மீனவர்களுக்கு அறிவுரை தேவை?

"இந்திய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை தமிழக மீனவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதுவரையில் இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது."
- இவ்வாறு தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் உள்ள  மீனவர்கள், அராங்கத்தின் விதிமுறைகளை மீறி செயற்படுகின்றனர்
அது இந்திய இலங்கை கடல் பகுதியில் உள்ள கடல் வளத்தை முற்றாக அழித்துவிடும்மேலும் இலங்கை கடற்படையினர் நடவடிக்கைகளுக்கும் உதவியாக அமைந்து விடுகிறது” என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் போஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்தியத் தரப்பினர், தமது மீனவர்களிடம் உள்ள குறைபாடுகளை சீர்செய்யவேண்டும். அதுவரையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எந்த வகையிலும் பலனளிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

                                                                               +++++++++==============+++++++
அதிவேக கணினி சிப்;இந்தியர் கண்டுபிடிப்பு.
தற்போது கணினிகளில் இருக்கும் சிப்களை விட 60 சதவீதம் வேகமாக இயங்கும் அடுத்த தலைமுறை கணினி சிப்பை அமெரிக்கவாழ் இந்தியரான ராஜ் தத் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்த சிப்பை பயன்படுத்தினால், இப்போது இருப்பதைவிட 90 சதவீதம் அளவுக்கு குறைவாகவே  மின்சாரம் செலவாகும்.
 சிப்பை கண்டுபிடித்துள்ள ராஜ் தத், கோரக்பூர் ஐஐடி-யில் படித்தவர். அமெரிக்காவில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது கண்டுபிடிப்பு கணினி சிப் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் தத் இது குறித்துக் கூறியது: கம்ப்யூட்டர் சிப்களில் இப்போது எலெக்ட்ரான்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக எடை குறைந்த புரோட்டான்களை பயன்படுத்தியுள்ளேன். இதனால் சிப்களின் அளவு, எடை, மின்சாரம்செலவு ஆகியவை குறைந்துள்ளது.
எலெக்ட்ரான்களைப் பயன்படுத்தினால், சிப்கள் சூடாகும். எனவே அதனை குளிரவைக்க வேண்டும். இதற்காக மின்சாரம் அதிகம் செலவாகிறது. அத்துடன் வெப்பத்தை வெளியேற்றுவதற்காக தனியாக பாகங்களைப் பொருத்த வேண்டும். இதனால் அளவும், எடையும் கூடும்.
ஆனால் புரோட்டான்கள் வெப்பத்தை வெளிப்படுத்துவதில்லை. எனவே பெருமளவில் மின்சாரம் சேமிக்கப்படும். மேலும் இந்த சிப்கள் சிறிய அளவிலும், எடை குறைவாகவும் இருக்கும். இந்த கண்டுபிடிப்பு, கணினியின் பாதுகாப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்,நாடுகளின் பாதுகாப்புத்துறைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
                                                                            ராஜ்தத்
ராஜ் தத்தைஅமெரிக்க பாதுகாப்புத்துறை[பென்டகன்]பாராட்டியுள்ளது.தங்களது போர் விமானங்களில் இந்த கணினி சிப்பை சோதித்துப் பார்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
தேனீத் தாக்குதல்,
                         
திருட்டுத்தனமாக சிகரெட் ஏற்றிச் சென்ற லாரியை மடக்கிய போலீசாரை தேனீக்களை விட்டு தாக்கிய சம்பவம் துருக்கியில் நடந்துள்ளது. பெட்டிகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த தேன் கூடுகளை கடத்தல்காரர்கள் கலைத்து விட, போலீசாரை ஓட ஓட விரட்டி கொட்டின தேனீக்கள்.
கடத்தல்காரர்களில் இந்த விசித்திர தாக்குதல் நடந்தவிபரம்: துருக்கியில் சிகரெட் விற்பனைக்கு தடை உள்ள பகுதி அடானா. அங்கு கள்ள சிகரெட் பண்டல்களை லாரியில் சிலர் கடத்துவதாக தகவல் வந்தது. உடனே 15 போலீஸ் அதிகாரிகள் சோதனை சாவடியில் ஒவ்வொரு வாகனமாக சோதனையிட்டனர்.
சம்பந்தப்பட்ட லாரியை மடக்கினர். லாரி கதவை திறந்ததுதான் தாமதம்… கடத்தல்காரர்கள் குச்சி விட்டு ஆட்டி கலைத்து விட்ட தேன்கூடுகளில் இருந்து  போலீசார் மீது படையெடுத்தன தேனீக்கள்.
போலீசாரை ஓட,ஓட விரட்டி கொட்டின. இந்த அதிரடி தாக்குதலால்  போலீசாருக்கு உடல் முழுவதும் வீக்கம். பலர் மயங்கி விழுந்தனர். அனைவரும் மருத்துவனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று திரும்பினர்..
ஒருவழியாக கடத்தல்காரர்களின் இந்த அதிரடி தாக்குதலை சமாளிக்க தேனீ வளர்ப்பவர்களை போலீசார் வரவழைத்தனர். அவர்கள் போர்வைகள், தீப்பந்தங்களை பயன்படுத்தி தேனீக்களை விரட்ட, லாரிக்குள் பதுங்கியிருந்த 3 கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
கடத்தல்காரர்கள் தப்பிக்க தேனீக்களை கையாள்வது இப்போது நட்ந்திருந்தாலும்.முன்பு 2009ம் ஆண்டு செப்டம்பரில் தேன்கூடுகளை ஏற்றி வந்த லாரி&வேன் மோதியதில் 6 பேர் காயத்துடன் உயிருக்கு போராடினர்.
அவர்களை காப்பாற்ற வந்தவர்கள் மீதும்,காயமடைந்து உயிருக்குப் போராடியவர்கள் மீதும்’ தேனீக்கள்  கொட்டின. அதில் ஒருவர் விபத்தில் தப்பிய ஒருவர் இறந்துவிட்டார்..
                             

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?