கடிதங்கள் 84,.

 2ஜி உரிமங்கள் விநியோகம் உள்பட பல்வேறு விவகாரங்களில் தொலைத்தொடர்பு துறை தொடர்பான ஆலோசனைகளையும் கவலைகளையும் தெரிவித்து பிரதமர் அலுவலகத்துக்கு 84 கடிதங்களை எம்பிக்கள் எழுதி உள்ளனர்.
                        

2006-ல் 2 கடிதங்களும், 2007-ல் 18 கடிதங்களும்,  2008-ல் 21 கடிதங்களும், 2009-ல் 9 கடிதங்களும் 2010-ல் 21 கடிதங்களும் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை 13 கடிதங்களும் பிரதமர் அலுவலகத்துக்கு எழுதப்பட்டுள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தத் தகவல் தற்போது தெரியவந்துள்ளது. விவேக் கார்ட் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்விகேட்டு இந்த தகவலைப் பெற்றுள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் எம்பி சுரேந்திர பிரகாஷ் கோயல், சுயேச்சை எம்பி ராஜீவ் சந்திரசேகர், பாஜகவின் முரளி மனோகர் ஜோஷி, சமாஜவாதிக் கட்சி முன்னாள் தலைவர் அமர் சிங், மார்க்சிஸ்டின் சீதாராம் யெச்சூரி, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் அஷ்வனி குமார் உள்ளிட்ட பலர் கட்சி எல்லைகளைக் கடந்து பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
2007-ல் பாஜகவின் முரளி மனோகர் ஜோஷி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் விநியோகத்தில் புதிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவான போக்கு குறித்தும், நாட்டின் பாதுகாப்பு குறித்தும் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நவீனத்துவம் கொண்டுவரப்படும்போது உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதுபோன்ற முதலீடுகளை விரிவுபடுத்துவது நமது பாதுகாப்பு நலன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடும் என ஜோஷி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2008-ம் ஆண்டு 2ஜி உரிமங்கள் மார்க்கெட் மதிப்பைவிட குறைந்தவிலைக்கு விநியோகிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜனவரி 2008-ல் 9 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 உரிமங்கள் 2001-ல் நிர்ணயிக்கப்பட்ட விலையிலே வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கட்டணம் எதுவும் செலுத்தாமல் பழைய ஜிஎஸ்எம் ஆபரேட்டர்கள் கூடுதல் ஸ்பெக்ட்ரம் வைத்திருப்பது குறித்து 2008 நவம்பர் 17-ம் தேதி பிரதமருக்கு அமர்சிங் கடிதம் எழுதியுள்ளார்.
இதேபோல் எம்பிக்கள் பலரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் குறித்து தங்களின் கவலைகளையும், யோசனைகளையும் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
_________________________________________________
அம்பானிக்கு மீண்டும் நற்சான்றிதழ்!
 2ஜி ஊழலில் அனில் அம்பானியின் பங்கு குறித்து விசாரித்து வருகிறோம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த சிபிஐ அவர் எதுவும் தவறுசெய்யவில்லை என நற்சான்றிதழ் அளித்துள்ளது.
                                  
பல்வேறு நிறுவனங்களை அமைத்ததிலும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கான நிதிப் பரிவர்த்தனையிலும் அனில் அம்பானி குற்றமிழைத்துள்ளார் என்று கூறுவதற்கு ஆவணங்கள் மூலமாகவோ அல்லது வாய்மொழியாகவோ விசாரணையில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் செப்டம்பர் 29-ம் தேதி தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில் சிபிஐ தெரிவித்துள்ளது.
 கலைஞர் தொலைக்காட்சி பங்குதாரர் அலைவரிசை கையூட்டு பணம் கலைஞர் தோலைக்காட்சிக்கு வந்து சென்றது என்பதாலேயே கனிமொழி திகார் சிறையில் 5 மாதங்களாக அடைத்து வைக்கப் பாட்டுள்ளார்.
 அவர் பிணையில் கூட செல்ல மறுக்கப் பட்டு வருகிறது.
ஆனால் 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் நேரடியாக சம்பந்தப் பட்டும்,ஒதுக்கீடு பெற்றும் பலன் அடைந்த அம்பானியை  குற்றமே செய்யவில்லை என்றும் அவர் ரொம்ப ”நல்லவர்”னும் நற்சான்றுகளை சி.பி.ஐ.வாரி வழங்குகிறது.டாடா வையும் அவ்வண்ணமே நடத்துகிறது.
       2ஜி வழக்கே இவ்வளவு லாபம் கிடைத்திருக்கலாம் என்ற அன்மானத்தின் அடிப்படியில் தான் நடத்தப்படுகிறது.இதில் அம்பானி எப்படி ஒதுக்கீடு பெற்றார். அதனை எப்படி விற்றார் என்று சி.பி.ஐ. விசாரிக்கவேண்டாமா? கைது செய்ய வேண்டாமா? வேண்டாம் என்றால் கனிமொழி,ஆ.ராசா கைது மட்டும் எப்படி சரியாக இருக்கும்.
 அம்பானி பரிசுத்தமானவரா? இல்லையே.
தனது ரிலையன்ஸ் மூலம் வெளிநாடு அழைப்பை எல்லாம் சாதாரண உள்ளுர் அழைப்பாகக் காட்டி 1400 கோடிக்கு பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தை ஏமாற்றி மாட்டிக் கொண்டு வெறும் 14 கோடியை மட்டுமே அபராதமாகக் கட்டிய நாணயமானவராயிற்றே.
அது மட்டுமா? கிருஷ்ணா-கோதவரி படுகை பெட்ரோல் மோசடியில் 40000 கோடி அரசுக்கு இழைப்பை ஏற்படுதும்படி ஏமாற்றியவர்தானே.
அவரை மட்டும் வெளியே விடுவதும் நல்லவர் என சான்று வழங்குவதும் சி.பி.ஐ.மீது மிக அதிகமான அவநம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தி விட்டது.
இனி எந்த சோப் போட்டாலும் அந்தக்கறை போகாது.
சி.பி.ஐ.சொல்லும் உண்மையான காரணங்கள் கூட மக்களால் நம்ப இயலாத நிலை உருவாகிவிட்டது.
                                        

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?