டமிள் புக் சர்யிலாய்...?

தமிழே தெரியாத ஜெயதேவ் சமச்சீர் கல்வி நூல்களை எப்படி படித்தார்? 



  • டிஏவி பள்ளிகளின் தலைவரான ஜெயதேவ் தமிழே படிக்கத் தெரியாத வர். 82 வயதான இவர், 78 வயது வரை ஆட்டோ மொபைல் தொழிலில் ஈடு பட்டிருந்தவர். இப்படிப் பட்டவர் எப்படி சமச்சீர் கல்வி நூல்களைப் படித்தார் என்பது பெரும் வியப்பாக உள்ளது. சமச்சீர் கல்வி தொடர்பான ஆய்வுக் குழு வின் முடிவுகளை முற்றி லும் நிராகரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வாதிடப் பட்டது.
    சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப் பட்ட ஆய்வுக் குழு தனது முடிவை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதில் சமச்சீர் கல்வி நூல்கள் தர மற்றவையாக உள்ளன; மாணவர்களின் சிந்தனை யைத் தூண்டுவதாக அவை இல்லை; இவற்றைப் பயன் படுத்த முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் வியா ழன் முதல் தினசரி விசார ணை நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,புதனன்று சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி மனோன்மணி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது.

    அதில், 10 ஆயிரம் பக்கங் களைக் கொண்டதாக சமச் சீர் கல்வித் திட்ட பாட நூல் கள் உள்ளன. இதை 4 முறை மட்டுமே கூடிய ஆய்வுக் குழுவினர் படித்து முடித் தது எப்படி? இந்தக் குழு வில் இடம் பெற்றுள்ள ஒய்ஜிபி, ஜெயதேவ் ஆகி யோர் கல்வியாளர்களே அல்ல. அதிலும் 82 வயதான ஜெயதேவ், 78 வயது வரை ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருந் தவர். அவருக்குத் தமிழே படிக்கத் தெரியாது. அப் படிப்பட்டவர் எப்படி சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்களைப் படித்தார் ?என்பது பெரும் வியப்பாக உள்ளது.

    சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து கருத்துக் கூற மட் டுமே இந்தக் குழுவுக்கு அதி காரம் தரப்பட்டிருந்தது. மாறாக தீர்ப்பு கூற இவர் களுக்கு அதிகாரம் இல்லை
    . இந்தக் குழு தெரிவித்துள்ள கருத்துக்களை அப்படியே நிராகரிக்க வேண்டும். இவற் றை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மனோன் மணி அதில் தெரிவித்துள் ளார்.
    ==========================================================================

    ஒட்டகம் நுழைந்த கூடாரம்
    -ஆர்.எஸ். துரைராஜ்
    இந்தியாவில் பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என நிதி அமைச் சரின் பொருளாதார ஆலோசகர் டாக்டர் கௌசிக் பாசு தலைமையில் இயங்கும் பணவீக்கம் தொடர்பான அமைச்சகக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

    2006ம் ஆண்டு இடதுசாரிக் கட்சிகளின் பெரும் எதிர்ப்பையும் மீறி, அன்றைய மத்திய அரசு ஒரு பொருள்  என்று அறியப் படும் நிறுவனங்களின் பெயர் தாங்கிய பிரத்தி யேக பொருட்கள் விற்பனையில் அந்நிய மூல தனம் 51 சதவீதம் வரை அனுமதித்தது. இதன்படி ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பெயரில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மட்டும் இதில் அடங்கும். இதனால் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் நேரடியாக இந்தியாவில் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், ஒரு சில பொருட்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் வால்மார்ட் என்ற அமெரிக்க நிறுவனம் இந்தி யாவில் உள்ள பாரதி குழுமத்துடன் இணைந்து பின் வாசல் வழியாக இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடும் செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    தற்போது இந்த கட்டுப்பாடு அகற்றப்பட்டு பல் பொருள் (அரடவi செயனே) சிறு வணிகத்தில் அந் நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கலாம் என்ற பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சி பன்னாட்டு நிறுவனங் களுக்கு ஆதரவான நவீன தாராளமய கட்ட மைப்பை உருவாக்கும் மற்றொரு நடவடிக் கையாகும்.

    இதன்படி, ஒரு நிறுவனம் தயாரிக்கும் பல் வேறு பொருட்களும், பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் ஒரே வகையான (வேறு வேறு மாடல்) பொருட்களும் இதில் அடங்கும். இதன்படி இந்தியாவில் சிறு வர்த்தகத்தில் ஈடுபடும் எல்லா பொருட்களின் விற்பனையி லும் வெளிநாட்டு நேரடி முதலீடு ஈடுபடலாம் என்ற நிலை ஏற்படும். (அமைச்சரவைக் குழு பரிந்துரையில் வெளிநாட்டு முதலீடு எத் தனை சதவீதம் வரை அனுமதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்படவில்லை).

    பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அந் நிய நேரடி முதலீட்டை அனுமதித்தால், சந் தையில் பொருட்களின் அளிப்பு கூடுதலா கும். இதனால் வர்த்தக லாபம் குறைக்கப்ப டும். எனவே, பொருட்களின் விலை குறை யும். அது விலைவாசியைக் கட்டுப்படுத்த உதவும் என்றும், இந்திய விவசாயிகளுக்கும் பொருட்களை வாங்கும் நுகர்வோர்க்கும் அது பெரிதும் பயனளிக்கும் என்றும் சொல்லப்படு கிறது.

    மேலும், வால்மார்ட், டெஸ்கோ, கேரிபோர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கி விற்கத் தொடங்கினால் அவை இதே பொருட்களை உலகின் பல பகுதிகளில் உள்ள தங்கள் வர்த்தக நிறுவனங்களின் தேவைக்காக, இந்திய உற்பத்தியாளர்களிட மும், விவசாயிகளிடமும் வாங்கும் போது இப்பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், அதனால் லாபம் பெறவும் இந்திய சிறு உற்பத்தியாளர்களுக்கு இது உதவும் என்று காரணம் சொல்லப்படுகிறது.

    ஆனால், சர்வதேச அனுபவம் இதற்கு மாறாக உள்ளது. இந்த பகாசூர கம்பெனிகள் சிறு வணிகத்தில் நுழைந்தால், அவை பொருட்களின் விலையை மிகவும் குறைத்து (பல இடங்களில் உற்பத்தி விலையையும் விட குறைவாக) விற்பனை செய்து, அதன் மூலம் அப்பொருட்களை விற்று வரும் சிறு வர்த்தகர் களை நஷ்டமடைய வைத்து, அவர்கள் அத் தொழிலை விட்டு ஓடுவது அல்லது தற் கொலை செய்து கொள்வது நடக்கும். போட்டி யாளர்கள் துடைத்தெறியப்பட்டவுடன் அக் கம்பெனிகள் தங்கள் விருப்பம் போல் அதிக விலையை நிர்ணயித்து கொள்ளை லாபம் அடிப்பார்கள். வால்மார்ட் நிறுவனம் இத்த கைய சதித் திட்டத்திற்கு “போட்டியை துடைத்தெறிவது” (ளவடிஅயீ வாந உடிஅயீ) என்று பெய ரிட்டு செயல்படுகிறது.

    எனவே பொருட்களின் விலை குறையும் என்பது வெறும் கண் துடைப்பே. மேலும் இவை தங்கள் பகாசூரத் தன்மையால் சந்தை யைக் கட்டுப்படுத்தும் ஆதிக்க சக்தியை பெறுகின்றன. அமெரிக்காவின் மொத்த சிறு வணிகத்தில் 10 சதவீதம் வால்மார்ட் நிறுவன மும், இங்கிலாந்தின் மொத்த சிறு வணிகத் தில் டெஸ்கோ நிறுவனம் 30 சதவீதத்தையும் தங் கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, விலை நிர் ணயம் உட்பட நுகர்வோர் மீது பெரும் ஆதிக் கம் செலுத்துகின்றன. எனவே, இவை விவ சாயிகளிடமும், நுகர்வோரிடமும் மிகப் பெரும் அதிகாரம் கொண்ட சக்தியாக மாறும். தங்கள் கொள்ளை லாபத்திற்காக விலை நிர்ணயத் தில் மோசடிகளை அரங்கேற்றும் என்பது தான் உலக அனுபவம்.

    எனவே, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதும், சிறு வர்த்தகர்கள் ஏற்று மதி செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்பதும் கற்பனையான வாதமே தவிர, உண்மையில் இந்த விவசாயிகள் ஏமாற்றப்பட்டு, லட்சக் கணக்கான சிறு, குறு சில்லரை வியாபாரி களின் வாழ்வாதாரமும் சூறையாடப்படும்.

    வெளிநாட்டு நிறுவனங்களை அனு மதித்த பின் அதன் நடவடிக்கைகளை கட் டுப்படுத்த ஒரு கட்டுப்பாட்டு ஆணையம் நியமிக்க வேண்டும் என டாக்டர் கௌசிக் பாசு கூறியுள்ளார்.

    இத்தகைய மிகப் பெரும் பகாசூர நிறுவ னங்கள் சில்லரை வர்த்தகத்தில் நுழையும் போது, அவற்றை அரசு ஒழுங்குபடுத்துவது என்பது ஒரு போதும் முறையாக நடக்கப் போவது இல்லை என்பதையே சர்வதேச அனுபவங்கள் காட்டுகின்றன.

    வெளிநாட்டு பெரும் நிறுவனங்கள் சிறு வணிகத்தில் அனுமதிக்கப்பட்டால் பொருட் கள் ஒரு இடத்தில் இருந்து நுகர்வோர் கையில் செல்லும் பரிவர்த்தனை செலவுகள்  குறையும் என்றும், இதனால் வீணான செலவுகள்  குறையும் என்றும் சொல்லப்படுகிறது.

    இந்த வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஏனென்றால், இந்தியாவில் இந்த பல்பொருள் சில்லரை வர்த்தகத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள், சோப்பு, பவுடர் போன்ற பொருட்களில் தற்போது மொத்த வியாபாரியின் லாபம் 4 முதல் 8 சத வீதம் வரை பெறப்படுகிறது. இது சில்லரை வணிகத்திற்கு வரும்போது, சிறு வர்த்தகரின் லாபம் 8 முதல் 14 சதவீதம் வரை உள்ளது. ஆக மொத்தம் இந்த பொருட்கள் உற்பத்தி இடத்தில் இருந்து நுகர்வோரை அடைய ஏற்படும் செலவினம் 12 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை உள்ளது.

    ஆனால், இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி செலவில் 40 சதம் வரை ஏற்றப்படுகிறது. (உதாரணம். குரோஜர் மற்றும் டெஸ்கோ நிறுவனங்கள்). இது இந்தியாவில் ஏற்படும் பரிவர்த்தனை செலவை விட 2 முதல் 3 மடங்கு அதிகம்.

    இது போல் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி துறையில் இந்த பரிவர்த்தனை செலவினம் இந்தியாவை விட 2 முதல் 4.5 மடங்காக உள்ளது.

    இன்று சில்லரை வர்த்தகத்தில் நிலவும் சில துறைகள் எல்லாம் ஒழுங்குபடுத்தப் பட்ட சில்லரை வர்த்தகர்கள் மற்றும் விநி யோகஸ்தர்களை ஈடுபடுத்துவதன் மூலம் களையப்பட்டு, பல அனாவசியமான பண விர யங்கள் குறைக்கப்பட்டு பணம் பெருமளவில் சேமிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    அவ்வாறு பணம் சேமிக்கப்பட்டாலும், அந்த சேமிப்பின் பெரும் பகுதியை உலக வர்த்தகர்கள் அவர்களுடைய மிகப் பெரும் வாங்கும் சக்தியாலும், அதிகாரத்தினாலும் தங் களுடைய நாடுகளுக்கு (பங்குச் சந்தை முத லீடு) கொண்டு செல்லும் அபாயம் உள்ளது.

    இந்தத் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதித்தால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற வாதம் முன் வைக்கப் படுகிறது.

    ஆனால் சில்லரை வணிகத்தை திறந்து விடுவதால் பல லட்சம் மக்கள் வேலையில் லாமல் போவதுடன், இலட்சக்கணக்கான குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்படும் அபாயம் உள்ளது. உதாரணமாக, ரூ.1,47,000 கோடி முதலீட்டில் சில்லரை வணிகத்தில் ஈடுபடும் ஒரு அந்நிய நிறுவ னத்தின் மூலம் சுமார் 43,000 பேருக்கு மட் டுமே வேலை வாய்ப்பு அளிக்க முடியும். ஆனால், இதன் காரணமாக 80 லட்சம் சில் லரை வர்த்தக தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைப்பார்கள். அதோடு இவர்களைச் சார்ந்து வாழும் (சராசரியாக குடும்பத்திற்கு 4 பேர் ) 3 கோடியே 20 லட்சம் பேரும் வீதிக்குத் தள்ளப்படுவார்கள்.

    வளரும் நாடான இந்தியாவில் வேலை வாய்ப்பிற்கு வழி இல்லாத மக்கள் விவசாயத் திற்கு அடுத்தபடியாக சுய வேலை வாய்ப்பு என்ற அடிப்படையில் தேடிக் கொள்ளும் வேலையாக சில்லரை வர்த்தகமே உள்ளது. இந்தியாவில் 4 கோடிக்கும் அதிகமான மக் கள் இந்த சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

    வெளிநாட்டு முதலீட்டை சிறு வணிகத் தில் அனுமதித்த மேற்கத்திய நாடுகளில் லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் தங்கள் வாழ்நிலையை இழந்ததோடு, சிறு வர்த்தகச் சந்தை இந்த பகாசூர நிறுவனங்களின் கட்டுப் பாட்டிற்குள் சென்ற பரிதாபமான நிலை ஏற் பட்டுள்ளது.

    இந்தியாவில் பல் பொருள் சில்லரை வர்த் தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனும தித்தால், அந்த நாடுகளுக்கு ஏற்பட்ட நிலை தான் இந்தியாவிற்கும் ஏற்படும். கூடாரத்திற் குள் மூக்கை மட்டும் நுழைக்க அனுமதித்த ஒட்டகம், பின்னர் கூடாரத்தை ஆக்கிரமித்து, உள்ளே இருந்தவர்கள் வெளியே நின்ற நிலை தான் இந்திய பொருளாதாரத்திற்கும் ஏற்படும்.

    இன்றும் இந்தியாவில் பல நூறு லட்சம் மக்கள் வேலையின்றி தவிக்கையில் பல் பொருள் சில்லரை வர்த்தகத்தை திறந்து விடு வதால் ஏற்படும் ஆபத்தையும், வரலாறு நமக் குக் காட்டியுள்ள பாடங்களையும் கணக்கில் கொண்டு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முயற்சி யை மத்திய அரசு கைவிட வேண்டும்.

     கட்டுரையாளர் துணைத்தலைவர், நெல்லை கோட்ட

    காப்பீட்டுக்கழக ஊழியர்சங்கம், திருநெல்வேலி

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    விகடானந்தா நிலவரம்

    பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

    கட்டுமானம் ஆரம்பம்?