நடுக்கம் ,,,,,,,.

துருக்கி நாட்டில் வான்நகரை அடுத்த தபான்லி நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்ஏற்பட்டது.இதில் கட்டிடம்கள் இடிந்தன. 1000க்கும் மேற்பட்டவர்கள்.இறந்து விட்டனர்.
______________________________________________________________________________
வழக்கில் வெல்ல யாகம்,
                        
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் வெல்ல ,வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டி, ஸ்ரீரங்கத்தில் யாகம் நடந்தது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலைச் சேர்ந்த வெளி ஆண்டாள் சன்னிதியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு கோர்ட்டில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெறவும்ராஷ்ட்ரப்ருத்யாகம் நடந்தது.இந்த யாகத்தை பஞ்சமுக ஆஞ்சநேய உபாசகர் ரெங்கநாதன், தீதாச்சாரியன் பார்த்தசாரதி ஆகியோர் நடத்தினர். ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஹோமம் பிரசாதம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அது சரி முன்பே யாகம் நடத்தி வழக்கே இல்லாமல் செய்திருக்கலாம் அல்லவா.
இனி இது போன்ற வழக்குகள் யாரும் போடமுடியாதபடி ஒரு யாகம் நடத்திடலாம் அல்லவா .இதுவும் ஒருவகை நடுக்கம்தான்.
                       
____________________________________________________________________________________________________
சன் ஒதுக்கீடு விசாரணை:தயாநிதிக்கு நடுக்கம்.
          

சன் டி.டி.எச்.,க்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தயாநிதியின் பங்கு குறித்து விசாரணை செய்யவுள்ளதாக, சி.பி.ஐ., தெரிவித்தன.

சி.பி.ஐ .இது பற்றி கூறியதாவது:"ஏர்செல் நிறுவனம், மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்ட விவகாரத்தில், மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. தயாநிதியின் வீட்டுக்கு 300 டெலிபோன் இணைப்புகள் வழங்கப்பட்டது தொடர்பான விவகாரம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த வழக்கில் தொடர்புடைய, சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள், டி.டி.எச்., சேவையில் ஈடுபட்டுள்ளதை, சி.பி.ஐ., கண்டுபிடித்தது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக, டி.டி.எச்., நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை, தொலைத் தொடர்பு துறையிடம், சி.பி.ஐ., கேட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, டிஷ் "டிவி' இந்தியா லிட்., ரிலையன்ஸ் பிக் "டிவி' பிரைவேட் லிட்., பார்தி மல்டி மீடியா லிட்., பாரதி பிசினஸ் சேனல் பிரைவேட் லிட்., தூர்தர்ஷன், சன் டி.டி.எச்., பிரைவேட் லிட்., டாடா ஸ்கை லிட்., போன்ற நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை பெற்ற சி.பி.ஐ., அவற்றை ஆய்வு செய்தது. இதன்பின், சன் டி.டி.எச்., தொடர்பான ஆவணங்களை தவிர, மற்ற ஆவணங்கள், தொலைத் தொடர்பு துறையிடம் திரும்ப அளிக்கப்பட்டு விட்டன.சன் டி.டி.எச்.,க்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் தயாநிதியின் பங்கு குறித்து விசாரிக்க, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.
        பலரும் மாட்டிக்கிட்டப் பிறகு என்னை மாதிரிதான் முழிக்கிறார்களாம்.உண்மையா?                

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?