சமச்சீர் உலகு,,,,


வைரசிடமிருந்து கணினியை காக்க,,,,,,,,
வைரஸ்களிடம் இருந்து நமது கணினியை காப்பாற்றஎதாவது ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளை அனைவரும்  பயன்படுத்தி வருவோம்.ஒருசிலர் வெளியில் மென்பொருளை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் பெரும்பாலானோர் இணையத்தில் இருந்து ட்ரையல் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை பயன்படுத்தி வருகிறோம்.
 
அவ்வப்போது ஒரு சில ஆன்டிவைரஸ் நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருளை மேன்மைபடுத்துவதற்காக ஒரு சில நாடுகளில் இலவசமாக தருகிறனர்.அந்த வகையில் ’அவாஸ்ட்’ தற்போது இலவசமாக இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருளை அளிக்கிறது.
 
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். லைசன்ஸ் கீயும் அதன்னுள்ளேயே இருக்கும்.மென்பொருளை நிறுவும் போது லைசன்ஸ் கீக்கான கோப்பை உள்ளிட்டு மென்பொருளை முழுமையாக நிறுவிக் கொள்ளவும்.இந்த அவாஸ்ட் ஆன்டிவைரஸ் மென்பொருளானது நம் கணினியை வைரஸ்களிடம் இருந்து முழுமையாக காப்பாற்ற கூடியது ஆகும்.
  இந்த சுட்டிவழியில் சென்று அந்த மென்பொருளை பார்த்து தேவையெனில் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
’அவாஸ்ட்”
           
==================================================
அக்டோபரில் 700 கோடி மக்கள்.
                 
 உலக மக்கள் தொகை வரும் அக்டோபர் மாத இறுதியில் 700 கோடியாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1960ம் ஆண்டு 300 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை பின்னர் படிப்படியாக உயர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 1999ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 600 கோடியாக உயர்ந்தது. ஒரு வினாடிக்கு 5 குழந்தைகள் வீதம் ஒரு ஆண்டுக்கு 7.8 கோடி அளவிற்கு மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் வரும் 2025ம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகை 800 கோடியாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.  
ப்போது இந்தியாவுக்கு வருவோம்.                                             
 
 இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவர அறிக்கை தெரிவிக்கிறது.
உலகில் வாழும் மொத்த மக்கள் தொகையில் 17.5 சதவீதம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர்.
மொத்த மக்கள் தொகையில் 62.37 கோடி பேர் ஆண்கள், 58.65 கோடி பேர் பெண்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா. உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதம் பேர் இங்கு வாழ்கின்றனர்.
அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேஸில், பாகிஸ்தான், வங்கதேசம், ஜப்பான் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையைக் கூட்டினால் கிடைக்கும் மொத்த எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.
2001-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரையான காலத்தில் நாட்டின் மக்கள்தொகை 18.10 கோடி அதிகரித்துள்ளது. இருப்பினும் மக்கள் தொகைபெருக்கம் விகிதம் 17.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2001-ல் மக்கள்தொகை பெருக்க விகிதம் 21.15 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் சி. சந்திரமௌலி இத்தகவலை செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை வெளியிட்டார். அப்போது உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளையும் இருந்தார்.
முதலிடத்தில் உத்தரப் பிரதேசம்: மக்கள் தொகை அதிகம் வாழும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 19.90 கோடி பேர் வசிக்கின்றனர். மிகக் குறைவாக லட்சத்தீவுகளில் 64,429 பேர் வாழ்கின்றனர்.
உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் மக்கள் தொகைஅமெரிக்காவின் மக்கள் தொகையைவிட அதிகமாகும்.
மிக அதிக அளவில் தில்லியின் வடகிழக்கில் சராசரியாக 37,346 சதுர மீட்டர் பரப்பில் ஒருவர் வசிக்கின்றனர். அருணாசலப்பிரதேசத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒருவர் வீதம் வசிக்கின்றனர்.
பெண்குழந்தை பிறப்பு விகிதம் சரிவு: பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இப்போது 1,000 ஆண் குழந்தைகள் எனில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை 914 ஆக உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆண்:பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் இப்போது மிக அதிக அளவு குறைந்துள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம் என்று சந்திரமெüலி கூறினார்.
எழுத்தறிவு: எழுத்தறிவு பெற்றவர்கள் விகிதம் 74 சதவீதமாக உள்ளது. 2001-ம் ஆண்டு இது 64.83 சதவீதமாக இருந்தது. குறிப்பாக பெண்கள் எழுத்தறிவு பெறும் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. 2001-ல் 53 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை இப்போது 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆண்களில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 75 சதவீதத்திலிருந்து 82 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநிலங்களில் மிஜோரத்தில் 98 சதவீதமாகவும், ஐஸ்வாலில் 98 சதவீதமாகவும், கேரளத்தில் 93 சதவீதமாகவும் உள்ளது.
மிகக் குறைவாக எழுத்தறிவு பெற்றோர் மாநிலத்தில் பிகார் தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது. இங்கு கல்வியறிவு பெற்றோர் விகிதம் 63.82 சதவீதமாக உள்ளது. 10 மாநிலங்கள் 85 சதவீதத்துக்கும் அதிகமான கல்வியறிவு பெற்றோரைக் கொண்டவையாக உள்ளன.
6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15.58 கோடியாகும். 2001-ம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும் 50 லட்சம் குறைவாகும். 20 மாநிலங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர். ஐந்து மாநிலங்களில் ஒரு லட்சம் குழந்தைகள் கூட இல்லாத நிலை உள்ளது.
மக்கள் தொகை நெருக்கம் சராசரியாக ஒரு சதுர கிலோமீட்டரில் 382 பேர் வசிக்கின்றனர். இது 2001-ல் 325 ஆக இருந்தது.
==============================================================================================சமச்சீர் கல்வியை அமுல்படுத்து.
சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஆகஸ்டு 2-ம் தேதிக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் இறுதி விசாரணை ஜூலை 27-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக திங்கள்கிழமை அளித்த தீர்ப்பில், அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்தக் கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மேலும் வரும் 22-ம் தேதிக்குள் மாணவர் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
மேலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆகஸ்டு 2-ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இனியாவது தமிழக அரசு தனது காழ்ப்புணர்வை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு சமச்சீர் கல்வியை நடத்த ஆணை பிறப்பிக்க வேண்டும்.அதை விட்டு விட்டு ஐ.நா.சபை, உலக நீதிமன்றம் என செல்ல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.
ஏற்கனவே இரு மாதங்கள் மாணவர்களுக்கு வீணடிக்கப்பட்டுள்ளது .அதை மேலும் அதிகப்படுத்தி மக்கள் எரிச்சலை பெற வேண்டாம்.உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு  நல்லது செய்யாவிட்டாலும் கல்வி கற்பதற்கு இடைஞ்சல் செய்ய வேண்டாம்.
இதுவரை நடந்தது அரசுக்கு[ஜெயலலிதா] மூக்குடைப்புதானே? இது தேவையா? இவை நீங்களாக வாங்கிக்கட்டிக் கொண்டதுதானே.
                                            



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?