காலையில் சூரியன் உதித்துவிடுமே,,,,,

ஆடு பார்க்கலாம் ஆடு

 மகாத்மா காந்தி நினைவிடத்தில், பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் நடனம் ஆடியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "எதிர்க்கட்சி தலைவர் பதவியை, சுஷ்மா ராஜினாமா செய்ய வேண்டும்' என, காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
டில்லியில் உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ்வையும், அவரது ஆதரவாளர்களையும், டில்லி போலீசார், கட்டாயப்படுத்தி வெளியேற்றியதோடு, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், பா.ஜ., சார்பில் நேற்று முன்தினம் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்ட, கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து, நடனமாடினார். இந்த காட்சி, "டிவி'யில் ஒளிபரப்பானது.
        இதில் என்ன தப்பு இருக்கிறது? தொண்டர்கள் களைத்துப் போனதால் உற்சாகம் ஏற்படுத்த குத்தாட்டம் போட்டுள்ளார்.
 மார்க்கெட் போன நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது.அரசியலில் இருப்பவர்கள் நடிக்க ஒத்திகை பார்ப்பது குற்றமா?
         இதில் காங்கிரசாருக்கு என்ன பொறாமை.சோனியாவால் முடியாததை சுஷ்மா செய்வதால் இருக்குமோ.
       வயதானவர் ஆட்டம் என்பதாலா.
         இன்னும் அத்வானி,ராம்தேவ் ஆட்டம் எல்லாம் இருக்கு.இதுக்கே ஆத்திரப்பட்டால் எப்படிங்க?
          காஷ்மீர் முதல்வர் என்ன சொல்லுகிறார் பார்க்கலாமா?
 காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, இணையதளத்தில்
”சுஷ்மா நடனம் ஆடியதை "டிவி'யில் பார்த்தேன். சுஷ்மாவை விட, என் தந்தையும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா, நன்றாக நடனம் ஆடுவார். விருந்து நிகழ்ச்சிகளில், என் தந்தை நடனமாடுவது வழக்கம். போராட்டங்களின் போது நடனம் ஆடுவது என்பது, தற்போது நடைமுறையாகி விட்து.”
     என எழுதியுள்ளார்.
==========================================================================

சீன-இங்கிலாந்து ஒவிய நிறுவனங்களின் கண்காட்சியில் இடம் பெற்ற ஒவியங்களில் ஒன்று.
 ===========================================================================
                                                                               
  
 ""தி.மு.க., இனி ஆட்சிக்கு வந்து, சட்ட மேலவையை கொண்டுவர வாய்ப்பே இல்லை. அஸ்தமனமான சூரியன் அஸ்தமனமானது தான்; இனி உதிக்கவே உதிக்காது,''
சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா  பேச்சு
    இதுபோன்ற பேச்சுக்களை இப்போது முக்கியத்துவம் கொடுத்து,அல்லது உண்மையாகும் என்று நினக்க முடியாது.
 இதே போன்றுதான் ஒராண்டுக்கு முன் அடுக்கடுக்காக தி.மு.க,கூட்டணி வெற்றிபெற்று வந்தபோது அஞ்சாநெஞ்சன் அழகிரி “இனி அ.தி.மு.க ,கட்சியே
 இருக்காது.அது அடுத்த தேர்தலில் காணாமல் போய் விடும் என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறினார்.ஆனால் நடந்தது என்ன என்று ஜெயலலிதாவிற்கே
நன்றாகத்தெரியும்.
      இன்று ஒட்டு மொத்தமாகக் ஜெயலலிதாவிற்கு அள்ளி கொடுத்த மக்கள்தான் முன்பு 40 க்கு40 என ஜெ,,,விற்கு நாமம் போட்டவர்கள்.அதை அம்மா கொஞ்சம் நினைவில் கொடு வருவது நல்லது.
மக்கள்தான் இங்கு எல்லாம்.இலையை கிள்ளி எறிவது முதல் சூரியனை மறைப்பது வரை. 
   அம்மா எல்லாம் சும்மாதான்.மஞ்சள் துண்டை காவியாக்கி தலையில் போடச் செய்வது பாமரன்தான். அதையே பொன்னாடையாக்கி சூட்டி மகிழ்பவனும் அவன்தான்.
      அறுதி பெருபாண்மை கிடைத்ததை ஜெயலலிதா நல்ல முறையில் பயன் படுத்தி மக்கள் நலன் காக்க வேண்டும்.அதை விட்டு இனிநாம்தான்.மக்கள் சூரியனை அஸ்தமிக்க வைத்துவிட்டர்கள் .இனி எழாது என 2005 ஆண்டுகாலத்தை மீண்டும் கொண்டுவந்தால் நடப்பது என்னவென்று நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.
   சூரியன் மீண்டும் விடியற்காலையில் உதித்துவிடும்.
காரணம் சூரியன் ஒரெடியாக மறைந்துவிட்டால் பூமியே தனது சுழற்சியை நிறுத்திவிடும்.
       இதைத்தவிர இன்னொரு அரசியல் நிபுணர்களின் கருத்தையும் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொணர்கிறோம்.
       “தி.மு.க,விற்கு எதிர்ப்பான மனநிலையில்தான் ஒட்டுமொத்த வாக்குகளும் 
 அ.தி.மு.க அணிக்கு விழுந்துள்ளது.
அதனால்தான் கூட்டணியில் தி.மு.க.வையும் காங்கிரசையும் எதிர்த்து நின்ற அனைவருக்கும்வாக்குகள் மொத்தமாக விழுந்துள்ளது. இது விஜய்காந்த், கம்யூனிஸ்ட் போன்ற அனைவரும் வெல்ல முடிந்தது. 
  தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளுக்குக் காரணம்:
       1. காங்கிரசின் மத்திய அரசு அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்துவது. 
           விலைவாசி உயர்வை தடுக்காமல் அதற்கு ஆதரவாக பேசியது.
      2.இலங்கை மக்கள் படுகொலையில் சோனியா அரசு நேரடியாக தொடர்பிருந்தது. மீனவர் படு கொலையையும் கண்டு கொள்ளாமல் இருந்தது. அதையும் தட்டிக்கேட்காமல் கலைஞர் கூட்டணிதர்மம் பேசிக்கொண்டு திரிந்தது.
         3.அலைக்கற்றை ஊழல் .அதில் இருந்து தப்பிக்க கலைஞர் டெல்லிக்காவடி எடுத்தது.
          -இவைகள் மக்கள் கோவத்தை காங்கிரசுக்கு எதிராக திருப்பிவிட்டது. 
      இடையில் கூட்டணி முறிந்ததுபோல் இருந்த போது தி.மு.க ,தனியாகப் போட்டியிட்டால் கூட இத்தனை மோசமான தோல்வி  தி.மு.க,விற்கு இருந்திருக்காதாம்.
      தி.மு.க.வை விட காங்கிரஸ் மீதுதான் தமிழக மக்கள் கோபம் அதிகமாக இருந்ததாம்.அதற்கு அடிமனதில் ஈழப்பிரச்சினையின் தாக்கம்தான் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
         முதல்வர் ஜெயலலிதா இவைகளை கவனத்தில் கொண்டு ஆட்சி செய்வது நல்லது.எப்படி பட்டவர் என்றாலும் 5ஆண்டுகள் முடிவில் சில எதிர்ப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுவது இயற்கையே,
         இப்போதே இடதுசாரிகள் ஆட்சியின் சமச்சீர் கல்வி, பள்ளிக்கட்டணக் கொள்ளை பற்றி போராட்டம் ஆரம்பித்துவிட்டனர்.
ஜெயலலிதா இதையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?