எடுத்துக்கோ,,எடுத்துக்கோ,,,,,

சென்னையில், விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்கள், பல அடுக்குமாடி கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, கண்காணிப்பு குழுவை, சென்னை உயர்நீதிமன்றம் 2006ம் ஆண்டு அமைத்தது. இக்குழுவினர் செய்த ஆய்வில், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில், 48 வணிக வளாகங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, இந்த கட்டடங்களை இடிக்க, 2007ம் ஆண்டு கண்காணிப்புக் குழு உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தால், இந்த நடவடிக்கை முடங்கியது. அவசர சட்டம் காலாவதியானதை அடுத்து, தற்போது, இந்த வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, இந்த கட்டடங்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப, கண்காணிப்பு குழு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதில், 36 கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அறிவிப்புஅனுப்பினர். இதையடுத்து, இந்த வணிக வளாகங்களை சீல் வைக்கும் நடவடிக்கையை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் எடுத்திருக்க வேண்டும்.

                                                         
ஆனால், கடந்த மாதம் வரை நடவடிக்கை எடுக்காததால், சி.எம்.டி.ஏ., மாநகராட்சி, மின் வாரியம் உள்ளிட்ட துறைகளின் உயரதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என, உயர்நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், இதுதொடர்பான விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம், சி.எம்.டி.ஏ.,வுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தி.நகரில் விதிமுறை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கு,"சீல்' வைக்கும் நடவடிக்கையை இன்று காலை மேற்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் பல கிளைகளை துவக்கியுள்ள பிரபல மெகா கடைகள் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜவுளி சாம்ராஜ்யம், மற்றும் பாத்திர கடல் என வர்ணிக்கப்படும் பல்வேறு நிறுவனங்கள் இதில் அடங்கும். விதி முறை மீறி கட்டப்பட்டு இன்று சீல் வைக்கப்பட்ட கடைகள்:

சரவணா ஸ்டோர்ஸ் ( பாத்திரக்கடை ) , சென்னைசில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ்( 2 கடைகள் ) , குமரன்சில்க்ஸ்( நகைமாளிகை) , ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் ( சேலைகளின் சோலை) , காதிம்ஸ் என மொத்தம் 32 கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

கடைகள் அடைக்கப்பட்டு கிடப்பதால் வேலைக்குக்கு வந்த ஊழியர்கள் என்ன செய்வது என அறியாமல் திகைத்து நின்றனர். குறிப்பாக கடைகளின் நிர்வாகிகள் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து வியாபார சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகின்றனர்.

 

 சீல் வைக்கப்பட்ட கடைகளின் சுவரில் அதிகாரிகள் அறிவிப்பு ஒட்டியுள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது: ”விதிமுறை மீறல் காரணமாக கட்டப்பட்ட இந்த கட்டடத்தை கடை உரிமையாளர்களே இடிக்க வேண்டும். இல்லையேல் சி.எம்.டி.ஏ., சார்பில் இடித்து அதற்குரிய செலவு தொகையை வசூலிக்கும் என்றும் இது வரை கடைக்குள் யாரும் நுழையக்கூடாது, மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் அச்சிடப்பட்டிருந்தது. 

”எடுத்துக்கோ,எடுத்துக்கோ “ன்னு விளம்பரம் செய்த்தது தப்போ? இன்றைக்கு மாநகராட்சி எடுத்துக்கிட்டே..!

___________________+++++++_________________+++++++++++++++_______________

...ப் போச்சு....?

                                      

 

திருப்பதி தேவஸ்தானத்திடம் இருந்து வாங்கிய, 800 கிலோ தலைமுடியை, விற்பனை வரி செலுத்தாமல் லாரிகளில் ஏற்றிச் சென்றதால், விற்பனை வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருமலையில், பக்தர்கள் பிரார்த்தனையாகச் செலுத்தும் தலைமுடியை, சேகரித்து வைக்கும் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான கிடங்கு, அலிபிரி டோல்கேட் அருகே உள்ளது. இக்கிடங்கில் இருந்து, 800 கிலோ எடை கொண்ட, 38 லட்ச ரூபாய் மதிப்புள்ள தலைமுடியை, அனந்தபுரம் மாவட்டம் உரவகொண்டா நகரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர், தலைமுடிக்குச் செலுத்த வேண்டிய, 4 சதவீத விற்பனை வரியைச் செலுத்தாமல், லாரிகளில் கொண்டு சென்றார்.

விற்பனை வரித்துறை அதிகாரிகள், தலைமுடியை ஏற்றிச் சென்ற லாரிகளை, திருப்பதி-ரேணிகுண்டா சாலையில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, விற்பனை வரி செலுத்தாதல், மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

------------===============----------------=============--------------==========-----------------

ஊழல் எதிர்ப்பிலேயே ஊழலா?

             

 

ஊழலுக்கு எதிராக போராடிவரும் அன்னா ஹசாரே குழுவில் உள்ள முக்கிய நபர்கள் மீது, சமீபகாலமாக தொடர்ந்து புகார் கூறப்பட்டது. பிரசாந்த் பூஷன், காஷ்மீர் விவகாரம் பற்றி பேசியதற்காக, தாக்குதலுக்கு ஆளானார். 
விமான பயணத்துக்காக அளிக்கப்பட்ட சலுகையை, முறைகேடாக பயன்படுத்தியதாக, கிரண்பேடி மீது புகார் கூறப்பட்டது. வருமான வரித்துறை சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதைத் தொடர்ந்து, ஹசாரே குழுவைச் சேர்ந்த மேதா பட்கர், குமார் விஸ்வாஸ் ஆகியோர், ஹசாரேயின் உயர்மட்டக் குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என, வலியுறுத்தினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஹசாரே தரப்பின் உயர்மட்டக் குழு கூட்டம், காஜியாபாத்தில் நேற்று முன்தினம் கூடியது. இதில், உயர்மட்டக் குழுவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என, முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவை, மகாராஷ்டிர மாநிலம், ராலேகான் சித்தியில் மவுனவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரேயிடம் தெரிவிப்பதற்காக, அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன், கிரண்பேடி ஆகியோர், நேற்று அங்கு சென்றனர்.


சந்திப்புக்கு பின், எழுத்து மூலமாக அளித்த பதிலில் ஹசாரே கூறியதாவது:ஊழலுக்கு எதிரான எங்கள் அமைப்பு பலமாக உள்ளது. யாராலும் இந்த அமைப்பை உடைக்க முடியாது. எங்களின் உயர்மட்டக் குழுவை கலைக்கப் போவதாக, தவறான தகவல்கள் வெளியாகின்றன. சிலரின் குற்றச்சாட்டுகளுக்காக, குழுவை கலைத்து விட்டால், ஊழலுக்கு எதிரான எங்களின் போராட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டு விடும். மேலும், எங்கள் அமைப்பின் மீதான நம்பகத்தன்மையும் சீர்குலைந்து விடும். எனவே, குற்றச்சாட்டுகளை கண்டு பயப்பட மாட்டோம்.உயர்மட்டக் குழுவில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து, சவாலை சந்திப்போம். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். ஜன் லோக்பால் மசோதா நிறைவேறும்வரை, எங்களின் போராட்டம் தொடரும். எதிர்காலத்தில், எங்கள் அமைப்புக்காக, சட்ட விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் உருவாக்குவோம். அதன்பின், இந்த குழுவில் மாற்றம் மேற்கொள்ளப்படும்.


உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்கள் யார், செயற்குழுவில் யார் இடம் பெறுவர் என்பது பற்றிய விவரங்கள், விதிமுறைகளில் இடம் பெற்றிருக்கும். எங்களின் போராட்டம், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் எதிரானது அல்ல.
லோக்பால் மசோதாவை பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றாவிட்டால், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, நாடு முழுவதும் யாத்திரை நடத்துவேன். ஒரு சிலர், எங்களின் போராட்டத்தை சீர்குலைப்பதற்காக, எங்கள் மீது தவறான புகார்களை தெரிவிக்கின்றனர். இந்த புகார்கள், எங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது. எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.


எங்கள் அமைப்புக்கு வந்த நன்கொடை பற்றிய விவரங்கள் முழுவதும், இணையதளத்தில் வெளியிடப்படும். எங்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. காஷ்மீர் பற்றிய விஷயத்தில், பிரசாந்த் பூஷன், தன் கருத்தை தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் ஒருவர் தெரிவிக்கும் கருத்து, எங்கள் குழுவின் கருத்தாகாது. சுவாமி அக்னிவேஷ் விவகாரம் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். எங்கள் அமைப்புக்கு, அறிமுகம் இல்லாத வட்டாரத்தில் இருந்து, வங்கி மூலமாக 40 லட்சம் ரூபாய் நன்கொடை வந்துள்ளது. இதுபோன்ற நிதியை, திரும்ப அளிக்க உத்தரவிட்டுள்ளோம். ராம்லீலாவில் நடந்த போராட்டத்துக்கு பின், நன்கொடை வசூலிப்பதையும், காசோலைகள் பெறுவதையும் நிறுத்தி விட்டோம். இதன்மூலம், நாங்கள் பணத்துக்காக போராட்டம் நடத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

அது எல்லாம் சரி .குழு உறுப்பினர்கள் மீது வெளியாகும் குற்ற சாட்டுகளுக்கு சரியான பதில் இல்லையே.

கிரன்பேடி மீது அரசையும்,விழப்பொறுப்பாளர்களையும் விமான செலவு விடயத்தில் ஏமாற்றியுள்ளாரே.விழாப்பொறுப்பாளர்களிடம் முதல் வகுப்பு டிக்கட் பணத்தை வசூலித்து விட்டு.தனக்கு அளிக்கப்பட்ட 75% கழிவுவிமானக்கட்டணத்தில் பயணம்செய்துள்ளாரே?

 

                      

கேஜ்ரிவால் அரசு செலவில்,சலுகையில் படித்து விட்டு வேலையை விட்டு ஓடிவந்து விட்டாரே.அது மோசடி இல்லையா?80 லட்சம் ரூபாயை சரியாக கணக்கு காட்டாமல் தனது அறக்கட்டளையில் போட்டுக்கொண்டாரே.அதற்கு விளக்கம் என்ன?

சீதையின் மனைவி சந்தேகத்திறகு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்ற சொலவடை ஆன்மீக வாதியான அன்னா வுக்கு கண்டிப்பாகத்தெரிந்திருக்கும்.

அவர் இது போன்ற குற்ற சாட்டுக்குள்ளானவர்களை வைத்துக்கொண்டு ஊழலுக்கு எதிராகப் போராடுவது டான் குவிக்சாட் வீரச்செயலுக்கு ஒப்பானதாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

அறிமுகம் இல்லாத இடங்களில் இருந்து பணம் வந்தது இதுவரை கணக்கில் காட்டப்படவில்லையே.தங்கள் ஊழல் தோண்டப்படுகிறது என்ற பின்தானே இத்தகவலே வெளிவருகிறது.?

எந்த கட்சிக்கும் எதிர் அல்ல என்றால் காங்கிரசுக்கு எதிராக தேர்தலில் வாக்கு சேகரித்தது ஏன்?

அட போங்கப்பா.கடைசியில் நீங்களும் அட்டைக்கத்தி வீரர்கள்தானா?

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

                            

 

 

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?