அமெரிக்காவுக்கு வந்த சோதனை...

 வேலைவாய்ப்புகள் ,முதலீடு தேடி இந்தியர்கள் அமெரிக்கா ஒடியது போய் இன்று இந்தியா தனது நாட்டில் முதலீடு செய்து தொழில் வாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு ஏற்படுத்தித் தர அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
            
இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவில் முதலீடுகளை எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது போன்ற முதலீடுகளால் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளைஉருவாக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் அமெரிக்காவை தவிர்த்து பிற நாடுகளிலேயே முதலீடு செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிகளவிலான நேரடி அந்நிய முதலீடுகளால் வேலைவாய்ப்பை அதிகப்படுவதுடன் அமெரிக்காவின் பொருளாதார நிலையையும் சீரடையச் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். 1990 ம் ஆண்டுகளில் உலகளவில் வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்கு 25 சதவீதம் இருந்த்து.ஆனால் தற்போது 12 சதவீதம் பங்கு மட்டுமே உள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார நவீனமயமாக்கல்-தாராளமயமாக்கல்-உலகமயமாக்கள் தொடர்பான புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவைத்தான் இப்போது உலகம் அனுபவித்து வருகிறது.
அடுக்கி வைத்த சீட்டுக்கட்டின் நிலையில் உலக நாடுகள் இருந்தது.அமெரிக்காவின் கடன் வாங்கல் பொருளாதாரம் சரிவை எதிர்நோக்க ஆரம்பித்ததும் உலக நாடுகள் அனைத்துமே சரிந்து விழ ஆரம்பித்தன.
                                               
அந்த நிலையிலும் தாக்கு பிடித்து நின்ற நாடுகளில் மிக முக்கியமானவை சீனாவும்,இந்தியாவும்தான்.
காரணம் இரு நாடுகளும் முற்றிலும் புதிய பொருளாதாரக் கொள்கையில் இறங்கி விடவில்லை.இடதுசாரிக் கொள்கையால் சீனாவும்.இடது சாரிக்கட்சிகளினால் இந்தியாவும் தப்பின.
மக்களவையில் இடதுசாரிகளின் தயவுனால் ஆட்சியை  நடத்தவேண்டியது மன்மோகனுக்கும்-சோனியாவுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தினாலும் இடதுசாரிகள் எல்.ஐ.சி,வங்கிகளை தனியார் மயமாக்க விடாமல் தடுத்து உறுதியாக நின்றதால் இந்தியா  பொருளாதார வீழ்ச்சி அலையில் இருந்து தப்பியது.
இதே காலக்கட்டத்தில் அமெரிக்காவில் மொத்தம் 400க்கும் மேற்பட்ட வங்கிகளும்- காப்பீட்டு நிறுவனங்களும் மூடப்பட்டு மக்களின் பணம்,சேமிப்பு பறிபோனது.லட்சக்கணக்கில் மக்கள் தாங்கள் பார்த்துவந்த வேலைகளையு இழந்தனர்.
அமெரிக்காவிடம் கணினி தொடர்பான பணிகளை பெற்று இந்தியாவில் நிறுவனங்களை நடத்திய நிறுவனங்கள் முதலில் தள்ளாடிய போதும் உலகின் மற்ற நாடுகளிலும் பணிகளை ,ஒப்பந்தங்களைப் பெற்றதால் சமாளித்துக்கொண்டன
இன்று பொருளாதரத்தை நிமிர்த்துவதாகக் கூறிவந்த ஓபாமாவும் தோல்வியைத்தழுவி விட்டார்.
அடுத்த முறை ஆட்சியைக்கைப்பற்ற முடியாதவாறு செல்வாக்கை இழந்து விட்டதாகக் குறப்படுகிறது.
இன்றைய நிலையில் இளைய தலைமுறையின அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் இழந்து துன்பப்படுகின்றனர்.
                                                      
அமெரிக்க அரசின் மீதும் அரசை ஆட்டிப்படைக்கும் ’வால்ஸ்ட்ரீட்’ பங்குச்சந்தை  தரகர்களின் மீதும் கடுங்கோபம் அடைந்துள்ளனர்.அதன் பாதிப்புதான் ‘வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம்”போராட்டமாக வெடித்துள்ளது.
ஆயிரக்கணக்கான வாலிப வயதினர் சாலைகளில் தங்கி போராடுகின்றனர்.
இந்த போராட்டம் அமெரிக்க மாநிலங்கள்தோறும் பரவி வருகிறது.
அமெரிக்க அரசு  போராட்டக்காரர்களைஅடக்க பல்வேறு முயற்சிகளில் இறங்கி வருகிறது.ஆனால் போராட்டமோ பரவிக்கொண்டிருக்கிறது.
இந்திய ஊடகங்களோ அதைப்பற்றி செய்திகளைத்தராமல் அமைதி காத்துவருகிறது.
ஆனாலும் இதோ அமெரிக்க ஆட்சியாளர்கள் இந்தியா,சீனா ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் முதலீடு செய்து வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுமளவு நிலைமை உருவாகிவிட்டது.
மன்மோகன் சிங் அமெரிக்காவில் ஐ.நா.கூட்டத்தில் புதிய பொருளாதாரக்கொள்கையின் எதிர்விளைவுகளை இந்தியாவும் ,உலகமும் சந்திக்கும் நேரம் இது என்று திருவாய் மலர்ந்துள்ளார்.
புதிய பொருளாதாரத்தின் தீவிர ஆதரவாளரான மன்மோகனே இப்படி கூறுமளவு நிலை உருவாகிவிட்டது. 
                               

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?