நார்வே குண்டு வெடிப்பு

 

நார்வேக்கு இது போன்ற தீவிரவாத குண்டு வெடிப்புகள் புதிது.

நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவில் ஆளும் கட்சியினர் முகாம் ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலியானோர் எண்ணிக்கை 90ஆக உள்ளதாக தெரிகிறது.

நார்வே நாட்டின் ஆளும்கட்சியான லேபர் கட்சியின் இளைஞர் பிரிவு நடத்திய முகாம் ஒன்றில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு மர்ம நபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்பலர் பலியாகியுள்ளனர். இத்தகவலை ஆஸ்லோ பொலிஸ் இயக்குநர் ஆய்ஸ்டின் மேலண்ட் உறுதிபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,"ஆரம்பத்தில் 10 பேர் மட்டுமே இறந்ததாக கணக்கிடப்பட்டது. ஆனால்பக்கத்து கட்டிடக்களில் குண்டு வெடித்துள்ளது.இதன் இடிபாடுகளிலும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை90ஐ தாண்டியுள்ளது.மேலும் நிவாரனப்பணிகள் நடந்துவருகிறது" என்றார்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஒருவரை நார்வே போலிசார் கைது செய்துள்ளனர். அவனிடம் விசாரணை செய்துவருகின்றனர்.

மக்கள் நெருக்கடி மற்றும் உச்சகட்ட பாதுகாப்பு உள்ள இடத்தில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது நோர்வே மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது வெறும் எதிரகட்சியினர் செயலா ?அல்லது அல்கொய்தா இயக்கம் போன்ற தீவிரவாதிகளின் செயலா என விசாரணை நடந்து வருகிறது.

நார்வே போன்ற நாடுகள் அமைதியான வாழ்வை விரும்புவர்கள் உள்ள நாடு.இது வரை இது போன்ற செயல்கள் தங்கள் நாட்டிலும் நடக்கும் என்பதை கனவிலும் நினைத்ததில்லை அவர்கள்.

அவர்களை இக்குண்டு வெடிப்பும் -மனித உயிர் சிதறல்களும் மிகக்கலவரப்படுத்தியுள்ளது.

அவர்களால் இச்சம்பவம் நடந்துள்ளதை நம்பவோ,சீரணிக்கவோ முடியவில்லை ,என நார்வே பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?