டாடா,அம்பானி,நீரா நார்டியா எல்லோரையும் எங்கே?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு
1291028134Niira_Radia.jpg  
    

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் டாடாவையும், நீரா ராடியாவையும் சேர்க்காதது ஏன் என்று ஆ.ராசாவின் உதவியாளராக செயல்பட்ட ஆர்.கே. சந்தோலியா, நீதிமன்றத்தில் சி.பி.ஐ.க்கு கேள்வி எழுப்பினார்.

தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன் னிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை தனது தரப்பை நியாயப்படுத்தி வாதாடிய ஆ.ராசா, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மீது குற்றம் சாட்டினார்.

அடுத்ததாக தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுராவின் வழக்கறிஞர் மத்திய அமைச்சரவை மீது குற்றம் சாட்டி னார். இந்நிலையில் வெள்ளியன்று ஆ. ராசாவின் உதவியாளர் ஆர்.கே.சந் தோலியா தரப்பில் வாதம் நடந்தது.
சந்தோலியா கூறியதாவது:
’ஒரு வருட விசாரணைக்குப் பிறகு சிபிஐ என்னை இந்த வழக்கில் சேர்த் தது. சாட்சியமாக மாறு, இல்லை யென்றால் குற்றவாளி ஆகிவிடுவாய் என்று என்னை மிரட்டியது. 2ஜி விவ காரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஒன்றும் என் கையில் இருந்ததில்லை. நான் அமைச்சருக்கு உதவியாக இருந் தேன். அமைச்சரை, என்ன முடிவு எடுத்துள்ளீர்கள் என்று உதவியாள ரால் கேள்வி கேட்க முடியுமா? அவர் எடுக்கும் முடிவுகள் சரியா, தவறா என்று எனக்கு கவலை இல்லை. நான் பெரிய ஆள் இல்லை. நான் கையெழுத் துப் போட்ட ஒரு ஆவணத்தையாவது சிபிஐயால் காட்ட முடியுமா? எத்த னையோ பேர் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்கள். ஆனால் சிபிஐ அவர்களை எல்லாம் விட்டு விட்டது. இந்த விவகாரத்தில் நீரா ராடியாவையும், டாடாவையும் சிபிஐ விசாரிக்காதது ஏன்?

டாடா ஸ்கையின் டிடிஎச் சேவை யில் கலைஞர் டி.வியை சேர்க்க ராசா முயன்றது உண்மைதான். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, வியாழனன்று, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செய லாளர் சித்தார்த் பெகுரா தரப்பு வழக் குரைஞர் அமன் லேகி கூறியதாவது:-

’முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கு பிரதமர்தான் ஒப்புதல் அளித்துள் ளார். இது தொடர்பாக மத்திய அமைச் சராக இருந்த ஆ.ராசா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அலைக்கற்றை ஒதுக்கீடு கோருவதற்கான தேதியை முன்னதாகவே முடித்துக் கொள்ள வும் பிரதமர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனை அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாகன்வதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

சொலிசிட்டர் ஜெனரல் உள்ளிட் டோர் இதில் அனுமதி அளித்துள்ள நிலையில், அரசு அதிகாரியான பெகுரா, இந்த கொள்கை விஷயத்தில் தலையிட முடியாது. மத்திய அமைச் சரவை கூறியபடிதான் செயல்பட முடியும். தவறு இருப்பதாகத் தோன்றி னால் பிரதமர்தான் தலையிட்டிருக்க வேண்டும். இந்த வழக்கில் சாட்சியாக வேண்டுமானால் பெகுராவைச் சேர்க் கலாம். குற்றவாளியாக சேர்த்திருக்கக் கூடாது.’
எனஅவர் கூறினார்.

மேலும் 2007ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அப் போதைய நிதியமைச்சர் ப.சிதம்பர மும், தற்போதைய ரிசர்வ் வங்கி கவர் னரும் அப்போதைய நிதித்துறைச் செயலாளருமான சுப்பா ராவும் கலந்து கொண்ட தாகவும், இந்த கூட்டத்தில் தான் 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடாமல் உரிமங்களை ஒதுக்குவதற் கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் பெகுரா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக முன்னாள் நிதி யமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் நிதித் துறைச் செயலாளராக இருந்த டி. சுப்பா ராவ் ஆகியோர் மீது தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் செய லாளர் சித்தார்த்த பெகுரா கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் மறுத்துள்ளார்.

இதுகுறித்து கபில் சிபல் கூறுகை யில், பெகுரா தெரிவித்தபடி ப.சிதம் பரமும், சுப்பாராவும் கலந்து கொண் டதாக கூறப்படும் 2007ம் ஆண்டு டிசம் பர் 4ம் தேதி கூட்டம் நடைபெற்றதற் கான ஆதாரம் ஏதுமில்லை என்றார்.

இந்த ஊழலில் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் என சி.பி.ஐ ஆல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடுத்தடுத்து காங்கி ரஸ் தலைமையிலான அரசின் செயல் பாடுகளை புட்டுப்புட்டு வைத்துக் கொண்டிருக்கும் நிலையில்,பாவம் அமைச் சர் கபில்சிபல் வெளியிலிருந்து அவற் றை மறுத்துக்கொண்டிருக்கிறார்.
      இனிதான் சி.பி.ஐ.நீதிமன்றம் களை கட்டப்போகிறது.
மன்மோகன்,சிதம்பரம்,அம்பானி,டாடா,நீரா நார்டியா,முதல் சோனியா-ராகுல் வரை 2-ஜி அலைவரிசை நீளும் என தலைநகர வட்டாரங்கள் தெரிவிக்கின்ற்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?