இன்னோரு மகாத்மா?


அன்னா போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டாம்: சையது புகாரி உத்தரவு! 

டெல்லியில் அன்னா ஹஸாரே நடத்தி வரும் போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் ஆகிய கோஷங்கள் நிரந்தரமாகி விட்டன. இவை இஸ்லாமுக்கு எதிரானவையாகும்.
நாட்டையோ அல்லது மண்ணையோ வழிபடுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. மேலும், 10 மாதம் தனது கருவில் வளரும் குழந்தையை வளர்த்துப் பெற்றெடுக்கும் தாயை வழிபடுவதையே இஸ்லாம் அனுமதிப்பதில்லை. எனவே இந்தப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மதத்தை காரணமாக்கி மனிதர்களைத்துண்டு போடுகிறார்.முசுலிம்களும் இந்திய நாட்டின் குடிமக்கள்தானே.அவர்களையும் ஊழல் மற்றும் இந்திய ஆட்சியாளர்களின் முடிவுகள் பாதிக்கத்தானே செய்யும்.
அன்னா இந்துத்துவாவாதியாக இருக்கலாம்.ஆனால் அவர் ஊழலை எதிர்த்து செயல்படும் போது இந்திய மக்கள்,ஊழலை எதிர்ப்பவர்கள் ஒட்டு மொத்தமாக ஒருங்கிணைத்துள்ளார்.அவர் அதற்கு முயற்சித்து உதவியுள்ளார்.அவரை அதற்காக மாகாத்மா என்பதும் இன்னோரு காந்தி என்பதும் சரியல்ல.
அவர் மீது  ஊழல் எதிர்ப்பு தலைமையை மத்திய அரசுதான் தனது பிடிவாதம் மூலம் ஏற்றியுள்ளது.
அவர் ஊழல் எதிர்ப்பின் புள்ளியாக இருக்கிறார்.அவ்வளவுதான்.
இருக்கும் நாட்டின் மீதும்,மொழியின் மீதும் பற்றிள்ளாமல் வெறும் மதத்தின் மீது மட்டுமே பற்றை வைத்துக்கொண்டிருப்பது நடைமுறைக்கு நல்லதல்ல.முசுலிம்கள் தனித்தீவாக இருப்பது சரியல்ல.
ஆனால் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கிரிக்கெட் அணி வென்றால் கொண்டாடும் முறையும் சரியானதாக இல்லை.
மார்க்ஸ் கூறிய மதம் ஒரு அபின்[போதை] என்பது சையத் அகமது புகாரி போன்றோர் பேச்சுகள் மூலம் உறுதியாகிறது.



 லோக்பால் மசோதா குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அல்லது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தவிர வேறு யாருடனும் பேச மாட்டேன் என அன்னா ஹசாரே கூறியுள்ளார். லோக்பால் மசோதா குறித்து பேச்சுவார்த்தைக்கு தயார் என பிரதமர் அறிவித்தார். யாருடன் பேச்சுவார்த்தை நடத்துவது? என ஹசாரே குழுவினர் கேள்வி எழுப்பினர். ஆன்மீக குரு பையுஜி மஹராஜ், மகாராஷ்டிரா கூடுதல் தலைமை செயலாளர் சாரங்கி ஆகியோர் அன்னா ஹசாரேவை சந்தித்து அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. ஆனால், இதை வதந்தி என மறுத்தார் கிரண்பேடி. 

 இந்நிலையில் தனியார் டி.வி. சேனலுக்கு ஹசாரே நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசு சாரா நடுவர்கள் மூலம் லோக்பால் விஷயம் குறித்து பேச முடியாது. மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், கபில் சிபல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த வந்தாலும், அவர்களுடன் பேசமாட்டேன். பிரதமர் மன்மோகன் சிங் அல்லது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை தவிர வேறு யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டேன். இவ்வாறு ஹசாரே கூறியுள்ளார்.
கசாரே சில சமயங்களில் தன்னை ஊழலுக்கெதிராகப் போராடுபவர்களின் பிரதிநிதி என்பதில் இருந்து விலகி தான் மிகப் பெரியவர், அல்லது காந்தியின் மறு உரு என எண்ணி விடுகிறார்.
அரசு பிரதிநிதிகளுடன் பேசமாட்டேன் பிரதமர் தான் வர வேண்டும் என்பது சற்று அதிகப்படி..
பிரதிநிடிகளிடம் பேசி முடிவு கிடைக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளலாம்.பிரதமர் பதவிக்கென்று மக்கள் தர வேண்டிய மரியாதை உண்டு.அம்மரியாதை மன்மோகன்சிங்குக்கல்ல.பிரதமர் பதவிக்கு மட்டுமே.
அதைவிடுத்து தான் ரொம்ப பெரியவன் என மற்றவர் கள் உசுப்பேத்தலில் அவர் அளவுக்கதிகமாக நடப்பது சரியாகப்படவில்லை.
அரசு பிரதிநிதிகள் வருவதே பிரதமர் ஏற்பாடில்தானே.
மக்கள் இப்படிஊர்,ஊருக்குத்திரண்டுவருவது அன்னா கசாரே என்ற ‘மகான்”கூறிவிட்டதால் அல்ல.நாடு முழுக்க பரவியுள்ள மோசமான ஊழல் நோயை ஒவ்வோருவரும் எதிர்த்துதான் .அந்த ஊழல் எதிர்ப்பு மனப்பான்மைதான் அன்னாகசாரே என்ற குறியீடு மூலம் வெளிப்பட்டுள்ளது.அங்கு அன்னா இல்லையென்றாலும் வேறு தகுதியுள்ள ஒருவர் மூலம் அது சற்றுதாமதமாகவாது வெளிப்பட்டேத் தீரும்.
அன்னா காசாரே வை திடீர் மகாத்மாவாக்க ஒரு கூட்டம்[ஊடகங்கலிலும்]முயல்கிறது.அன்னா கசாரே அதற்கு தகுதியானவர்தானா?
குறிப்பிட்ட மதத்திற்கு அவர் துணைபோகக்கூடியவர்.
அவரின் பேச்சுக்களில் பா.ஜ.க.,வாடை வீசுகிறது.
நரேந்திர மோடியை மட்டுமே புகழ்ந்துவருகிறார்.
அறக்கட்டளை  யில் ஏற்பட்ட ஊழல் பாதிப்பால்தான் இன்று ஊழலுக்கு எதிராக முனைந்து நிற்கிறார்.
அவர் ந்மது விவாசாயிகள்-வேளாண்மை சீர்கேடுகளைப் பற்றி எந்த கருத்த்க்கலையும் கொண்டிருக்கவில்லை.அவர்களின் பிரச்னைகளுக்கும்,விலைவாசி உயர்வுக்கெதிராகவும்,பொருளாதார சீர்கேடுகளுக்கெதிராகவும் வாயை திறக்க வில்லை.
நாட்டில் உள்ள் அமற்றைய நிகழ்வுகளில் தனக்கு சம்பந்தமே இல்லை.ஊழலை மட்டுமே எதிர்கிறார்.அதுவும் தான் சொல்லும் முறைகளை மசோதாவில் செர்க்க வேண்டும் என்ற பிடிவாதம் மட்டுமே உள்ளது. 
அவர் சொல்லும் வழிகளில் ஊழல் ஒழிந்து விடுமா? என்றால் இல்லை .அவர் நோக்கம் பிரதமரியும் மசோதாவரம்புக்குள் சேர்க்க வேண்டும் என்பது சரி.ஆனால் சில வரிகளை முழுவதுமாக செயல்படுத்த முடியாதது.
அது எல்லாம் இருக்கட்டும்.மசோதா அவர் கூறியபடியே நிறைவெறிய பின் அவர் என்ன செய்யப்போகிறார்? இதுதான் நம் முன்னே உள்ள கேள்வி?
மற்ற அவலங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவாரா?
மாட்டார்.அப்படியே நடத்தினாலும் இதே போன்ற கூட்டம் வீறு கொண்டு எழுமா?
ஊடகங்களுக்கு ஒரு வேண்டு கோள் அவசரப்பட்டு அன்னா கசாரேவை ”இன்னொரு மகாத்மா”வாக்க முயலவேண்டாம்.அவரின் மறு பக்கம் அதாவது மற்ற கருத்துக்கள் நமக்கு வெளியாகவில்லை.அவைகளும் வரட்டும் வந்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம்..
மகாத்மா காந்தி பிறந்த நாள்

  

                   

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?