மக்களும்-போராட்டங்களூம்

இன்னும் நான்கு நாட்களில், உலக மக்கள் தொகை, 700 கோடியாகிறது. உலக மக்கள் தொகையில், 10 முதல், 24 வயதுள்ளவர்களின் எண் ணிக்கை, 180 கோடி.
                 
 உலகைப்பொறுத்தவரையில் இந்தியாவில் மக்கள் பிறப்புவிகிதம் அதிகம்.இந்தியாவிலோஉ.பி.யில் பிறப்பு விகிதம் அதிகம் என்பதால் 700வது கோடி குழந்தையின் பிறப்பை லக்னோவில் கொண்டாட உள்ளார்கள்.வரும் 31ம் தேதி 700கோடியை மக்கள் தொகை தொடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதால் அன்றே விழா கொண்டாடப்படும்.
_______________________________________________________

கனடா டொரன்டோவில் ‘பொங்கு தமிழ்’விழா! 

                  

பொங்கு தமிழ் என்று சங்கே முழங்கு!

கனடியத் தமிழர்களால் நிகழ்த்தப்படும் மூன்றாவது பொங்கு தமிழுக்கான இறுதி ஏற்பாடுகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழர்கள் பெருமளவில் வாழும் கனடிய நகரங்கள் எங்கும் பொங்கு தமிழ் பற்றிய செய்திகள் பரவலாகி களைகட்டியுள்ளது.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னரே இங்குள்ள பொது நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்திலும் பொங்கு தமிழை எழுச்சியூட்டும் சுவரொட்டிகள் அலங்கரித்திருந்தன. காலமும் நேரமும் இதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாயினும், எங்கே நடைபெறும் என்பதை அப்போது அறிவிக்கப்படாததால், இது எங்கே நடைபெறுகின்றது என்ற கேள்வி தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவரிடமும் எழும்பியிருந்தது.

வாராவாரம் வித்தியாசமான சுவரொட்டிகளை வௌ;வேறு இடங்களில் காணக்கூடியதாக இருந்தது. ஆர்வமுள்ள பல தொழிலதிபர்கள் தாமே முன்வந்து இது தொடர்பான துண்டுப் பிரசுரங்களையும் பல்லாயிரக்கணக்கில் அச்சடித்து விநியோகித்தார்கள்.

2004ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில், கனடாவின் முதலாவது பொங்கு தமிழ் எந்த இடத்தில் நடைபெற்றதோ, அதே குயின்ஸ் பார்க் திடலில் (ஒன்ராறியோ மாகாண அரசின் கட்டடத்துக்கு முன்னால்) இந்த மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை சரியாக பகல் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கு தமிழ் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்குக் கட்டியம் கூறுவதுபோல இங்குள்ள சமூக வர்த்தகர்கள் பொங்கு தமிழ் பொறிக்கப்பட்ட மஞ்சள்-சிவப்பு வர்ணத்தினாலான பிளாஸ்டிக் பைகளில் தமது விற்பனைப் பொருட்களை வழங்கி தங்களுடைய தார்மீக ஆதரவைக் காட்டினர்.

இந்த வாரத்தில் வௌ;வேறு விதமான துண்டுப் பிரசுரங்களை சமூக நிறுவனங்கள் பிரசுரித்து விநியோகம் செய்தன.

முள்ளிவாய்க்கால் பின்னடைவுக்குப் பின்னர் ‘நாம் தோற்றுப் போனோமோ’ என்ற கவலையில் துயருற்றிருந்த கனடியத் தமிழர்கள் பொங்கு தமிழ் அறிவிப்புக் கண்டு உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். இதனை ஏற்பாடு செய்துள்ள கனடியத் தமிழர் சமூகத்துக்கும் தமிழ் இளையோர் சமூகத்துக்கும் இங்குள்ள பொது அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், பழைய மாணவர் மன்றங்கள், ஊர்ச் சங்கங்கள் என்பன ஒன்றுபட்டு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றன.
                                     
போக்குவரவு ஏற்பாடுகளை இந்நிகழ்வு ரொறன்ரோ நகரின் மையப்பகுதியில் நடைபெறுவதால், பொதுப்போக்குவரவுச் சேவையையே அனைவரும் பயன்படுத்த விரும்புகின்றனர். ஆனாலும், முதியோர், நடமாட்ட வசதி குறைந்தவர்கள் சேர்ந்து வருவதற்கு உதவியற்றவர்களின் வசதி கருதி ரொறன்ரோ பெரு பெருநகரில் ஐந்து மையங்களிலிருந்து விசேட போக்குவரவு ஏற்பாடுகளை சமூக வர்த்தகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். மல்வேர்ன் சென்டர், ஜீ.ரி.ஏ. ஸ்குயார், எஸ்.பி.இம்போட்டர்ஸ் மற்றும் இரா.சுப்பர் மார்க்கட் ஆகிய இடங்களிலிருந்து புறப்படும் பேருந்துகளில் பயணிக்க விரும்புபவர்கள் 416 450 9661 என்ற இலக்கத்துடனும், மிசிசாகாவில் டன்டாஸ்-ஹியுரொன்ராறியோ (ர்றல 10) பகுதியிலிருந்து புறப்படும் பேருந்துகளில் பயணிக்க விரும்புவர்கள் 905 290 3000 என்ற இலக்கத்தை அழைக்கவும்.
                               

மேற்குறிப்பிட்ட இடங்களிலிருந்து பேருந்துகளில் வருவதற்கு கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. சமூக வர்த்தகர்களே இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளனர்.

பொங்கு தமிழ் நிகழ்வை முழுமையாக வெற்றியடையச் செய்வதற்காக பெரும்பாலான தமிழர் வர்த்தக நிறுவனங்களும் அன்று நண்பகலுடன் மூடப்படுமென உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

மொன்றியலில் இருந்து பொங்கு தமிழுக்கு வருகை தருவதற்கு பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
1 514 558 4235 அல்லது 1 514 605 9870 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெறலாம்.

கனடா பொங்கு தமிழ் சிறப்பாக நிகழ்வதற்கு கனடிய தேசிய மட்டத்திலான 180இற்கும் அதிகமான பொது அமைப்புகளை உள்ளடக்கிய கனடிய சமாதானப் பேரவை தனது பூரண ஆதரவை வழங்கியுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள பல்வேறு தமிழர் அமைப்புகளும் இதனை வாழ்த்தி வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தங்கள் அரசியல் கட்சியின் சார்பில் வாழ்த்தினை வழங்கியுள்ளார். 2001ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட வேளையில் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த கஜேந்திரனே அதன் பிரதான ஏற்பாட்டாளராக இருந்தவர்.

பொங்கு தமிழில் கலந்துகொள்பவர்கள் வழமையான நடைமுறைகளை பின்பற்ற முடியும். இதில் எந்த மாற்றமும் இருக்காது. பொதுமக்கள் தங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்துக்கு எந்தத் தடையும் இருக்காது. எனவே, தவறான முறையில் சிலர் தெரிவிக்கும் விடயங்களை நம்ப வேண்டாம் என்று நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மிகப் பெருந் தொகையான மக்கள் நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கான வேண்டிய வசதிகளும் பொது அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கு தமிழ் எங்கும் தங்கட்டும்
பொங்கு தமிழ் என்றும் நிலைக்கட்டும்.
பதிவு தளத்தில் இருந்து,
+++++++++++++++++++++====================+++++++++++++++++++++++++++++++++++============++++++++

தூக்கிட ஆட்சேபனை இல்லை.தமிழக அரசு மனு.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்தியஅரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.தூக்கிடுவது மத்திய அரசின் முடிவு என தமிழக அரசு
தெரிவித்துவிட்டது.              
மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுவை இந்திய ஜனாதிபதி நிராகரித்த பிறகு, அவர்கள் மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.
அவர்களின் மனுக்களை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் இவர்களின் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு தற்காலிக தடைஉத்தரவு பிறப்பித்திருக்கிறது.தங்களின் கருணை மனுக்கள் மீதான இறுதி முடிவை எடுப்பதில் இந்திய ஜனாதிபதி காட்டிய பல ஆண்டுகால தாமதத்தை காரணம் காட்டி இவர்கள் தங்களின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்கள்.
இந்த பின்னணியில் இவர்களின் மனுக்களை எதிர்த்திருக்கும் இந்திய நடுவணரசு, இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொன்ற வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இவர்களை மற்ற குற்றவியல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிட முடியாது என்றுவழக்குரைஞர்சந்திரசேகரன்வாதாடினார்.
அதேசமயம்,” தமிழக அரசு இந்த விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அனைத்தும் மத்திய அரசுக்கே இருப்பதாகவும், தமிழக அரசுக்கு இதில் முடிவெடுக்க தனக்கு இல்லை அதிகாரமில்லை என்றும் பதில் மனு தாக்கல் செய்திருப்பதா”கவும் அவர் கூறினார்.
 மூவரின் மரணதண்டனைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவின் தமிழக அரசு நீதிமன்றத்தில் இப்படியான மனுவை தாக்கல் செய்திருப்பது நம்பிக்கைத் துரோகம்.
மத்திய அரசுக்குத்தான் முடிவான அதிகாரம் இருக்கிறது அவர்கள் இறுதி முடிவெடுத்து தூக்கை நிறைவேற்றிக்கொள்ளலாம்.தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்பதுதானே அர்த்தமாகிறது.
                
ஜெயலலிதா ஈழத்தமிழருக்கும்,விடுதலைப்புலிகளுக்கும் என்றுமே ஆதரவானவர் அல்ல.தேர்தலுக்காக ஆதரவாக இருப்பதாக காண்பித்துக்கொண்டார்.
அது சரி ஜெயலலிதா ஜால்ராக்கள் சீமான்,நெடுமாறன் என்ன சொல்லப்போகிறார்கள்.?
_________________________0000000_________________________-000000___________________________
 ஒரு நாளைக்கு 368 பேர் தற்கொலை 
கடந்த ஆண்டில் (2010) மட்டும் சுமார் ஒரு லட்சத்து முப்பத்தையாயிரம் பேர் (1,34,599) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றனர்.

            .

தற்கொலை செய்து கொண்டவர்களில் 41 சதவீதத்தினர் சுயதொழில் செய்தவர்கள். கிட்டத்தட்ட 45 சதவீதத்தினர் தூக்குப் போட்டுக் கொண்டும் அதற்கு அடுத்து நஞ்சருந்தி 20 சதவீதம் பேரும் தம்மை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக ஆண்கள் அதிக அளவிலும் தனிப்பட்ட உணர்வு ரீதியான விடயங்களுக்காக பெண்கள் அதிக அளவிலும் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தியாவில்உள்ள 35 பெரு நகரங்களில் பெருநகரங்களைப் பொறுத்தவரை, பெங்களூரில் அதிக அளவாக 1778 பேரும், அதற்கு அடுத்ததாக சென்னையில் 1,325 பேரும் கடந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்., கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களையும் மகாராஷ்டிரா மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை 2009 ஆம் ஆண்டு 14,424 பேரும் 2010 ஆம் ஆண்டு 16,561 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
_____________________________________________________________________________________________
பாக் , ஏவுகணை,,,,,,,,,,
அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று, குறிப்பிட்ட இலக்கை தாக்கவல்ல 'ஹத்ஃப்-7' என்ற ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை செய்து வெற்றி பெற்றுள்ளது.
         
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
 
             
இந்த ஏவுகணை சுமார் 700 கிலோமீட்டர் தூரம் வரை சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் திறன் படைத்தது., இந்தியாவில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் படைத்தது. 

வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணையை வடிவமைத்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
________________________________________________________________________________________
கைப்பற்றுவோம் போராட்டங்கள்--   புதிய பரிமாணம்   எடுக்கிறது முதலாளித்துவ அமைப்புக்கான  எதிர்ப்பு! 
காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், பொது வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அமெரிக்காவின் ஓக்லாந்து நகரைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் அறிவித்

துள்ளனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் தரப்பில் பேசிய கேட் புரூக்ஸ், அடக்குமுறை மிகவும் கொடூரமானது. அதனால் அடுத்த கட்டமாக வேலைநிறுத்தம் செய்யப் போகிறோம். யாரும் பணிக்கு செல்ல மாட்டார்கள். மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல மாட்டார்கள். ஒட்டுமொத்த நகரமே வெறிச்சோடிக் கிடக்கும் என்று கூறுகிறார். அடுத்த வாரத்தில் இந்த வேலை நிறுத்தம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓக்லாந்து நகரின் நகர்மன்றத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமையன்று ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதை சீர்குலைக்க முடிவெடுத்த காவல்துறை கடுமையான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து அனைவரையும் வெளியேற்றும் முயற்சியில் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அடி விழுந்தது. 85 பேரைக் கைது செய்துள் ளனர். கண்ணீர்ப் புகைக் குண்டு களை காவல் துறையினர் வீசினர். ஸ்காட் ஓல்சன் என்ற முன்னாள் ராணுவ வீரரைத் தலையில் தாக்கிக் காயப்படுத்தினர். மண்டை ஓட்டில் கீறல் விழும் அளவுக்கு அந்தக் காயம் இருப்பதாக ஓல்சனின் நண்பரும், போராட்டக்களத்தில் நிற்பவருமான கெய்த் ஷன்னோன் கூறுகிறார்.

ஓக்லாந்தில் மட்டுமல்ல!புதிய, புதிய பிரிவினர் போராட்டங்களில் கலந்து கொள்ளத் துவங்கியுள்ளனர். இத்தனைகும் காவல்துறையினரின் அடக்குமுறைகளைத் தாண்டி மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. ஓக்லாந்து மாகாணத்தில் மட்டுமல்ல, அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் அனைத்து நகரங்களிலுமே நிர்வாகம் மற்றும் காவல்துறைஆகியவை அடக்குமுறையையே கையில் எடுத்துள்ளன. ஆர்ப்பாட்டம் துவங்கிய வால் ஸ்டிரீட்டில் புதிய ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஓக்லாந்தில் தாக்கப்பட்ட ஓல்சனுக்கு ஆதரவு தெரிவித்தும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

அரசியல் ரீதியான மாற்றங்களை இந்த மக்கள் போராட்டங்கள் ஏற்படுத்தாது என்று பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆர்ப்பாட்டங்களைச் செய்தியாக்காமல் இருகும் அவர்களது முயற்சி தோல்வியுற்றுள்ள நிலையில், அடுத்த கட்டமாக போராட்டத்தின் வீச் சைக் குறைத்து மதிப்பிடும் வேலையில் இறங்கியுள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் ஏற்கெனவே இந்த அம்சம் விவாதப் பொருளாகியுள்ளது. இரு பெரும் கட்சிகளுமே முதலாளித்துவத்தைக் கைவிட முன்வராது என்பதை அவர்கள் உணர்ந்தேயுள்ளனர். இருந்தாலும், மக்களின் கருத்தை நீண்ட நாளைக்கு அவர்களால் புறக்கணிக்க முடியாது என்ற நம்பிக்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள்.
கல்வியும்,மருத்துவம் அரசின் பொறுப்பே!

நாட்டின் மருத்துவத்துறை முழுவதும் வால்ஸ்டிரீட் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு அடையாளமாக வாஸ்டிரீட்டில் உள்ள வெல்பாய்ண்ட் என்ற மருத்துவக்காப்பீட்டு நிறுவனத்தின் முன்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். மெடிகேர் மற்றும் மெடிகெய்டு போன்ற திட்டங்களில் வெல்கேர் போன்ற பகாசுர நிறுவனங்கள் கோடிக்கணக்கான டாலர்களைக் கொள்ளையடித்தன. இந்த மோசடிகள் அம்பலமாகி, விசாரணைகள் நடைபெறுவதாகச் சொல்லப்பட்டாலும், இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விடுதலைச் சதுக்கத்தில் தங்கள் ஊர்வலத்தைத் துவக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், திவாலானதாகச் சொல்லி இழுத்து மூடப்பட்ட செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை வாயில் வரை சென்றனர். மனிதத் தேவையை முன்னிறுத்தும் மருத்துவத்திட்டமே நாட்டிற்குத் தேவை. மேலும் அரசே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
 ஒக்லாந்து போராட்டக்காணொளி கீழே தனியே உள்ளது.பார்வையிட்டுக்கொள்ளுங்கள்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?