பாசத் தாயின் பரிசுகள்,


 @ தமிழக அரசுக்கு மத்திய அரசு உரிய நிதி உதவி வழங்காததால் தமிழகத்தின் பொது துறை நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகின்றன . கடந்த கால தி.மு.க., ஆட்சியின் அவலத்தினால் தமிழகம் பெறும் கடன் சுமையை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . தமிழகத்தை மின் மிகை மாநிலம் என்பதில் இருந்து மின் பற்றாக்குறை மாநிலமாக உருவாக்கிய பெருமை கருணாநிதிக்கே சேரும் என்றும் இதனை சமாளிக்க பஸ், பால், மின் கட்டண விலையை உயர்த்திட முடிவு செய்திருப்பதாக பெருமையுடன் முதல்வர் ஜெயலலிதா தனது ஜெயா தொ[ல்]லைக்காட்சி மூலம் தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து அறிவித்துள்ளார்.
                     
மத்திய அரசு மாநில அரசுக்கு கேட்ட நிதியை வழங்க மறுத்து வருகிறது. போதிய நிதி இல்லாததால் மத்திய அரசு உதவி வேண்டும்.  மம்தா ஆளும் மேற்குவங்கத்திற்கு 2 ஆயிரத்து 614 வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் 2005 - 2006 ல் 4 ஆயிரத்து 915 கோடி கடனாக இருந்தது. ஆனால் கருணாநிதி ஆட்சியில் 40 ஆயிரத்திற்கும் மேலாக கடன் சுமை ஏற்பட்டது. இநத நிலை நீடித்தால் இன்னும் 53 ஆயிரம் கோடியை எட்டும் அளவிற்கு மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 
கருணாநிதியின் அரசின் தவறான நடவடிக்கையால் போக்குவரத்து துறை பெரும் நஷ்டத்தில் இயங்குகிறது. எரிபொருள் விலை உயர்வு, ஊதியம் மற்றும் ஓய்வூதிய செலவு காரணமாக மேலும் போக்குவரத்து துறையை சீரமைக்க முடியாமல் இருக்கிறது.
                                                        
 போக்குவரத்து கழகம் 6 ஆயிரத்து 150 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. பல பஸ்கள் கோர்ட்டில் ஜப்தி செய்யப்பட்டு கிடக்கிறது. இதனை மீட்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் பஸ் கட்டணத்‌தை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. மண்ணெண்ணெய், மின்சாரம் தராமல் மத்திய அரசு செயல்படுகிறது. மாநில அரசு அறிவித்த இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு நிதி வழங்கவும் மறுத்து வருகிறது. மத்திய அரசு நிதி வழங்காததால் மாநில அரசு பெரும் சுமையை தாங்க வேண்டியுள்ளது.மின் துறையை ப‌ொறுத்த வரை தமிழக அரசு வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கிட 550 கோடி ஒதுக்கியது. இன்னும் நிதி ஒதுக்கும் நிலையில் தமிழகத்திற்கு சிரமம் ஏற்படும். மின்சாரம் கட்டணம் விரைந்து உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் ஒழுங்கு முறை ஆணையத்திற்கு தெரிவித்து பின்னர் மக்களின் கருத்துப்படி விலை உயர்த்தப்படும். விவசாயிகள், நெசவாளருக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இதன் காரணமாக பஸ் கட்டணம் மற்றும் ஆவின் பால் விலையும் உயர்த்தப்படுகிறது.
              
 கட்டண உயர்வு விவரம்  பஸ் கட்டணம் சென்னை தவிர ஏனைய மாவட்டங்களில் குறைந்த பட்ச பேரூந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் படி சென்னையில் 2 முதல் 3 ரூபாய் வரையும், மாநிலத்தில் நகர்ப்புற பஸ்களில் கி.மீட்டருக்கு 28 பைசாவில் இருந்து 42 பைசாவும், வெளியூர் பஸ்களில் கி.மீட்டருக்கு 32 பைசாவில் இருந்து 56 பைசாவாகவும், சூப்பர் டீலக்ஸ்சில் மற்றும் சொகுசு ‌பஸ்களில் கி.மீட்டருக்கு 38 பைசாவில் இருந்து 60 பைசாவாகவும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் 52 பைசாவில் இருந்து 70 பைசாவா உயர்த்தி வசூலிக்கப்படும். நகர பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் 3 ரூபாயாகவும், அதிக பட்சம் 13 லிருந்து 16 ஆகவும் இருக்கும்.
 ஆவின் பால் லிட்டருக்கு 17. 75 லிருந்து 24 ஆக ( 6. 25 ) உயர்த்தப்படுகிறது. 
      மக்களின் விருப்பப்படி கட்டணங்கள் கூட்டப்படும் என்றுள்ளார்.இப்போது கூட்டப்பட்டுள்ளதற்கு எந்தமக்கள் விருப்பம் தெரிவித்தார்கள் என்று தெரிய வில்லை.அந்தமக்கள் வாழ்க.

ஆளத்தெரியாததால்தான் முந்தைய தி.மு.க.ஆட்சியினர் பேருந்து,மின்,பால் விலைகளை உயர்த்தவில்லை என்ற உண்மை இப்போது வெளியாகிவிட்டது.
    இலவச லேப்டாப் வழங்க வேண்டும் என்ற தமிழக மக்களின் கூக்குரலை சகிக்க முடியாமல் வழங்கப்படும் லேப்டாப்,மிக்‌ஷி,கிரைண்டர்,மாடு,ஆடுக்கு  நிதி வழங்காமல் தமிழக மக்களின் வாழ்க்கையோடு விளையாடிய மத்திய அரசின் கொடுங்கோல் தன்மையை அம்மா சுட்டிக்காண்பித்ததற்கு தமிழக மக்கள் என்றென்றும் கடமைப்பட்டவர்கள்.
இது போன்று முந்தைய ஆட்சியிலும் பால்.பேருந்து,மின் கட்டணங்களை அம்மாதான் கூட்டி ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றினார்.
அதன் பின் வந்த ஆளத்தெரியாத கருணாநிதி இவற்றின் விலையை எல்லாம் கூட்டாமல்[பேருந்து கட்டணத்தை சத்தமின்றி சிறிது,அதிகப்படுத்திவிட்டு]தமிழக மக்களை வதைத்து வந்தார்.அதனால்தானே அம்மாவின் சரித்திரப்புகழ் ஆட்சியை தமிழக மக்கள் பெரும் பான்மையை அள்ளிக்கொடுத்து கொண்டுவந்தோம்.
மேலும் முந்தைய ஆட்சிப்போலவே இன்னும் பலரை வேலையைப்பறித்து வீட்டிற்கு ஓய்வெடுக்க அனுப்பி விட்டு வேலைநியமனத்தடை சட்டத்தையும் கொண்டு வந்து விட்டு,எதிர்கட்சியினரை உள்ளே தள்ளிவிட்டு,ஒளித்து வைக்கப்பட்டுள்ள எஸ்மா-டெஸ்மா சட்டங்களை மீண்டும் ஒரு நல்ல நாளில் அமுல் படுத்தி விட்டு,இன்னும் விடுபட்டப்பொருட்களை எல்லாம் குழு அமைத்துக்கண்டு பிடித்து விலை-வாசிகளை கூட்டி தங்களின் பொற்கால ஆட்சியைத் தொடர தமிழக மக்களின் சார்பில் குனிய முடிந்தவரை [பன்னீர் செல்வம் போல் இல்லாவிட்டாலும்] குனிந்து வேண்டிக்கொள்கிறோம்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?