தமிழருக்கு எதிரான வெளியுறவு கொள்கையாளர்கள்,


இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி இனப்பிரச்சனைக்கு தீர்வு- சிவசங்கரமேனன்.ஏன் சென்றார் இலங்கைக்கு.?
 
இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரடங்கிய இந்தியக் குழு அதிபர் ராஜபக்சவை சனிக்கிழமை சந்தித்து பேசினர்.
 
        “இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதற்காக 1987-ம் ஆண்டே 13-வது அரசியல் சாசன சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி ஈழத் தமிழர் பகுதிக்கு சுய அதிகாரம் அளிப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளதாகத் தெரிகிறது”என்று  சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர் மேனன் கூறினார். 
 
இந்திய-இலங்கை அமைதி உடன்பாட்டிலும் இக்கருத்து எட்டப்பட்டது. ஆனால் தனித் த மிழ் ஈழம் என்ற கோரிக்கையால் இது கைவிடப்பட்டது. 
 
இப்போது முந்தைய உடன்படிக்கையை மேம்படுத்தி அமல்படுத்தும் என நம்புவதாக அவர் கூறினார். ஜனாதிபதி 
ராஜபக்சவுடன் இரண்டு மணி நேரம் இக்குழுவினர் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேச்சு நடத்தினர்.  முன்னதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிசையும் இந்தியக் குழுவினர் சந்தித்துப் பேசினர். 
 
இவர்கள் தவிர தமிழ்த் தலைவர்களையும் இவர்கள் சந்தித்துப் பேசினர். தமிழக சட்டப் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில் மத்திய அரசு சார்பில் இக்குழுவினர் இலங்கை சென்று பேச்சு நடத்தியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. 
 
 ஜெயலலிதா குறிப்பிட்ட சில விஷயங்கள் குறித்து அதிபர் ராஜபக்சவுடன் விவாதிக்கவில்லை என்று ம் கூறினார். 
 
இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரையும் குழுவினர் சந்தித்துப் பேசினர். அப்போது இரு நாட்டு மீனவர்கள் விஷயம் விவாதிக்கப்பட்டதாக மேனன் தெரிவித்தார். இரு நாட்டு மீனவர் சங்கங்களுடன் பேச்சு நடத்தி இப்பிரச்னையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என ஆலோசிக்கப்பட்டது. 
 
இலங்கை போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
     ஆக மொத்தத்தில் சிவசங்கர மேனன் குழு வினர் என்ன காரணத்திற்கு இலங்கை சென்றனர்? என்றே தெரியவில்லை.
    1987ம் ஆண்டு ஒப்பந்தப்படி ஈழத்தமிழர்களுக்கு உரிமைகளை அண்ணன் ராஜபக்‌ஷே வழங்குவாராம்.தம்பி சிவசங்கரன் கூறுகிறார்.
    சரி அதற்கான ஒப்பந்தத்திலாவது கையொப்பம் வாங்கினாரா?இல்லை.
  ராஜபக்‌ஷே சொன்னதை அவரின் கொள்கைபரப்பச்செயலாளர்போல் மேனன் கூறிவிட்டு டெல்லி சென்று விட்டார்.
      இலங் கை தமிழ்மக்கள் மீதான உரிமை மீறல்,அவர்களை மீளக் குடியேற்றுதல் பற்றியும் பேசவில்லை.தமிழக சட்டமன்றத்தீர்மானம் அதனால் ஏற்படும் நெருக்கடி பற்ரியும் பேச வில்லை.
   பின் இந்த கேரள மாபியாக் கும்பல் இலங்கை சென்றது ஏன்? ஒரு நார்வே,அமெரிக்கா நாடுகளுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட அண்டை நாடும் தமிழ்மக்களின் வம்சாவழியினரும் இருக்கும் நாட்டின் மீது இல்லை என்றால் இந்தியாவில் தமிழன் என்று இங்கு இருப்பது எவ்வளவு  கேவலம்.
    பாலித்தீவில் வட இந்திய வம்சாவழி பாலிக்குடிமகன் பிரதமரில் இருந்து இறக்கப்பட்டதும் எப்படியெல்லாம் இந்திய அரசு துடித்தது.ஆடதரவுக்கரம் நீட்டியது.பாலி பழங்குடித்தமிழர்கள் தலைவர்களை எச்சரித்தது.

     ஆனால் தமிழன் எனும் போது அந்த துடிப்பு மண்ணோடு மண்ணாகிவிட்டதா?   அது மட்டிமில்லை இப்போதும் உள்நாட்டுப் போரில் சிக்கித்தவிக்கும் தமிழக நர்சுகளை மீட்க அங்குள்ள இந்திய தூதரகம் ஒன்றும் செய்யவில்லை என செய்திகள் வருகின்றன.
    எப்படியோ இந்த சிவசங்கர மேனன், நிருபமா ராவ் கும்பல் இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பவர்களாக இருக்கும் வரை தமிழன் உலக அளவில் தீண்டத்தகாதவந்தான்.
================================================ அமெரிக்காவை அழிப்போம்


  *  பின்லேடன் உயிருடன் இருந்தபோதே அவருக்கு எதிராக செயல்பட்டவராக வர்ணிக்கப்பட்டவர். நீண்ட காலத்திற்கு முன்பே இவர் பின்லேடனை விட்டுப் பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் கூறின. இவர் என்ன ஆனார் என்பதும் மர்மமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இவர் உயிருடன் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஒரு வீடியோ மூலம் தனது பேச்சை வெளியிட்டுள்ளார் ஜவாஹிரி. 28 நிமிடம் அந்த வீடியோவில் பேசியுள்ளார் ஜவாஹிரி.
                                                                                     

வெள்ளை நிறத் தலைப்பாகையுடன், முதுகுக்குப் பின்னால் சுவரில் பொருத்தப்பட்ட துப்பாக்கியின் பின்னணியில் பேசினார் ஜவாஹிரி.

வீடியோவில் ஜவாஹிரி கூறுகையில், இன்று, கடவுளின் அருளால், அமெரிக்காவுக்கு எதிராக ஒரு தனி மனிதரோ அல்லது குழுவோ அல்லது பிரிவோ எதிரியாக இல்லை. மாறாக ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகும் இன்று அமெரிக்காவுக்கு எதிரியாக மாறியுள்ளது. மிகப் பெரிய புரட்சியை அமெரிக்கா சந்தித்துக் கொண்டுள்ளது. ஜிஹாத் விஸ்வரூபத்தை எட்டியுள்ளது.

ஒசாமா பின்லேடன் இன்று ஒரு தியாகியாக கடவுளை அடைந்துள்ளார். அமெரிக்க மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கி பெருமைக்குரியவர் பின்லேடன். உயிருடன் இருந்தபோதும் சரி, மரணத்திற்குப் பின்னரும் சரி, அவர் அமெரிக்க மக்களை பீதிக்குள்ளாக்கிபடிதான் உள்ளார்.

டுனிஷியா, எகிப்து, லிபியா, ஏமன், சிரியா நாடுகளில் நடந்ததைப் பார்த்திருப்பீர்கள். அதேபோன்ற நிலை விரைவில் அமெரிக்காவுக்கும் வரும். சர்வதேச முஸ்லீ்ம் சமுதாயம் ஒருங்கிணைந்து அமெரிக்காவை அழித்தொழிக்கும்.

அனைத்து இடங்களிலும் எங்களது சகோதரர்கள் செயல்பட்டு வருகிறார்கள். எங்களது கரங்கள் உங்களை நோக்கி, உங்களது இதயங்களை நோக்கி நீண்டு வருகிறது. எனவே அனைவரும் இணைந்து செயல்பட்டு அல்லாவின் உலகத்தை நிலை நிறுத்துவோம்.

பின்லேடனின் கொல்லப்பட்ட பின்னர் அவரது புகைப்படங்களை வெளியிட அமெரிக்கா பயப்படுகிறது. காரணம், இஸ்லாமிய மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடுமே என்றஅச்சம்தான் அதற்குக் காரணம். நாம் செய்ய நினைத்ததை பின்லேடன் சாதித்து விட்டார். அவரது செய்தி அனைவரையும் வந்து சேர்ந்துள்ளது.

பின்லேடனின் மரணத்திற்கு பாகிஸ்தான் ராணுவத்தினரும், அரசியல்வாதிகளும் முக்கியக் காரணமாவர்.” இந்த துரோகிகளுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் பொங்கி எழ வேண்டும். ஊழல் கரை படிந்த பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு எதிராக கொதித்து எழ வேண்டும். அமெரிக்காவின் அடிமை நாடாக மாறியுள்ள பாகிஸ்தானை மீட்க வேண்டும். அல்லது அவர்கள் உங்களைக் கொன்று அழித்து விடுவார்கள்” என்றார் ஜவாஹிரி.
==========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?