கிரண் பேடி -2

_

தனது தொண்டு நிறுவனத்துக்கு முறைகேடாக நிதி சேர்த்தது தொடர்பாக, அன்னா ஹசாரே குழுவில் உள்ள கிரண் பேடி மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
 ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியான் கிரண் பேடி. ஊழலுக்கு எதிரான, லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக, அன்னா ஹசாரேயுடன் இணைந்து, போராட்டம் நடத்தி வருகிறார்.

 அரசு சார்பில் அளிக்கப்பட்ட விமானப் பயண கட்டணச் சலுகையை முறைகேடாக பயன்படுத்தியதாக, கிரண் பேடி மீது ஏற்கனவே குற்றசாட்டு உள்ளது.தற்போது கிரண் பேடிக்கு மீது மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. டில்லியைச் சேர்ந்த தேவிந்தர் சிங் சவுகான் என்ற வழக்குரைஞர், டில்லி பெருநகரநீடிமன்றத்தில், ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கிரண் பேடிக்கு எதிராக பின் வரும் குற்றச்சாட்டுகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.

”ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினரின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு, தான் நடத்தி வரும், "இந்தியா விஷன்' என்ற தொண்டு நிறுவனம் சார்பில், இலவச கம்ப்யூட்டர் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி வழங்குவதாகவும் கூறி, மைக்ரோ சாப்ட் நிறுவனத்திடம் இருந்து, 50 லட்சம் ரூபாயை நன்கொடையாக, கிரண் பேடி பெற்றுள்ளார். ஆனால், சில நபர்களுடன் சேர்ந்து கொண்டு, இந்த விஷயத்தில் அவர் மோசடி செய்துள்ளார். இலவச பயிற்சி அளிப்பதற்கு பதிலாக, பாதுகாப்பு படையினருக்காக அமைக்கப்பட்ட பயிற்சி மையங்களில் இருந்து, தலா 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்க திட்டமிட்டார். இந்த விஷயத்தில், வேதாந்தா அறக்கட்டளை அமைப்பையும் அவர் ஏமாற்றியுள்ளார்.

வேதாந்தா அறக்கட்டளையுடன் நன்கொடை ஒப்பந்தம் செய்து கொண்டார். பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான நிலம் மற்றும் மின் கட்டணத்தை தானே செலுத்துவதாகக் கூறி, அதற்காக வேதாந்தா அமைப்பிடம் தலா 6,000 ரூபாய் பெறுவதற்காக, இந்த ஒப்பந்தத்தை கிரண் பேடி செய்து கொண்டார். ஆனால், பயிற்சி மையத்துக்கான நிலம் மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை, போலீஸ் அமைப்புகள் மூலமாகவே அவர் செய்து கொண்டார்.கிரண் பேடிக்கு சொந்தமான, "இந்தியா விஷன்' மற்றும் "நவ்ஜோதி' ஆகிய இரு அறக்கட்டளைகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவில் நன்கொடை பெறப்பட்டுள்ளது. எனவே, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கணக்கில் முறைகேடு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், கிரண் பேடி மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்”.
 மனுவை விசாரித்த டில்லி கூடுதல் பெருநகர  நீதிபதி அமித் பன்சால், கிரண் பேடி மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் படி, டில்லி காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டார்.அதன் படி மு.த.அ,பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது அடுக்கடுக்காக புறப்படும் ஊழல் குற்ற சாட்டுகள்.மலைக்க வைக்கின்றது.
____________________________________________________________________________

கூகிளின் 7 சேவைகள் நிறுத்தம்


கூகிள் பல சேவைகளை அடிக்கடிஅறிமுகப்படுத்தி வருகிறது. ஆனாலும் எல்லாமே வர்வேற்பைப் பெறுதில்லை.
இதனால் இவ்வாறானசேவைகளை கூகிள் நிறுத்தத துவங்கியுள்ளது. Google Wave, Knol  மற்றும் Google Gears போன்றவையும் இதற்குள் அடங்குகின்றன.
இவ்வாறு நிறுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். இதனால் புதிய சேவைகளிற்குள் நுழைவதை இது தடுக்குமென நிபுணர்கள் கூறுகின்றனர்.
தனது அதிகாரபூர்வ தள்த்தில் இந்த அறிவித்தலை கூகிள் வெளியிட்டுள்ளது.
 நிறுத்தப்படும் 7 சேவைகள்.
 Google Wave
இது மின்னஞ்சல் மற்றும் உடனடிக் குறுஞ்செய்திகளை இணைக்கும் முயற்சியில் உருவாக்கப்பட்டது.
 Google Bookmarks List
நண்பர்களுடன் bookmark களைப் பகிர்ந்துகொள்ள உதவிய சேவை.
 Google Friends Connect
சிறியதொரு கடவுச்சொல்லினை ஓர் இணையத்தளத்திற்குள் உட்செலுத்துவதன்மூலம் இணைய வடிவமைப்பாளர்களுக்கு சமூக அமைப்புகளைத் தமது தளங்களுக்குள் சேர்க்க உதவியது.
 Google Gears
Offline இல் வேலைசெய்யும் போது இணைய உலாவிச் செயற்பாட்டினைத் திறமையாகக் கையாள உருவாக்கப்பட்டது.
               
Google Search Timeline
வரலாற்றுக் கேள்விகளுக்கான விளைவுகளைத் தரும் ஒரு வரைபு
Knol
விக்கிபீடியா வகைத் திட்டம். இணைய உள்ளடக்கங்களை முன்னேற்றும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.
Renewable Energy Cheaper than Coal
இது சூரியசக்தியை முன்னேற்றும் வழிகளைக் கண்டுபிடிக்கும் வழிகளைத் தேடவென அமைக்கப்பட்டதாகும்.
இவற்றில் Wave வரும் ஏப்ரலிலும் Knol அக்டோபரிலும் நிறுத்தப்படும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
அழகான முயற்சி.

செர்பியாவின் நோவக் டிஜொகொவிக்-ஜன்ங்கொ டிப்சர்விக் ஒற்றையர் பந்தாட்டத்தில் நோவக் பந்தடிப்பதை இம்மி,இம்மி யாக எடுத்த புகைப்படம்.
_____________________________________________________________________________________________________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?