மின்வெட்டுத் திருவிழா.


ற்போது மின்வெட்டு தான் பிரச்னையாக உள்ளது. வரும் சில நாட்களில் இந்த நிலைமை மேலும் மோசமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், தேசிய அனல் மின்கழகத்திற்குச் சொந்தமான ஐந்து அனல் மின் நிலையங்களில் இன்னும் ஓரிரு நாட்களுக்குத் தான் நிலக்கரி கையிருப்பு உள்ளது.ஆனால் அதை அதிகரிக்க எந்தவிதமுமான தேவையான நடவடிக்கையும் கழகம் இது வரை எடுத்ததாகத் தெரியவில்லை.அரசு மின் வெட்டின் கோரத்தை அறிந்ததாகத்தெரியவில்லை.
        குடியரசுத்தலைவர்,பிரதமர்,முதல்வர்கள்,அமைச்சர்கள்,வீடுகளுக்கு மின் இணைப்பை நிறுத்திவைத்தாலே அவர்கள் இது தொடர்பாக விரைவான நடவடிக்கைகளை எடுப்பார்கள் போல் தெரிகிறது.
                             
டில்லி, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தற்போது மின் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு நிலவுகிறது. பல மாநிலங்களில், நாள் ஒன்றுக்கு அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரம் முதல் நான்கு மணி நேரம்  மின்வெட்டுமறிவிக்கப்படாத மின் வெட்டு அதிக நேரமும் இருந்துவருகிறது. இந்த மின்வெட்டு அடுத்து வரும் நாட்களில் மிகவும் மோசமாகலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அனல் மின் கழகத்திற்கு சொந்தமான ஐந்து மின் நிலையங்களில், அடுத்த ஓரிரு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி உள்ளது. சில மின் உற்பத்தி நிலையங்கள் தற்போது பாதியளவுக்கு மட்டுமே மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன. தேசிய அனல்மின் கழகத்திற்கு சொந்தமான 13 நிலக்கரி சேமிப்பு கிடங்குகளில் இருந்த, நிலக்கரியின் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்திய நிலக்கரி நிறுவனத்தில் இருந்து, மின் நிலையங்களுக்கு சப்ளை செய்யப்படும் நிலக்கரி அளவும் 20 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. அனல் மின் நிலையங்களில் நிலக்கரியின் அளவு குறைவாக இருப்பதற்கு, நிலக்கரி உற்பத்தியாகும் சில பகுதிகளில் கனமழை பெய்வதும், கடந்த வாரத்தில் நிலக்கரி நிறுவன ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்தது மற்றும் ஆந்திராவில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கை போராட்டத்தினால், நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது போன்றவையே காரணம்.
                           

’நிலக்கரி சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் கடும் மழை பெய்வதால், சுரங்கப் பணிகள் பாதிக்கப்பட்டு, நிலக்கரி சப்ளை தடைபட்டுள்ளது. இருந்தாலும், இது தொடர்பாக ஆலோசனை நடத்தி பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய அனல் மின் கழகம் கேட்டுக் கொண்டால், மேலும் நிலக்கரி அளிக்கப்படும்,'' என்று மத்திய நிலக்கரி அமைச்சகம் கூறியுள்ளது.
தேசீய அனல் மின் கழகம் இதுவரை கூடுதல் நிலக்கரி கேட்டு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.  நிலக்கரி அதிக அளவில் உற்பத்தியாகும் மேற்குவங்க மாநிலத்திலும், மின் உற்பத்தி நிலைமை மோசமாக உள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனத்திடம் இருந்து நிலக்கரியைப் பெறக்கூடிய, மாநில மின் நிறுவனங்கள் அதற்குரிய பணத்தைத் தராமல் அதிக அளவில் பாக்கி வைத்து உள்ளதால், நிலக்கரி சப்ளை நிறுத்தப்பட்டு, கடும் மின்வெட்டு அமலாகியுள்ளது. மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டா உட்பட அம் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தில், 875 மெகாவாட் குறைவாகக் கிடைப்பதால், மின் வெட்டின் தீவிரம் அதிகமாக உள்ளது. குஜராத் மாநிலத்தில் மின்சாரப் பற்றாக்குறை பிரச்னை இல்லை என்றாலும், மத்திய அரசால் இயக்கப்படும் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து மாநிலத்திற்கு சப்ளையாகும் நிலக்கரி 30 சதவீதம் அளவுக்கு குறைந்து உள்ளதால், மற்ற மாநிலங்களுக்கு மின் வினியோகம் செய்வதை நிறுத்த, முதல்வர் மோடி அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ளூர் அனல் மின்நிலையங்களும் சரிவர இயங்காமலும்,வெளி மாநிலங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரமும் தட்டுப்பாடாகியுள்ளதால் இனி வரும் காலங்களில், மின்வெட்டு கூடுதலாக அமலாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.மின் வெட்டைப் போக்குவதாகக் கூறி வாக்குகள் பெற்றுஆட்சியில் உள்ளவர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியான தகவல்தான்.
                                                  வெப்பமும்,புழுக்கமுமாய் மக்கள்.         
க்கள் நிலை அது எப்பவும் போலத்தான் நிர்வாகத்திறனும் ,மக்களுக்கு மின்சாரம் தட்டுப்பாடின்றி வழங்கவேண்டும் என்ற எண்ணமும் இல்லாத ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்த பலனை அனுபவித்துதானே ஆக வேண்டும்.
88888888888888888888888888888888888880000000000000000008888888888888888888888888888888888888888888
மீண்டும்,மீண்டும் குற்றசாட்டுகள்,
                  

                 "தயாநிதி, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தை விற்பதற்கு, தன் பதவியை தவறாகப் பயன்படுத்தி, எப்படியெல்லாம் மறைமுகமாக நிர்பந்தம் செய்தார் என்பது குறித்து, சி.பி.ஐ., தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, "டிராய்' தலைவராக உள்ள ஜே.எஸ்.சர்மா, தயாநிதிக்கு பக்கபலமாக இருந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
"தயாநிதி, 2004 - 2007ல் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தை விற்பதற்கு, தன் பதவியைப் பயன்படுத்தி, மறைமுகமாக நிர்பந்தம் செய்தார்' என, அந்நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன், கடந்த மே மாதம் புகார் கொடுத்தார்.
ஜனவரி, மே மாதங்களில் எழுந்த ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக, கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தாமதமாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் துவக்கியது.
இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள தயாநிதி, கலாநிதி வீடுகள், சன், "டிவி' அலுவலகம் மற்றும் டில்லி, ஐதராபாத் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் மட்டும் சி.பி.ஐ., அதிகாரிகள், கடந்த, 10ம் தேதி சோதனை நடத்தினர்.
இந்த சோதனை நடத்துவதற்கு முன்பாக, தயாநிதி மீது முதல் தகவல் அறிக்கை, பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

                       
இந்த அறிக்கையில் தயாநிதி, கலாநிதி, ரால்ப் மார்ஷல், அனந்தகிருஷ்ணன் தவிர, சன் டைரக்ட், மலேசிய கம்பெனிகளான ஆஸ்ட்ரோ, மேக்சிஸ் ஆகிய மூன்று கம்பெனிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், முதல் தகவல் அறிக்கையில், ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பதற்கு தயாநிதி எந்தெந்த வகையில் தன் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்பது குறித்து விலாவாரியாக சி.பி.ஐ., பட்டியலிட்டுள்ளது. இது குறித்த முழு விவரம் தற்போது தெரியவந்துள்ளது.
ஏர்செல் நிறுவனத்தை கட்டாயப்படுத்தி, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க செய்ததன் மூலம், 600 கோடி ரூபாய் லஞ்சமாக திரும்பிவந்துள்ளது.
ஏர்செல் விற்பனையை வெற்றிகரமாக நடத்தி கொடுத்ததற்கு கை மேல் பலனாக, தயாநிதியின் சகோதரர் கலாநிதிக்கு சொந்தமான சன் குழுமத்திற்கு, 549 கோடி ரூபாய், முறைகேடாக வந்துள்ளது.
இவ்வாறு வந்த பணம், மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ மூலம் வந்துள்ளது. மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் டி.அனந்த கிருஷ்ணன். ரால்ப் மார்ஷல், ஆஸ்ட்ரோவின் தலைமைச் செயல் அதிகாரி. எனவே இவர்கள் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான சதி திட்டங்கள், டில்லி, சென்னை, மொரீஷியஸ், மலேசியாவில் நடந்துள்ளன. ஏர்செல் நிறுவனம், மேக்சிஸ் நிறுவனத்திற்கு கைமாறுவதற்கு, காரணக்கர்த்தவாக செயல்பட்டவர் தயாநிதி.
இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு முன், முக்கிய சந்திப்புகள்; 2005ல், ரால்ப் மார்ஷல், சிவசங்கரனை சந்தித்துபேசினார். ஏர்செல் நிறுவனத்தை மேக்சிசுக்கு கைமாறுவது என் பொறுப்பு என்று தயாநிதி கூறியதாக ரால்ப், சிவசங்கரனிடம் விளக்கியுள்ளார்.
ஒரு மாதம் கழித்து, தயாநிதியின் சகோதரர் கலாநிதி, சிவசங்கரனை சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்புக்கு பின், தயாநிதி உடனடியாக சிவசங்கரனை சந்தித்து ஏர்செல் பங்குகள் முழுவதையும் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கும்படி கூறியுள்ளார். இச்சந்திப்பு நடந்த ஒரு சில மணி நேரத்தில், மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல்லை கையகப்படுத்தியதாக, சிவசங்கரனுக்கு தகவல் வந்துள்ளது.
சிவசங்கரனுக்கு லைசென்ஸ் வழங்காமல் தாமதப்படுத்தியதன் மூலம், அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சிவசங்கரனுக்கு லைசென்ஸ் தாமதப்படுத்துவதற்கு , தயாநிதி பேருதவி செய்தவர், அப்போது தொலைத்தொடர்பு கூடுதல் செயலராக இருந்த ஜே.எஸ்.சர்மா. இவர் தற்போது டிராய் அமைப்பின் தலைவராக உள்ளார்.
சிவசங்கரன் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்த போது, தொலைத் தொடர்புத் துறையில் உள்ள மூத்த அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர். ஆனால் அதை நிறுத்திவைத்துள்ள தயாநிதி, அதை தாமதப்படுத்தும் நோக்கில் ஜே.எஸ்.சர்மாவிடம் கூடுதல் அறிக்கை கேட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, லைசென்சை தாமதப்படுத்தும் நோக்கில் ஜே.எஸ்.சர்மா பரிந்துரை குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். இதை அடிப்படையாக வைத்து சிவசங்கரனுக்கு லைசென்ஸ் வழங்குவது தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
ஏர்செல் மேக்சிசுக்கு கைமாறிய பிறகு நிலுவையில் இருந்த லைசென்ஸ்களை விரைவாக பைசல் செய்வதற்கு சர்மா உதவியுள்ளார். இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் விலாவாரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.                                                                                                                         
டிராய் தலைவராக உள்ள ஜே.எஸ்.சர்மா, "2ஜி' விவகாரத்தால் அரசுக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியிட்டு இருந்தார். இது 2ஜீ வழக்கில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.தற்போதுசர்மாவின் பெயரும் வழ்க்கில் இணைக்கப்பட்டிருப்பது 2ஜி வழ்க்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
                                                    

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?