’நச்சுக் -கோலா’

கோலா பானங்களை அதிகம் எடுத்துக் கொள்வதால், உடலில் பொட்டாசியம் சத்து கடுமையாக குறைகிறது என்றும், எலும்பு தே‌ய்மானமும் ஏற்படுகிறது என்றும் கிரீஸில் உள்ள லோவானிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இந்த ஆய்வுபற்றிய அறிக்கை, 'இன்டெர்னேஷனல் ஜர்னல் ஆஃப் கிளினிகல் பிராக்டீஸ்' (IJCP) என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு இரண்டு புட்டிகள் கோலா பானங்களை அருந்தினால் பல் தொடர்பான நோய் ஏற்படுவதாகவும், எலும்புத் தேய்மானம் அதிகரிப்பதாகவும், மேலும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் இருதயம் தொடர்பான பிரச்சனைகளும் சர்க்கரை வியாதியும் ஏற்படும் அபாயமும் உள்ளது என்று ஆய்வில் ஈடுபட்ட மோசஸ் எலிசாஃப் கூறுகிறார்.

மேலும் அதிகமாக கோலா பானங்களை அருந்துவதால் உடலில் உள்ள பொட்டாசியம் அளவு குறைந்து தசை, எலும்பு தொடர்பான செயல்களில் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்று எச்சரிக்கை செய்கிறார் அவர்.

நாளொன்றுக்கு இரண்டு முதல் 10 புட்டிகள் கோலா அருந்தும் நபர்களை ஆய்வு செய்துள்ளனர். இதில் இரண்டு கருத்தரித்த பெண்களும் உண்டு. இதில் 21 வயது நிரம்பிய பெண்மணி நாளொன்றுக்கு 3 புட்டிகள் வரை கோலா அருந்துவது தெரிய வந்துள்ளது. இதனால் அவருக்கு அடிக்கடி வாந்தி, கடுமையான அசதி, பசியின்மை போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னொரு நோயாளி 10 மாதங்களில் நாளொன்றுக்கு 7 புட்டிகள் கோலா அருந்தி வந்தவர். இதனால் அவரது தசைகளில் தேய்மானம் தொடர்ந்து நீடித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கோலா அருந்துவதை நிறுத்தியவுடன் உடல் நிலை தேறி வருகின்றனர். இந்த கருத்தரித்த பெண்மணிகளுக்கும் ஊசி மூலம் பொட்டாசியம் ஏற்றப்பட்டு உடல் நிலை தேரியதாக ஆய்வு தெரிவிக்கிறது.

தசை, நரம்புகள், இருதயம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் பொட்டாசியத்தின் பங்கு அதிகம். இதன் அளவு குறைந்து கொண்டே வந்தால் வாதம், சீரற்ற இருதய துடிப்பு, ஏன் மரணம் கூட ஏற்படலாம் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

பொட்டாசியம் குறைபாடு காஃபைன், சர்க்கரை ஆகியவற்றால் கூட ஏற்படும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மென்பானங்கள் முற்றிலும் உற்சாகத்தை ஏற்படுத்த ரசாயனக் கலவையினாலே உருவாக்கப்படுகிறது.
அதிலும் கோக-கோலா,பெப்சி கோலா பற்றி பலமுறை எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.
 ஆனாலும் விளம்பர வெளிச்சத்திலும் பிரபல நடிகர்கள்,கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பணத்துக்காக போடும் ஆட்டத்திலும் விற்றுத்தீர்கிறது. நம் நட்சத்திரங்கள் கொஞ்சம் மக்கள் நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும்.இது போன்ற மென் பானம்,மதுவகை விளம்பரங்களில்நடிக்கக் கூடாது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?