சமச்சீர் ஆட்சி தேவை,,

சமச்சீர்கல்வி   
நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் சமச்சீர் கல்வி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் படியாக அமையவில்லை. தற்போதைய சமச்சீர் கல்வித்திட்டம் ஒட்டுமொத்த கல்வித்தரத்தை உயர்த்த வழி செய்யாது . எனவே சமச்சீர் கல்வி வேண்டும் என்றும் ஆனால் அதே நேரத்தில் எவ்வாறு கல்வித்தரத்தை உயர்த்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்படுகிறது. நடப்பாண்டு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது என்றும் , இந்த கல்வி ஆண்டில் பழைய பாடத்திட்டங்களையே பின்பற்றலாம் என்றும், புத்தகம் அச்சிட கால அவகாசம் தேவைப்படுவதால் ஜூன் 1 ம் தேதி முதல் துவங்கவிருந்த பள்ளியை வரும் 15 ம் தேதி திறக்கலாம் என்றும் உத்தரவிடப்படுகிறது.’
நான் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல்தான் தலைமை செயலகத்தை மாற்றுகிறேன்.ஜெயலலிதா கூறியது.
 அரசியல் மட்டுமின்றி சொந்த காழ்ப்புணர்ச்சியும் ஜெயலலிதாவுக்கு அதிகம் உண்டு என்பது கடந்த காலங்களிலேயே அனைவரும் அறிந்த ஒன்று.அ.தி.மு.க,வினரே அவர் காழ்ப்புணர்ச்சியில்லாதவர் என ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
 அதெல்லாம் இப்போது சரி.சில ஆண்டுகள் ஆய்வு நடத்தி .500 கோடிக்கு நூல்களை அச்சிட்டு ,அதி எல்லாப் பள்ளிகளுக்கும் அனுப்பி பட்டுவாடா செய்யும் நேரம் இப்படி ஒரு ஆணை போட்டு ஒரு மாத கல்வியையே சீரழிப்பது.ஜெ,,இன்னும் தனது குணத்தை மாற்றவில்லை என்றே தெரிகிறது.1000கோடி செலவினால் ஆன தலைமைச்செயலகத்தை புறக்கணித்து பழைய இடம் செல்லும்  மாற்றமே தவறு.அதுவும் காழ்ப்புணர்ச்சிதானே? ஜெயலலிதாதானே பழைய செயலகம் மோசமான நிலையில் உள்ளது,புதிதாகக் கட்டப்போகிறேன்.என்றுகூறி ராணிமேரிக் கல்லூரியை இடிக்கச் சென்றார்.அப்படிப்பட்டவர் புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச்செயலகத்தை மாற்ற உண்மையானக் காரணம்.அது கருணாநிதியால் கட்டப்பட்டது என்பதுதானே?
 அடுத்து சமச்சீர் கல்வி புத்தகங்கள் விணாக்குவது .அதுவும் கருணாநிதிதான் காரணம்.அவர் கொண்டுவந்ததை விடுத்து இவர் தனியே அடுத்தாண்டு கொண்டு வருவாராம்.ஏன் இப்போதுள்ள புத்தகத்தில் உள்ள கருணாநிதி பற்றிய பக்கங்களை நீக்கி  விட்டு பாடங்களை நடத்தலாமே.அரசு செலவிட்ட500கோடி தண்டமாக்கலாமா/?
இந்த ஆண்டுக்கான பழைய முறைப் புத்தகம் இனி அச்சிட்டு வந்து பாடம் துவக்க வீணான காலம்,பணம் செலவு ஏன் இவ்வள வு காழ்ப்புணர்வு? இதனால் இன்னும் எத்தனை குளறுபடிகள் வரவிருக்கின்றனவோ? ,மக்கள்தான் அனைத்தையும் தாங்க வேண்டும் .தாங்குவார்கள் .எதையும் தாங்கும் இதயம் இருக்கிறது.அது மட்டுமல்ல உங்களைத் தேர்ந்தெடுத்ததற்கும் சேர்த்து தாங்கத்தானே வேண்டும்.கொஞ்சம் பழையவற்றை திரும்பிப் பார்த்து ஆட்சி நடத்துங்கள்.
============================================================== ==========
ஒன்று தெரியாத மகள்,,,,?

கனிமொழி
'கனிமொழி அதை விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என ஒப்புக்கொண்ட குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாபமோ, நஷ்டமோ அந்த இரண்டில் ஒன்றுக்கு பொறுப்பேற்பது பொதுவான விஷயம். ஆனால், அந்த நிறுவனத்தின் ஒவ்வொருநாள் நடவடிக்கைக்கும், அவர்கள் பொறுப்பாவதில்லை.
டில்லி சி.பி.ஐ., நீதிமன்றத்தில், கனிமொழிக்காக வாதாடிய பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஒரு நிறுவனத்தில் நடைபெறுகிற வரவு, செலவு – கொடுக்கல், வாங்கல் இவற்றில் எல்லாம் அந்த நிர்வாகத்தின் பங்குதாரர்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை என, தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இருந்தும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமாரையும், என் மகள் கனிமொழியையும் ஜாமினில் விட மறுத்து, சிறைக்கு அனுப்பியுள்ளனர். என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். ஆயினும், நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், நம் இரு வண்ணக்கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி, புல் முளைத்த இடமாகிட வேண்டும் என்றும்; அதுவும் தர்ப்பைப்புல் முளைத்த இடமாக மாற வேண்டுமென, குமரி முனையிலிருந்து இமயம் கொடுமுடி வரையிலும் உள்ளவர்கள் தவம் கிடக்கின்றனர்.’
      -இவை கலைஞர் கருணாநிதி கனி மொழி கைதானதை அடுத்து எழுதிய கடிதத்தில் இருந்து எடுத்தவை. 
=====================================================================
இம்மாம் பெரிய வீடு என்னாத்துக்கு?
ரிலையன்ஸ் இண்டஸ்ரி குழுமத்தின் தலைவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி கட்டியுள்ள பில்லியன் டாலர் பெறுமதியான ஆடம்பர பங்களா தனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
ரத்தன் டாடா
ஏன் இவ்வாறான ஆடம்பர பங்களாக்களை கட்டுகிறார்கள் என எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அங்கு வசிப்பவர், சுற்றியிருப்பவர்களின் நிலையையும் பார்வையிட வேண்டும். அங்கிருந்து கொண்டு அவரால் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியுமா? என டாடா கேள்வி எழுப்பியுள்ளார்.

லண்டனின் த டைம்ஸ் பத்திரிகைக்கு நேற்று சனிக்கிழமை அவர் வழங்கிய செவியின் போதே இதனை தெரிவித்துள்ளார். முகேஷ் அம்பானி மும்பையில் கட்டியுள்ள 27 மாடி ஆடம்பர வீடான Antilla பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும்
முகேஷ் அம்பானி
இந்தியர்களுக்கு இப்போது தேவையானது தங்களது இன்னல்களை கட்டுப்படுத்துவதற்கு வழி காட்டும் ஒரு மிகச்சிறந்த ஆரோக்கியமான ஒன்று.
எம்மை போன்றவர்கள், இதற்காக கொஞ்சமேனும் அமைதியான நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.
இப்படியான ஆடம்பர வீடுகள், ஏழ்மை : பணக்கார வித்தியசத்தை அப்படியே படம்பிடித்து காட்டுவதுடன், அவர்களது இன்னல்களை மேலும் அதிகரிக்க செய்துவிடுகிறது என்றார். மேலும்
அம்பானிய்ன் மும்பை பங்களா (Antilla)
இங்கிலாந்து அதிபராக கெமரூன் இருப்பதும், அமெரிக்க அதிபாரக ஒபாமா இருப்பதும் இந்தியாவை பொருத்தவரை அதிஷ்டமான விடயம். குறித்த இரு பிரதமர்களும் திறந்தவெளி யோசனைகளை கொண்டிருப்பதுடன், இந்தியா எனும் நிலம், தமக்கு சில வாய்ப்புக்களை தரக்கூடியது என நம்புகிறார்கள். இங்கிலாந்துடன், இந்தியாவுக்கு பாரம்பரிய தொடர்பு இருப்பதால், டேவிட்டும் நெருங்கிய உறவை பேணுவார் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூனின் வர்த்தக ஆலோசனை குழுவில் ஒருவராக இருக்கும் ரத்தன் டாடா, இந்திய-இங்கிலாந்து CEO Forum இன் co-chairmen ஆகவும் இருக்கிறார். இங்கிலாந்து அரசுக்கு வெளியிலிருந்து கொண்டு, மூன்று மாதத்திற்கு ஒரு மூறை, பிரிட்டிஷ் அதிபர் டேவிட் கெமரூனுடன், இரண்டு தனிப்பட்ட கூட்டங்களில் கலந்துகொள்ளும் ஒரே மனிதராக ரத்தன் டாடா திகழ்வதும் குறிப்பிடத்தக்கது.
                                                                                                                          நன்றி:4தமிழ் மீடியா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?