2-ஜி வேடிக்கையான விசாரணை.

                                                           


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளும் அப்போதைய நிதியமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச் சருமான ப.சிதம்பரத்துக்கும் தெரி யும் என்றும், அவரையும் விசாரிக்க வேண்டும் என்றும் சிபிஐ நீதிமன் றத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவின் வழக்கறிஞர் கூறினார்.

அதே நேரத்தில், சிதம்பரத்தை குற்றவாளியாக்க முயலவில்லை என் றும், அவருக்கும் எல்லாம் தெரி யும் என்று மட்டுமே கூறுவதாகவும் ராசாவின் வழக்கறிஞர் கூறினார்.

திங்களன்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது வாதா டிய ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் விற்பனையில் அப் போதைய நிதியமைச்சர் சிதம்பரத் துக்கும் ராசாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இருக்கவில்லை. மேலும் ஸ்பெக்ட்ரம் விற்பனை என்பது மத்திய அமைச்சரவை ஒட்டுமொத்தமாக எடுத்த முடிவு. இந்த விஷயத்தில் ராசா குற்றவாளி என்றால் ஒட்டுமொத்த அமைச்சர வையையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும். 2003ம் ஆண்டு மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு தான், அடுத்தடுத்து வந்த அரசுகள், அடுத்தடுத்து நடந்த அமைச்சரவைக் கூட்டங்களில் வழி மொழியப்பட்டது. உண்மை இப்படியிருக்க ராசா மட்டும் எப் படி குற்றவாளியாக்கப்பட்டார்?.

எனவே, பிரிவு 311ன் கீழ் அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அழைத்து விசாரியுங்கள். பிரதம ரின் முன்னிலையில் அவர் ராசா வுக்கு அறிவுரை தந்தாரா இல் லையா என்பதைத் தெரிவிக்கட் டும். அதன் பின்னர் தேவைப்பட் டால் பிரதமரையும் அழைத்து விசாரியுங்கள்.

அதே போல டிராய் விதிமுறை களை ராசா மீறிவிட்டதாக எதிர்க் கட்சிகள் கூறுகின்றன. அப்படி அவர் விதிமுறையை மீறியதை நிரூபிக்க எதிர்க் கட்சிகள் ஏதாவது ஆதாரங்களை தாக்கல் செய்யத் தயாரா?

இவ்வாறு ராசாவின் வழக் கறிஞர் கூறினார்.

சிதம்பரத்துக்கு எதிரான சுவாமியின் மனு ஒத்திவைப்பு

இந்நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தாக் கல் செய்த மனுவை தில்லி பாட்டி யாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

3 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

2ஜி வழக்கில் முன்னாள் நிதி யமைச்சர் சிதம்பரத்துக்கும் தொடர் புள்ளதாகவும், அவரை இந்த வழக்கில் சிபிஐ குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்றும் கோரி சாமி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து அக்டோபர் 12ம் தேதி தீர்மானிக்கப்படும் என்று அறிவித்தார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முன்னாள் மத்திய தொலைத் தொடர் புத்துறை அமைச்சர் ஆ. ராசா, அரசுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததாக சிபிஐ புதிய குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.

இந்திய தண்டனைச் சட் டம் பிரிவு 409-ன் கீழ் இந்த புதிய குற்றச்சாடடை சிபிஐ பதிவு செய்துள்ளது.

இதற்கு முன் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டால் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரைதான் சிறை தண்டனை கிடைக் கும் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில் இப் போது கூறப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டு நிரூபிக் கப்பட்டால் ராசாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண் டனை முதல் ஆயுள் தண் டனை வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்களன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதி பதி ஓ.பி.சைனி முன் சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் இந்த புதிய குற்றச்சாட்டை சுமத் தும் மனுவைத் தாக்கல் செய் தார். அதில் ராசாவோடு அவ ரது முன்னாள் தனிச் செய லாளர் சந்தோலியா மீதும், முன்னாள் தொலைத் தொடர் புத்துறைச் செயலாளர் சித் தார்த் பெகுரா மீதும் நம்பிக் கைத் துரோக குற்றச் சாட்டை சிபிஐ சுமத்தி யுள்ளது.

மேலும் திமுக எம்பி கனிமொழி மற்றும் ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர் லெஸ் ஆகிய நிறுவனங்கள் மீது 409-வது பிரிவின் கீழ் அத்துமீறல் மற்றும் 120பி பிரிவின் கீழ் சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவு களின் கீழ் குற்றச்சாட்டு களை சிபிஐ சுமத்தியுள் ளது.

மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவு களிலும் சிபிஐ குற்றச்சாட் டுகளை பதிவு செய்துள் ளது.


ப.சிதம்பரம் குறித்த கடிதம் வெளியானது எப்படி?  பிரதமர் அலுவலகம் மீது பிரணாப் குற்றச்சாட்டு
                       
 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் குறை கூறி நிதியமைச் சகத்திலிருந்து எழுதப்பட்ட கடிதம் வெளி யாக பிரதமர் அலுவலகமே காரணம் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகிறது.

நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் 2ஜி ஊழலைத் தடுக்கத் தவறி விட்டார் என்று மத்திய நிதியமைச்சகம் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் விற்பனை விவ காரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க நிதியமைச்சராக இருந்த ப.சிதம் பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் பிரணாப் முகர்ஜியின் ஒப்பு தலுக்குப் பிறகு தான் பிரதமர் அலுவலகத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து இந்த ஊழலில் ப.சிதம் பரத்திற்கும் தொடர்புள்ளது என்ற குற்றச் சாட்டு வலுத்துள்ளது. அவர், ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலி யுறுத்தி வருகின்றன. ஆனால், சிதம்பரத் தின் நேர்மையில் தனக்கு சந்தேகமில்லை என்று கூறியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அவரை விட்டுக் கொடுக்க மாட் டேன் என்று கூறிவிட்டார்.

இந்த விவகாரத்தில் பிரணாப் முகர்ஜி மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந் தியும் ப.சிதம்பரமும் கோபத்தில் உள்ள நிலையில், ஞாயிறன்று அமெரிக்காவில் இருந்தபடி ப.சிதம்பரத்துடன் தொலை பேசியில் பிரணாப் பேசினார்.

அப்போது தனது கடிதம் குறித்து அவர் விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது. மேலும் நியூயார்க் நகரில் இருந்த பிரத மரையும் பிரணாப் முகர்ஜி சந்தித்தார்.

அப்போது, இந்தக் கடிதம் வெளியே கசிந்ததற்கு நான் காரணமல்ல, அதை பிரதமர் அலுவலகம்தான் வெளியிட்டுள் ளது. நிதி அமைச்சகம் வெளியிடவில்லை என்று பிரணாப் கூறியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் திங்களன்று, பிரணாப் நாடு திரும்பியுள்ளார்.

சட்ட அமைச்சர் பேட்டி

இந்நிலையில், பிரதமர் அலுவலகத் துக்கு நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கடி தம் எழுதிய விஷயம் அற்பமானது. இதற் கெல்லாம் அலட்டிக் கொள்ளத் தேவை யில்லை என்ற ரீதியில் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத்து தெரி வித்துள்ளார்.

அந்த கடிதத்தை நானும் பார்த்தேன். கவலைப்படும் அளவுக்கு அதில் எந்த விஷயமும் இருப்பதாகக் கருதவில்லை என குர்ஷித் தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?