நல்ல பாடம்,,,,,,,,,.

அமெரிக்காவுக்கு, தற்போது அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. நாடுகளின் கடன் மதிப்பீட்டுக் குறியீட்டை நிர்ணயிக்கும், பிரபல ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம், அமெரிக்காவின் உயர்தர கடன் மதிப்பீட்டை, ஒரு படி குறைத்து விட்டது. இதுகுறித்து, அந்நிறுவனம் மீது, ஒபாமா நிர்வாகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதேநேரம், "தனது கடனுக்கு அடிமையாகும் நோயைத் தீர்க்க, அமெரிக்கா பொது அறிவைப் பயன்படுத்தினால் நல்லது. புதிய, உறுதியான, பாதுகாப்பான மற்றொரு உலகளாவிய கரன்சியை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது' என, சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.

 அமெரிக்காவின் கடன் நெருக்கடிக்கான தீர்வு, கடந்த 1ம் தேதி எட்டப்பட்டு, கடைசி கட்டத்தில் சட்டமாக்கப்பட்டது. ஆனால், கடன் மதிப்பீட்டு நிறுவனமான "ஸ்டாண்டர்டு அண்டு புவர்' (எஸ் அண்டு பி), "அமெரிக்கா தன் நிதிப் பற்றாக்குறையை, அடுத்த 10 ஆண்டுகளுக்கு, 4 டிரில்லியன் டாலர் அளவிற்காவது குறைத்தால் தான், அதன் கடன் மதிப்பீட்டுக் குறியீட்டுக்கு ஆபத்திருக்காது. மாறாக நடந்தால், குறியீடு குறைக்கப்படலாம்' என, கடந்த ஒரு மாத காலமாக எச்சரிக்கை விடுத்து வந்தது.
மற்றொரு நிறுவனமான "மூடிஸ்', அமெரிக்கா எந்த ஒரு மசோதா கொண்டு வந்த போதிலும், அதன் கடன் மதிப்பீடு மீதான தனது பரிசீலனை, தொடர்ந்து எதிர்மறையாகவே இருக்கும் என, மிரட்டல் விடுத்தது. ஆனால், நிறைவேற்றப்பட்ட மசோதாவில், வருமானத்திற்கு வழி வகுக்கப்படாமல், செலவுகளை மட்டும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு, 2.4 டிரில்லியன் டாலர் அளவிற்குக் குறைக்க, பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
                                            
      
up-movie3 இந்நிலையில், கடந்த 4ம் தேதி இரவு, அமெரிக்கப் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்து விடும் என்று பரவிய வதந்தியால், அமெரிக்க, ஐரோப்பிய, ஆசியப் பங்குச் சந்தைகளில், பெரும் சரிவு நிகழ்ந்தது. கடந்த 5ம் தேதி, அமெரிக்காவில், 1,17,000 வேலை வாய்ப்புகள், ஜூலையில் உருவாக்கப்பட்டதாக வந்த செய்தியை அடுத்து, பங்குச் சந்தை சரிவு தற்காலிகமாக நின்றது. அதே நாள் இரவு, "எஸ் அண்டு பி', அமெரிக்காவின் நீண்ட கால கடன் பத்திரங்கள் மீதான கடன் மதிப்பீட்டுக் குறியீட்டை, "ஏஏஏ' என்ற உயர்தரத்தில் இருந்து, அடுத்த படிநிலையான, "ஏஏ+' என்ற நிலைக்குக் குறைத்து, அறிக்கை வெளியிட்டது. கடன் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில், இன்னும் அமெரிக்க அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒரு தெளிவு வராதது, உள்நாட்டு உற்பத்தி சதவீதம் எதிர்பார்த்த அளவு உயராதது, அமெரிக்க அரசின் நிதிக் கொள்கை பலவீனமாகி விட்டது, ஆகியவை தான் இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என, அந்நிறுவனம் கூறியது. அதேநேரம், குறுகிய கால கடன் பத்திரங்கள் மீதான, "ஏ1+' என்ற மதிப்பீட்டை, அப்படியே பராமரிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.                                                             Obama                                
 அந்நிறுவனத்தின் அறிக்கையில், "அரசின் மானியச் செலவு மட்டும், 2 டிரில்லியன் டாலர்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நிதியமைச்சக அதிகாரிகள், அது மிகவும் அதிகமான தொகை என, தெரிவித்தனர். அந்நிறுவனத்தின் அறிக்கை வெளியான உடன், அமெரிக்க நிதியமைச்சக செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டியில்,"எஸ் அண்டு பி நிறுவனத்தின் கணக்கு அறிக்கையில், 2 டிரில்லியன் டாலர் கணக்கு இடறுகிறது' என்றார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தியில், "இத்தவறு நிதியமைச்சகத்தால் சுட்டிக் காட்டப்பட்ட பின், அதைத் திருத்தி வெளியிடுவதற்கு, பல மணிநேரங்களை "எஸ் அண்டு பி' நிறுவனம் எடுத்துக் கொண்டது. அதனால், அதன் அறிக்கை வெளிவரத் தாமதமானது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு: எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர், ஒபாமாவின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், அதிகச் செலவு ஆகியவற்றைக் காட்டி, இப்பிரச்னைக்கு ஒபாமா தான் முழு முதற்காரணம் என, குற்றம் சாட்டியுள்ளனர். குடியரசுக் கட்சியின் சார்பில், அதிபர் பதவிக்குப் போட்டியிடுபவர்களில் ஒருவரான, மிட் ரோம்னி இதுகுறித்துக் கூறுகையில்,"ஒபாமாவின் தலைமை, தோல்வி அடைந்து விட்டது. அவரது தவறான பொருளாதாரக் கொள்கைகள், அதிக வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற விளைவுகளோடு, தற்போது கடன் மதிப்பீட்டையும் குறைத்து விட்டது. இன்று அவர், "நிலைமை சீராகும்' எனச் சொல்கிறார். ஆனால், வெள்ளை மாளிகையில், புதிய தலைமை வந்தால் தான், நிலைமை சீராகும்' என தெரிவித்தார்.
புதிய கரன்சி டாலருக்கு மாற்றாக உருவாக்க வேண்டும்,
 
அமெரிக்க நிதியமைச்சகத்தின் கடன் பத்திரங்களை, 1 டிரில்லியன் டாலர் அளவிற்கு வாங்கி வைத்துள்ள சீனா, தற்போது விற்க முடியாமல் தவிக்கிறது. கடன் நெருக்கடி பிரச்னை, அமெரிக்க கட்சிகளிடையே தீர்வு காணப்படாமல், இழுத்தடிக்கப்பட்ட போதே, சீனா நிம்மதி இழந்தது. இப்போது அதன் நிம்மதியை, "எஸ் அண்டு பி' நிறுவனத்தின் முடிவு, மேலும் குலைத்து விட்டது. சீனா தனது தவிப்பை, கடும் கோபம் மற்றும் எரிச்சலாக, அறிக்கை வடிவில் வெளியிட்டுள்ளது.

சீனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, "ஷின்ஹுவா' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின், மிகப் பெரிய கடன் பத்திரதாரர் என்ற முறையில், அந்நாடு தனது கடன் பிரச்னையைத் தீர்க்க வேண்டும், சீனாவிடம் உள்ள, அமெரிக்க டாலர் கடன் பத்திரங்களின் மதிப்பை உறுதி செய்ய வேண்டும் என, அமெரிக்காவிடம் வலியுறுத்த, சீனாவுக்கு முழு உரிமை உண்டு. அமெரிக்கா, தனது கடனுக்கு அடிமையாகும் நோயில் இருந்து, உடனடியாக விடுபட, கொஞ்சம் பொது அறிவைப் பயன்படுத்தி, ராணுவம் மற்றும் சமூக நலச் செலவுகளைக் குறைக்க வேண்டும். இதற்கு மேலும், அமெரிக்காவின் கடன் மதிப்பீடு குறையுமானால், அது உலகப் பொருளாதார மீட்சியை மந்தப்படுத்தும். அதோடு, மீண்டும் மற்றொரு பொருளாதார நெருக்கடியை உருவாக்கும். அமெரிக்க டாலரால் தான், இந்த மோசமான விளைவு ஏற்பட்டுள்ளது. அதனால், புதிய, உறுதியான, பாதுகாப்பான உலகளாவிய கரன்சி ஒன்றை, உருவாக்க வேண்டும். அதுதான், எந்த ஒரு தனி நாட்டினாலும், ஏற்படக் கூடிய மோசமான நிலையைத் தவிர்க்கும் ஒரே வழி. தனது செலவுகளுக்காக, எந்நேரம் வேண்டுமானாலும், கடன் வாங்கலாம் என்ற அந்தப் பொற்காலம் மலையேறிவிட்டது, என்ற கசப்பான உண்மையை இப்போதாவது, அமெரிக்கா உணர வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் புதிய கரன்சி அறிவிப்பை, வரவேற்றுள்ள பிலிப்பைன்ஸ் நிதியமைச்சர் சீசர் வி.புரிசிமா,"அமெரிக்கா தனது அடிப்படைப் பொருளாதாரப் பிரச்னைகளைக் கவனிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

 இந்த நெருக்கடியைத் தொடர்ந்து, உடனடியாக ஜி 7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி, யூரோ பயன்படுத்தும் நாடுகளின் கடன் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என, இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி கூறியுள்ளார். ஆனால், ஜி 7 கூட்டமைப்பில் உள்ள, சீனா உள்ளிட்ட பிற நாடுகள், இதுபற்றி எதுவும் கூறவில்லை. அதனால், எப்போது கூட்டம் நடக்கும் என்பது, உறுதியாகத் தெரியவில்லை.
பாதகங்கள் என்ன?
 ""எஸ் அண்டு பி'யின் இந்த முடிவு, அமெரிக்க கடன் பத்திரங்களின் மீதான நம்பகத் தன்மையைக் குறைக்கும். பத்திரங்களின் மீதான வட்டி அதிகரிக்கும். அதற்கான பணத்தைச் செலுத்த முடியாத நிலை, அமெரிக்க அரசுக்கு ஏற்படும். அதனால், உலகளாவிய நிலையில், டாலர் மீதான மதிப்பு சரியும்.
இதன் தொடர்விளைவுகள், கணிக்க முடியாத அளவிற்கு இருக்கும். இதனால், மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி வருவதற்கான வாய்ப்பும் உள்ளது, என்பதைத் தள்ளி விடவும் முடியாது' என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாளை துவங்க உள்ள, உலகின் முக்கியப் பங்குச் சந்தைகளில், அமெரிக்க கடன் மதிப்பீட்டு குறைப்பின் விளைவு தெரியவரும்


    .
                   இந்தியாவை அமெரிக்க பொருளாதார வீழ்வு பாதிக்காது என இந்திய பொருளாதாரததை நிர்ணயிக்கும் அமைச்சர்கள் கதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இன்றைய இந்திய பொருளாதாரம் அமெரிக்காவின் வழிகாட்டலின் பெயரில் முழுக்க அமெரிக்காவைச் சார்ந்ததாகவே அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகில் பல நாடுகளின் நிலை அதுதான்.சீனாவும் கூட ஒரளவு அமெரிக்க பொருளாதாரக் கொள்கையான உலகமயமாக்கலில் உள்ள நாடுதான்.
எனவே அமெரிக்கா வின் பொருளாதார வீழிச்சி நம்மையும் பாதிக்கும் தன்மை கொண்டதுதான்.நமது பங்கு சந்தை எழ முடியாமல் வீழந்து தவழுவதைக் கண்டாலே தெரிய வில்லையா/
இந்திய பங்குகளில் முதலீடாக பல ஆயிரக்கணக்கான கோடிகளில் டாலர்களை அமெரிக்க நிறுவனங்கள் குவித்துள்ளன.அவைகள் ஒரு சேர அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டால் நமது நிலை என்ன?
முன்பு இடதுசாரிகளின் ஓயா எதிர்ப்பால் பல அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப் படாததால் குறிப்பாக வங்கிகள்,காப்பீடு நிறுவனங்கள்  தாக்குப்பிடித்தோம்.ஆனால் இப்போது அரசு நிறுவனங்கள் விற்பனை அதிகரித்து விட்டது.
காப்பீடு ,வங்கித்துறையும் தனியார்மயமாக்களுக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்திய ஆட்சியாளர்கள் அமெரிக்க வங்கிகள் ,காப்பீடு கழகங்கள் சீரழிவால் அமெரிக்க பொருளாதாரம் சீர்கெட்டதிப் பார்த்த பின்னரும் நம்நாட்டிலும் தனியார் மயமாக்கலை கைவிடாமல் தொடர்ந்தால் நம்மை  இப்போதைய ஆட்சியாளர்கள் வணங்கும்அந்த அமெரிக்காவால்கூட காப்பாற்ற முடியாது.
முந்தைய உலகப்பொருளாதர வீழ்ச்சியில் இந்தியா பாதிக்கப்படாததற்கு காரணமானது என்ன எனக்கண்டு அதை கடைபிடிக்கும் உணர்வுகூட இல்லாமல் நம் ஆட்சியாளர்கள் -காங்கிரசினர் இருப்பது நமது நாட்டின் பலவீனம்.
எல்லாவற்றுக்கும் அமெரிக்காவின் அறிவுரைகளைப் பின் பற்றும் மன்மோகன் -குழு வினர் அமெரிக்க வீழ்ச்சியில் எதை செய்யக்கூடாது என பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
   டாலர்களில் உலக வணிகம் செய்வதை தவிர்த்து ஐரோப்பிய கூட்டமைப்பு போல் பொதுவான புதிய கரன்சியை உருவாக்கி அதை உலக நாடுகளுக்கிடையே பயன் படுத்துவது தான் இனி எந்த நாட்டின் பொருளாதாரம் வீழந்தாலும் மற்றைய நாடுகள் தடுமாற வேண்டிய நிலை ஏற்படாது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அனிமேசன் படிக்காதவர்களும் எளிதாக டெக்ஸ்ட் அனிமேசன் உருவாக்க இலவசமாக உதவுகின்றது ஒரு தளம். தளத்தின் முகவரி http://textanim.com என்பது. இத்தளத்துக்கு செல்கின்றமை மூலம் எந்த மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் அனிமேசன் உருவாக்கலாம்.


அனிமேசன் செய்ய வேண்டிய வார்த்தையை தளத்தில் Text என்று கொடுக்கப்பட்டு இருக்கின்ற கட்டத்துக்குள் தட்டச்சு செய்தல் வேண்டும்.


Font type, Font size, Background color, Direction ( new ), Shadow Text Side, both right bottom no, Delay movement போன்றவற்றை விரும்பியபடி தேர்ந்தெடுத்து Generate என்கிற பொட்டானை பொத்தானை அழுத்த வேண்டும்.


நாம் உருவாக்கிய டெக்ஸ்ட் அனிமேசன் அடுத்த நொடியில் பக்கத்தின் முகப்பில் தெரியும்.


டெக்ஸ்ட் அனிமேசனின் பக்கத்தில் இருக்கும் Download என்கிற பொத்தானை சொடுக்கி Gif கோப்பாக நம் கணனியில் சேமித்து பயன்படுத்தலாம்.
_____________________________________________________________________________---
 சாதிக் பாட்சா தற்கொலைதான் செய்துள்ளார்,                                           
பரிசோதனை அறிக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு,
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாட்சா இவர் கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். சாதிக்பாட்சா மரணம் குறித்து விசாரணை நடத்து வதற்காக டெல்லியில் இருந்து அகில இந்திய விஞ்ஞான மருத்துவ கழக தடயவியல் நிபுணர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தனர். சாதிக்பாட்சாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த அவர்கள் இது தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டது உறுதி யானது. இது தொடர்பான அறிக்கை டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகளிடமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
================================================================================
                    A shop and police car burn as riot police try to contain a large group of people on a main road in Tottenham, north London - AFP 
சனி [06-08-11] இரவு வட இலண்டனில் ரோந்து சென்ற காவலர்கள் மீது பெட்ரொல் குண்டுகள் வீசப்பட்டு வாகனங்கள் சாம்பலாகின.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

                        
    *இடுகையின் படங்கள் சம்பவத்தை மட்டும் குறிப்பவை அல்ல.சில மன்ங்கவர்ந்தப்படங்களை இடையிடையே தரப்பட்டுள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?