ஊழலுக்கு எதிரான போராட்டம் இப்படியா?





  
புதுதில்லியில் நடை பெற்ற மிகவும் விசித்திரமான நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து ‘கேலிக்கூத்து’ என் பதா, ‘அபத்தம்’ என்பதா, அல்லது ‘அற் பம் என நினைப்பதா’? எப்படிக் கூறினா லும் அந்தப் பைத்தியக்காரத்தனமான நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து சித்தரிப்ப தற்குச் சரியான வார்த்தைகள் கிடைக்க வில்லை. தில்லி ராம்லீலா மைதானத் தில் ஊழல் எதிர்ப்புக் கிளர்ச்சிக்காக உட் கார்ந்திருந்த ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நள்ளிரவில் போலீசார் திடீரென்று பாய்ந்து கைது செய்திருப்பதா னது ஐ.மு.கூட்டணி அரசாங்கம், அந்த யோகா ஆசாமியுடன் தொடர்ந்து மேற் கொண்டு வந்த பல்வேறு கபடத்தன மான சமரசங்களின் உச்சநிலையாகும். கிளர்ச்சியில் பங்கேற்றிருந்த பல அப் பாவிகளைத் தாக்கிக் காயப்படுத்தி யிருக்கும் கண்டிக்கத்தக்க போலீஸ் நட வடிக்கையானது மிகவும் அருவருப்பான தும் அநாகரீகமானதும் வேதனையளிக் கக் கூடியதுமாகும்.

இத்தகைய நிகழ்ச்சிப்போக்குகளின் மூலம் பல அம்சங்கள் முன்னுக்கு வந் திருக்கின்றன. இவை குறித்து ஆழமான வகையில் பரிசீலனை செய்யப்பட வேண் டும். ஆயினும், உயர் அமைப்புகளில் நில வும் ஊழலுக்கு எதிரான கிளர்ச்சிகளில் மாபெரும் அளவில் மக்கள் பங்கேற்பது என்பதும் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிற கருப்புப் பணத்தை நம் நாட்டிற்குக் கொண்டுவருவதில் அர சாங்கம் மிகவும் நேர்மையற்ற முறையில் நடந்து கொள்வதும் மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராகக் கடும் அதிருப் தியை பெருமளவில் உருவாக்கியிருக் கிறது. பிரதமர், போலீஸ் நடவடிக்கையை “துரதிர்ஷ்டவசமானது” என்று குறிப்பிட் டிருக்கிறார். ஆனாலும் “வேறு வழியில் லை” என்றும் திருவாய் மலர்ந்திருக் கிறார். இவ்வாறு நூற்றுக்கணக்கான அப் பாவி மக்களுக்கு எதிராக நடத்தப்பட் டுள்ள போலீஸ் நடவடிக்கையை நியாயப் படுத்தி, கிளர்ச்சி செய்வதற்கான அவர்க ளின் ஜனநாயக உரிமையை ஒழித்துக் கட்டியிருப்பதானது ஜனநாயகத்தில் முற்றிலுமாக ஏற்கப்பட முடியாததாகும்.

அரசாங்கத்தின் சொந்த நடவடிக்கை கள்தான் இத்தகைய மோசமான நிலை மையைக் கொண்டு வந்திருக்கின்றன. இன்றைய தினம் காங்கிரசின் தலைவர் கள், ராம்தேவ் தங்களுக்குத் ‘துரோகம்’ செய்துவிட்டார் என்றும், தங்களிடம் இரண்டகமாக நடந்துகொண்டுவிட்டார் என்றும் சித்தரித்துக் கொண்டிருக்கிறார் கள். அரசாங்கம் தன்னுடைய மூத்த அமைச்சர்கள் நான்கு பேரையும் கேபி னட் செயலாளர் ஒருவரையும் ராம்தேவு டன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் காண அனுப்பியுள்ள சூழ்நிலையில், இத் தகைய மதிப்பீடுகள் தெளிவற்றவை களாகத் தெரியவில்லையா? இன்றைய தினம் அரசாங்கத்தின் தரப்பிலிருந்து ராம்தேவின் வர்த்தக பேரங்கள் குறித்து பல்வேறு பிரச்சனைகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்தச் செல்லும் சம யங்களில் எல்லாம் அரசாங்கத்திற்கு இவை குறித்து எதுவும் தெரியாமல்தான் இருந்ததா? 2006க்கும் 2011க்கும் இடை யிலான காலங்களில் அவரது வர்த்தக சாம்ராஜ்யம் 34 கார்ப்பரேட் கம்பெனி களுடன் விரிந்து பரவி இருக்கிறது. இது கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத் தின் கோப்புகளில் பதிவு செய்யப்பட் டுள்ள உண்மைகளாகும். ராம்தேவால் இயக்கப்படும் இரு அறக் கட்டளைகளி லிருந்து 2009-10ஆம் ஆண்டின் வர்த் தகத்தின் மதிப்பு  மட்டும் ஆயி ரத்து நூறு கோடி ரூபாய்க்கும் மேலாகும். அவரது சீடர் ஒருவரால் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு தீவு ஸ்காட்லாந்தில் அவருக்குச் சொந்தமாக இருக்கிறது. அவர் ஐந்து நட்சத்திர அந்தஸ்துடன் அமைந்துள்ள டீலக்ஸ் குளிர்சாதன அரங்குகளில் யோகா முகாம்களை நடத்தி வருகிறார். ஊழலுக்கு எதிராகப் போராடப் போகிறோம் என்று கூறிக் கொண்டு, ராம்லீலா மைதானத்தில் அவர்கள் அமைத்த கூடாரம் (டெண்ட்) அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்தது. ஹரித்துவாரில் இன்றைய தினம் அவரது ஆசிரமம் அமைந்துள்ள நிலம் சம்பந்தமாக கேள்விகள் எழுப்பப் பட்டிருக்கின்றன.

இந்த நிகழ்ச்சிப்போக்குகளினூடே ராம்தேவை தன்னுடைய அரசியல் முக மூடியாகப் பயன்படுத்திக் கொண்டிருந்த நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பாஜ கவும் வெறுத்து ஒதுக்கக்கூடிய வகை யில் அதேஅளவிற்குத் தன் தலையை உயர்த்தியிருக்கிறது. ஜூன் 4க்கு ஒருவாரத்திற்கு முன்பு, அதாவது ராம் தேவ் தன் நடவடிக்கைகளைத் துவங்கு வதற்கு முன்பு, ஆர்எஸ்எஸ் தலைமை யகம் தன் கீழ் உள்ள அனைத்து அமைப் புகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி யிருந்தது. அதில் ராம்தேவ் இயக்கத்தில் தங்களை முழுமையாக இணைத்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டிருந்தது. ராம்தேவ் இயக்கத்தைப் பார்வையிடும் எவரும் இதனைத் தெளிவாகக் காண முடிந்தது. ராம்தேவ் இயக்கத்தை ஆதரித் தவர்களில் முன்னணியில் நின்றவர் களில் ‘போஸ்டர் சாது’ என்று அழைக் கப்படும் சாமியார் ரிதம்பரா என்பவரும் ஒருவர். ராமஜென்ம பூமி இயக்கம் சார் பாக முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் தீயைக் கக்கிய இவரது பேச்சுக்களும் அதனைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிக் கப்பட்டதும் அனைவரும் அறிந்த ஒன்று. மற்றொரு ‘காவி’ சாமியாரிணி உமாபாரதி, இந்த சமயத்தில் மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

பாஜக தலைவரும் ராம்தேவின் இயக் கத்திற்குத் தங்கள் கட்சியின் ஆதரவை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். போலீஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்த இயக்கத்தைத் தனதாக்கிக் கொள் வதற்கான ஒரு முயற்சியாக, ராஜ்காட்டில் தர்ணா போராட்டத்தினை மிகவும் ‘களிப் பான’ மனப்பாங்குடன் நடத்தியது. ஆர் எஸ்எஸ் இயக்கத்திற்கும், பாஜகவிற்கும், ஊழல் மற்றும் கறுப்புப் பணம் போன்ற வைகளை விட மிகவும் முக்கியமான விஷயமாக அமைந்திருந்தது என்ன வெனில், இந்த வாய்ப்பைப் பயன்படுத் திக்கொண்டு மீண்டும் தங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும் என்பதேயாகும். இது அவர்க ளின் நடவடிக்கைகளிலிருந்து நன்கு வெளிப்பட்டது. ஆயினும், கர்நாடக மாநி லத்தில் ஆட்சியில் உள்ள அதனுடைய அரசாங்கம், ஊழல் பிரச்சனையில் வரலாறு படைத்து வருவதனை அடுத்து, அதன் இரட்டை நிலை மக்கள் மத்தியில் மிகவும் வெளிப்படையாகவே அம்பல மாகிவிட்டது.

உயர் இடங்களில் காணப்படும் ஊழல்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெருமளவில் உள்ள கோபம் மற்றும் அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமா கப் பயன்படுத்திக்கொள்ள காங்கிரசும் பாஜகவும் முயல்கின்றன. இவர்களின் இத்தகைய முயற்சிகளின் காரணமாக ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதி ரான மிக முக்கியமான போராட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக் கிறது. ஒருவேளை சலுகைசார் முதலா ளித்துவத்தை ஊக்குவிக் கும் கொள்கையைக் கடைப்பிடித்து வரும் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் இதுவே குறிக்கோளாகவும் இருக்கக் கூடும்.

கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக லோக்பால் பிரச்சனை நாட்டின் முன்பும் நாடாளுமன்றத்தின் முன்பும் எப்படி ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத் தடிக்கப்பட்டுக்கொண்டு வந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடாப் பிடியாக வலியுறுத்தியதை அடுத்து கடந்த காலங்களில் மூன்று முறை மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் முன் வந்தன. இதில் தற்போது நிலுவையில் உள்ள மசோதாவும் அடங்கும். ஆயினும், சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் இந்த மசோதாவை சட்டமாக நிறைவேற்றாமல் தடுத்திட சாக்குப்போக்குகளாகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

உயர் இடங்களில் உள்ள லஞ்ச ஊழ லைக் கட்டுப்படுத்திடத் தேவையான சட்டத்தைக் கொண்டுவரக் கூடிய வகையிலும், வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வரக் கூடிய வகையிலும் ஒரு வலுவான மசோதாவை நாடாளுமன்றத்தின் முன் கொண்டுவர அரசை நிர்ப்பந்திக்கக் கூடிய விதத்தில் மக்கள் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். இது உட னடியாகவும் அவசரகதியிலும் செய்யப் பட்டு, கைப்பற்றப்படும் பணத்தை நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம் படுத்துவதற்குத் தேவையான பணி களில் பயன்படுத்திட வேண்டும்.

  Peoples democracy லிருந்து  தமிழில்:ச.வீரமணி,
==========================================================================
பத்திரிகையாளரைக் கொன்ற மாபியாக்கள்,,  

மும்பையில் மூத்த பத்திரி கையாளர் ஜோதிர்மாய் தேயை சுட்டுக் கொன்ற கயவர்கள், மும்பையை தலைமை யிடமாகக் கொண்டு இயங்கும் பெட் ரோலிய மாபியா கும்பலை சேர்ந்தவர் களாக இருக்கக்கூடும் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

மும்பையிலிருந்து வெளியாகும் ‘மிட் டே’ என்ற ஏட்டின் சிறப்புப் புலனாய்வு ஆசிரியராக 56 வயதான மூத்த பத்திரி கையாளர் ஜோதிர்மாய் தே பணியாற்றி வந்தார். இவர் மும்பையின் நிழலுலக தாதாக்களின் கொடிய நடவடிக்கைகள் குறித்தும், பெட்ரோலிய கடத்தல் மாபியா கும்பலுக்கும் அதிகாரிகள் மற்றும் அரசி யல்வாதிகளுக்கும் இடையிலான தொடர் புகளை அம்பலப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமையன்று மும்பை புறநகர் பகுதியான போவாய் எனு மிடத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பத்திரிகையாளர் தே கொடூர மான முறையில் சுட்டு படுகொலை செய் யப்பட்டார். இச்சம்பவம் மும்பை மட்டு மின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

தேயின் இறுதி நிகழ்ச்சிகள் ஞாயி றன்று கத்கோபாரில் உள்ள அவரது இல் லத்தில் நடைபெற்றது. மகாராஷ்டிரா பொதுப்பணித்துறை அமைச்சர் சாஹன் புஜ்பால் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி னார். பெரும் எண்ணிக்கையிலான ஊட கத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். கொல்லப்பட்ட இந்த துணிச்சல்மிக்க பத்திரிகையா ளருக்கு சுபாஷ் சர்மா என்ற மனைவியும், தாயாரும் உள்ளனர்.
ஜோதிர்மாய் தேயின் படுகொலை குறித்து அனைத்துக்கோணங்களிலும் விசாரணையை முடுக்கிவிட்டிருப்பதாக மும்பை காவல்துறை உயரதிகாரிகள் தெரி வித்தனர். குறிப்பாக, பெட்ரோலியக் கடத் தல் கும்பலின் அட்டூழியத்தைப் பற்றி இவர் தொடர்ந்து எழுதி வந்ததால், அக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கொலை செய்தார்களா?தாவூத் இப்ராகீம்,சோட்டா ராஜன் கும்பல்   இவர்களில் யார் கொலைசெய்தனர் என தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.
     நாட்டில்நடக்கும் தீச்செயல்களை எழுதினால் மரணம்தான் பரிசு என்றால் உண்மை எழுதயாருக்கு தைரியம் வரும்.அரசு இதுபோன்ற செயல்களில் கடும் நடவடிக்கை எடுத்தாலே மாபியாக்களுக்கு பயம் வரும்.தான் செய்யும் குற்றசெயல்களை நிறுத்துவதைவிட்டு எழுதியவரை கொலை செய்தால் நம்மை இந்த அதிகார வர்க்கம் கண்டுகொள்ளாது என்ற தைரியம்தான் இதற்கு காரணம்.
        மேலும் நடக்கும் தேசவிரோத செயலகளை எழுதி பின்னரும் குற்றவாளிகள் மீது இந்த அதிகாரிகளும்-ஆட்சியாளர்களும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததும் இக்கொலைக்கான முக்கியக் காரணம்.
        சொல்லப்போனால் பத்திரிகையாளர் கொலைக்கான காரணமே  இந்த அரசுதான்,அதன் அதிகாரிகள்தான்.                                                                                                                                                              


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?