என்றும் முதலிடம்-எப்போதும் ஊழலிடம்.?

சுவிஸ் நாட்டின் மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: ”2010ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஆகும். 2009ம் ஆண்டில் இந்தியர்களின் கணக்கில் இருந்த பணம் 12 ஆயிரத்து 480 கோடி ரூபாய். 2008ம் ஆண்டில் டிபாசிட் செய்யப்பட்டிருந்த பணம் 11 ஆயிரத்து 40 கோடி ரூபாய்.உலக நாடுகளை பொருளாதார மந்தநிலை ஆட்கொண்ட பின், 2008ல் அமெரிக்காவின் லேமேன் வங்கி திவாலான பின், சுவிஸ் நாட்டின் பெரிய வங்கியான, "யுபிஎஸ்' உட்பட பல தனியார் வங்கிகள் பெரிய அளவில் நஷ்டத்தைச் சந்தித்தன.
இதைத் தொடர்ந்து, சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டிருந்த பணத்தில் கணிசமான அளவு வாபஸ் பெறப்பட்டது.அமெரிக்காவைச் சேர்ந்த பலர், வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கிகளில் அந்தப் பணத்தை டிபாசிட் செய்ததாக புகார் எழுந்ததால், சுவிஸ் வங்கிகளுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன. மேலும், பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை டிபாசிட் செய்துள்ளதாக புகார்கள் கூறப்பட்டதால், சர்வதேச நாடுகளில் நெருக்கடியும் உருவானது.இந்த நெருக்கடி காரணமாக, வங்கி விதிமுறைகளில் சில திருத்தங்களையும் சுவிஸ் அரசு கொண்டு வந்தது. குறிப்பாக, ஜி-20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் நிர்பந்தம் காரணமாக, வங்கி ரகசிய சட்டங்களில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வாறு மத்திய வங்கி கூறியுள்ளது.
அதே நேரத்தில், 2008ல் உலக நாடுகள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தபோது, சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்திருந்த பணத்தை, இந்திய கம்பெனிகளும், இந்தியர்கள் பலரும் சிங்கப்பூர் வங்கிகளுக்கு மாற்றி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருந்தாலும், "தற்போது சுவிஸ் வங்கிகளின் நிலைமை மாறிவிட்டது. அவற்றின் நிதி நிலைமை நன்றாக உள்ளது. தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளை விட, சுவிஸ் வங்கிகளின் நிதி நிலைமை சிறப்பாக உள்ளது. சுவிஸ் வங்கிகளுக்கு இந்தியா உட்பட மற்ற நாடுகளில் இருந்து பணம் வருவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது' எனசுவிஸ்வங்கியாளர் தெரிவித்துள்ளார்.இந்தியா எங்களின் பெருமைக்குரிய வாடிக்கையாளர்கள் நிறைந்த நாடுகளில் ஒன்று.என அவர் மேலும் கூறினார்.
 எப்படியோ உலக அளவில் நமது இந்தியா முன்னிலை வகிப்பது நமக்கு பெருமைதானே.



   அதேபோல் மற்றொரு பெருமை மிகு செய்தியையும் பார்த்துவிடுங்களேன்.
புனேயைச் சேர்ந்த "இந்தியா போரன்சிக்'என்ற நிறுவனம், இந்தியாவில் நடந்த ஊழல் அளவு குறித்த ஆய்வை நடத்தியது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக வைத்து மதிப்பிடப்பட்ட ஆய்வில், இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் மட்டும், 15.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை, இந்தியாவுக்கு வெளியில் நடந்த சட்ட விரோத நிதி பரிமாற்றங்கள் தொடர்பானவை.
இந்த ஆய்வின் அடிப்படையில், ஊழல் என்ற பெயரில், தனிப்பட்ட நபர் ஒவ்வொருவரும், 2,000 ரூபாய் வரை செலவிடுவதாக தெரியவந்துள்ளது.ஆனால், கடந்த 2000-09 ஆண்டுகளில், 70 ஆயிரத்து 773 ஊழல் வழக்குகள் விசாரிக்கப்பட்டதாகவும், இவற்றில், ஊழலில் தொடர்புடைய 190 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், வர்த்தக மோசடி, கடத்தல், போதை மருந்து கடத்தல், வரி ஏய்ப்பு, வங்கி மோசடிகள் ஆகியவற்றால், நாட்டு பொருளாதாரத்துக்கு, 22 ஆயிரத்து 528 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சத்யம் மோசடி, வெளிநாடுகளில் பணபரிவர்த்தனை மோசடியை கண்டுபிடிக்கும் அமைப்பின் தகவல் ஆகியவற்றின் அடிப்படையில், ஊழல் பற்றி ஆய்வு நடத்தியதாக, "இந்தியா போரன்சிக்' அமைப்பு தெரிவித்திருக்கிறது.
  இது போன்று ஆய்வுகள் தேவைதானா?
 இதன் முடிவுகள் ஒவ்வொரு இந்தியனின்  ரத்த அழுத்ததையும் அதிகப்படுதிவிடுமே.இதை தடுக்க இயலாத தங்கள் கையாலாகாத்தனத்தை எண்ணி மனதில் கவலையை ஏற்படுத்திவிடுமே.
 அரசியல்வாதிகள் மத்தியில் நாம் அடித்தது ரொம்பக் கொஞ்சமாகத்தெரிகிறதே என அவர்கள் மனதிலும் கவலையை உருவாக்கி விட்டது இந்த ஆய்வு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?