்.......

பாஸ்போர்ட்டும்  கார்ப்பரேட்டும்
  பல்வேறு தேவைகளுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. தற்போது பாஸ்போர்ட் கோரி மனுச் செய் பவர்களிடம் ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூ லிக்கப்படுகிறது. ‘தட்கல்’ முறை என்ற பெய ரில் பெரும் தொகை கூடுதலாக வசூலிக்கப்படு கிறது.

பாஸ்போர்ட் விண்ணப்பம் மூலமாக கோடிக் கணக்கில் அரசுக்குப் பணம் கிடைக்கிறது. இதை வைத்து புதிய மையங்களைத் திறப்பதற் கும், கூடுதலான பணியாளர்களை நியமிப்பதற் கும் அரசு முன்வருவதில்லை. இருக்கிற அலு வலகங்களிலும் காலியாகும் பணியிடங்களை யும் நிரப்புவதில்லை. மாறாக செயற்கையாக நெருக்கடியை உண்டாக்கி தனியார் திமிங்கலங் களை மேலும் வளர்க்கும் வேலையில் அரசு முனைப்புக்காட்டி வருகிறது.
நாட்டில் தற்போது 37 பாஸ்போர்ட் மையங் கள் உள்ளன. புதிதாக 77 பகுதிகளில் பாஸ் போர்ட் சேவை மையங்களை அமைக்க மத்திய அயல்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த சேவை மையங்களை டாடா கன்சல்டன்சி நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசு தீர்மானித் துள்ளது. இதன் மூலம் தற்போது ஏற்பட்டுவரும் காலதாமதம் குறைக்கப்பட்டு, பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்றும் அரசுத் தரப்பில் கூறப் படுகிறது.

சிரமமின்றி பாஸ்போர்ட் கிடைக்க டாடா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களால்தான் முடி யும் என்று கூறுவதற்கு அரசு  வெட்கப்படவில்லை. பணமழை கொட்டும் பாஸ்போர்ட் மையங்களைக்கூட சரிவர நிர்வ கிக்க கையாலாகாத நிலைக்கு இந்த அரசு தள்ளப்பட்டுள்ளதா? ஆதாயம் இல்லாமல் இந்த அரசு எதையும் செய்யாது. அலைக்கற்றை ஒதுக் கீட்டை தனியார் நிறுவனங்களுக்கு முறை கேடாக ஒதுக்கீடு செய்ததில் நடந்த இமாலய ஊழல் சந்தி சிரித்து வருகிறது. பாஸ்போர்ட் வழங்கும் பணியை தனியாரிடம் தள்ளி விடுவதி லும் பல பேரங்கள் நடக்க வாய்ப்புண்டு.
பாஸ்போர்ட் வழங்கும் பணியை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைப்பது, நாட்டின் பாது காப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்
சிறையில் உள்ள கறுப்புப்பண தாதா ஹசன் அலிக்கு பாஸ்போர்ட் வழங்க பரிந்துரை செய்தது குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. பாஸ்போர்ட் வழங்குவதில் எவ்வளவு எச்சரிக்கை தேவைப்படுகிறது என்பதற்கு இது ஓர் உதார ணம். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பாஸ் போர்ட் வழங்கும் பணி ஒப்படைக்கப்பட்டால், கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் எளிதாக பறந்துவிட தனியார் நிறுவனங்கள் உதவக்கூடிய ஆபத்து உள்ளது.

நவீன தாராளமயச் சகதியில் சிக்கியுள்ள மத் திய ஆட்சியாளர்களிடம் தேசம் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்ற சிந்தனைதான் ஊறிக் கிடக்கிறது. முக்கியமான அரசுத்துறை நிறுவனங்களைச் சீரழித்து,கெடுத்து, அதன் மூலம் தனியார்  நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் உண்டாக்கி அதன் மூலம் லஞ்ச,ஊழல் செய்வதில்தான் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
டாடா நிறுவனம் ரொம்ப யோக்கியமானதல்ல.அலைக்கற்றையில் பெரும் முறைகேடுகள் செய்துள்ளது.நீரா நார்டியா மூலம் டாடா நிறுவனம் பல குறுக்கு வழிகளில் காரியம் சாதித்துள்ளது.
 அம்பானி,டாடா போன்ற  தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் தாவூத் முதல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வரை கணக்கு வழக்கின்றி பணம் பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டுகளை அள்ளி வழங்குவார்கள்.தேசப்பாதுகாப்பே கெலிக்குரியதாகி விடும். 
 இது போன்ற முக்கிய விடயங்களைக்கூட செய்ய முடியாமல் தனியாரிடம் கொடுத்துவிட்டு இந்த அரசு என்ன முக்கிய விடயத்தை செய்யப்போகிறது./?, இவர்கள் என்னதான் மனதில் நினைக்கிறார்கள்.தங்கள் ஆட்சிகாலத்திற்குள் இந்தியாவை ஒரு வழியாக்கிவிட வேண்டும் என்ற உன்னத நோக்கமாக இருக்குமோ?
============================================================================

தமிழோசைக்கு வயது 70
பிபிசி தமிழோசை
பிபிசி தமிழோசை
சர்வதேச ஒலிபரப்பு வரலாற்றில் தனி இடம் பிடித்திருக்கும் பிபிசி உலக சேவையின் பல்வேறு மொழிப்பிரிவுகளில், தெற்காசிய மொழிப்பிரிவுகளில் ஒன்றான, பிபிசி தமிழோசை தொடங்கப்பட்டு, இந்த செவ்வாய்கிழமையுடன் 70 ஆண்டுகள் பூர்த்தியாகிறது.

தமிழோசை தொடங்கப்பட்ட காலம் என்பது இரண்டாம் உலகப்போர் முற்றிய காலகட்டம், பின்னர் காலனித்துவத்தின் சரிவின் ஆரம்ப காலம் ஆகிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் அமைந்திருந்தது.
1941 மே மாதம் மூன்றாம் நாள் தனது ஒலிபரப்பைத் தொடங்கிய பிபிசி தமிழ்ப் பிரிவு, வாரம் ஒருமுறை இலங்கை மடல் என்ற பெயரில் தான் தனது ஒலிபரப்பை முதலில் நடத்தியது.
முதலில் வாரம் ஒரு முறை, பின்னர் வாரமிருமுறை இலங்கை மடலாக ஒலித்து வந்த தமிழோசை, அப்போதைய காலகட்டங்களில் சஞ்சிகை வடிவிலேயே வந்தது. தமிழ் இலக்கியம், நாடகம், கலை என செய்திகளைவிட பிற அம்சங்களை அதிகம் தாங்கி ஒலித்தது தமிழோசை.
அப்போதெல்லாம், தமிழோசையின் தயாரிப்பாளர்கள் சொந்தமாக வடித்த நாடகங்கள் தவிர ஆங்கில மற்றும் பிற மொழி நாடகங்களின் மொழியாக்கங்களும் தமிழோசையில் இடம்பெற்று வந்தன. குறிப்பாக, புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்கள் தமிழோசையின் ஆசிரியர் சங்கர் என்ற சங்கரமூர்த்தியால் தமிழாக்கம் செய்யப்பட்டு தமிழோசையில் அரங்கேறின.
இனப்பிரச்சினை
எண்பதுகளின் முற்பகுதியில் இலங்கையில் இனப்பிரச்சினை பெரிதாக வெடித்த போது , தமிழோசை அந்தப்பிரச்சினையினை செய்திகள் மற்றும் பேட்டிகள் மூலம் நேயர்களுக்கு விளக்க உதவியது.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அப்போதைய தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் லண்டன் வந்தபோது தமிழோசைக்கு பேட்டி அளித்தார்.
தமிழர் அரசியலில் மிதவாதம் பின்னுக்கு தள்ளப்பட்டு, ஆயுத அரசியலின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியபோது 1986ல் பெங்களூரில் நடந்த சார்க் மாநாட்டின் போது பெங்களூர் வந்திருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தமிழோசைக்கு பேட்டியளித்தார்.
இலங்கைப் பிரச்சினை மட்டுமல்லாது, தமிழ் நாட்டின் அரசியல் மற்றும் இந்திய அரசியலையும் பிரதிபலிக்கும் செய்திகளையும் தமிழோசை தொடர்ந்து ஒலிபரப்பியுள்ளது. 
 =========================================================================== 
 பாக் உளவுத்துறையின் வாக்குமூலம்

ஒஸாமா பின் லாடன்
ஒஸாமா பின் லாடன்
பாகிஸ்தானின் முக்கிய உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. வெளியிட்டுள்ள தகவல்களின்படி ஒஸாமா பின் லாடன் தங்கியிருந்த அந்த வீட்டில் தாக்குதல் நடந்த சமயத்தில் 17அல்லது 18 பேர் இருந்துள்ளனர்.
தாக்குதலின் பின்பு ஒஸாமா பின் லாடனின் உடலையும், உயிரோடு ஒருவரையும் அமெரிக்கர்கள் கொண்டு சென்றுள்ளனர். அவ்வாறு உயிரோடு கொண்டுசெல்லப்பட்டவர் பின் லாடனின் மகன்களில் ஒருவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த வீட்டு வளாகத்துக்குள்ளே நான்கு சடலங்கள் விட்டுச் செல்லப்பட்டிருந்தன. பின் லாடனின் வேறு ஒரு மகன், இரண்டு சகோதரர்கள் மற்றும் காவலர் ஒருவர் ஆகியோரின் சடலங்கள் அவை என்று கருதப்படுகிறது.
இத்தாக்குதலில் பின் லாடனின் மனைவி ஒருவரும், அவருடைய மகள் ஒருவரும், பின் லாடனின் குழந்தைகள் அல்லாத சிறார்கள் எனத் தெரியும் வேறு எட்டு அல்லது ஒன்பது பேரும் அவ்வீட்டில் இருந்துள்ளனர்.
உயிர் தப்பிய அப்பெண்கள் மற்றும் சிறார்களின் கைகள் கட்டப்பட்டிருந்தன என்றும், அமெரிக்கர்கள் வந்திருந்த ஹெலிகாப்டர்களில் ஒன்று பழுதாகி கைவிடப்பட வேண்டிய நிலை ஏற்படாது இருந்திருந்தால், இவர்களும் கொண்டுசெல்லப்பட்டிருப்பார்கள் என்றும் ஐ.எஸ்.ஐ. கூறுகிறது.
உயிர்தப்பிய பின்லாடனின் மனைவியிடம் ஐ.எஸ்.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் அவர் காயமடைந்து மயங்கி விழுந்தார் என்றும். பின்னர்தான் தனக்கு சுயநினைவு திரும்பியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் யெமென் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், சில மாதங்கள் முன்புதான் தான் அந்த இடத்துக்கு வந்ததாகவும் அவர் ஐ.எஸ்.ஐ.யிடம் கூறியுள்ளார்.
12 அல்லது 13 வயது மதிக்கத்தக்க பின் லாடனின் மகள், தனது தந்தை துப்பாக்கியால் சுடப்பட்டதை தான் பார்த்ததாகக் கூறி உறுதிசெய்துள்ளார்.
அந்த வீட்டில் விட்டுச் செல்லப்பட்ட சில ஆவணங்கள் சிலவற்றையும் ஐ.எஸ்.ஐ. கைப்பற்றியுள்ளது.
இந்தத் தாக்குதலில் மொத்தம் நான்கு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன அவற்றில் இரண்டுதான் அந்த வளாகத்தில் தரையிறங்கியிருந்தன.
உங்கள் வீடுகளின் விளக்குகளை அணைத்துவிடுங்கள் என்று பாகிஸ்தான் சிப்பாய்கள் சொல்லியதாக அபொட்டாபாத்தில் உள்ள பின் லாடன் பதுங்கியிருந்த வீட்டின் அருகே குடியிருந்தவர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல என்றும், இப்படி ஒரு தாக்குதல் நடக்கப்போகிறது என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் ஐ.எஸ்.ஐ. கூறுகிறது.
அவமானம்
தங்களுடைய மிகப் பெரிய இராணுவ மையம் ஒன்றிற்கு இவ்வளவு அருகில் வந்து ஒஸாமா தங்கியிருந்துள்ளார். அந்த கட்டிடத்தை இவர்கள் ஏன் கண்காணித்திருக்கவில்லை என்று ஐ.எஸ்.ஐ. அதிகாரி ஒருவரிடம் கேட்கப்பட்டபோது, 2003ல் இந்த வீடு கட்டப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில், அல்கைதா உறுப்பினர் அபு ஃபரஜ் அல் பிப்பி என்பவர் பதுங்கியிருக்கலாம் என்ற நோக்கில் அவ்வீட்டில் தாங்கள் தேடுதல் வேட்டை நடத்தியதாகவும், ஆனால் அதன் பின்னர் அவ்வீட்டைத் தாங்கள் கண்காணித்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இடத்தைக் கண்டுபிடிக்காமல் விட்டது தமக்கு பெரிய சங்கடத்தையும் அவமானத்தையும் தந்துள்ளது என ஐ.எஸ்.ஐ. கூறுகிறது.
தாங்கள் கோட்டை விட்டு விட்டோம் என்று ஐ.எஸ்.ஐ. இவ்வாறு வெளிப்படையாக ஒப்புக்கொள்வது மிகவும் அரிதான விஷயம்.
 ===============================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?