வழக்குகள் - அணு / குகிறது?



கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போரட தூண்டியவர்கள்,, வன்முறையில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது, 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்போவதாக மத்திய அரசு கூறிவருகிறது.
 கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, ஒரு குழுவினர், போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில், உதயக்குமார் என்பவர் தலைமையில், ஒரு தரப்பினர், தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். கூடங்குளம் அருகிலுள்ள இடிந்தகரை லூர்து மாதா கோவில் முன்பு பந்தல் போட்டு போராட்டம் நடக்கிறது. இதற்கு, கோவில் பாதிரியார் ஜெயக்குமார், கூத்தப்புளி பாதிரியார் சுசிலன் ஆகியோர் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்., புஷ்பராயன் என்பவரும், சேரன்மகாதேவி பாதிரியார் ஜேசுராஜ் என்பவரும், தீவிர ஆதரவாளர்களாக உள்ளனர். இவர்கள், போராட்டக்குழு சார்பில், தமிழக அரசின் குழுவிலும் இடம் பெற்றுள்ளனர்.இந்த பாதிரியார்களுக்கு தலைமை பாதிரியாராக பணிபுரியும், தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ், அணு எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு, பல வகையில் ஆதரவாக செயல்பட்டார். பல முறை போராட்ட களத்திலும் பங்கேற்றார்.
போராட்டக்காரர்கள் கூடங்குளம் அணு உலைக்கு செல்லும் வழியில், அணு எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அணு உலையின் பணிக்கு சென்ற அதிகாரிகள், ஊழியர்கள், விஞ்ஞானிகள் வழி மறிக்கப்பட்டனர். சாலைகளில் பாறாங்கற்கள், உடைந்த மரங்களை போட்டு, இந்திய அணுசக்தி கழக வாகனங்களை செல்ல விடாமல் மறித்தனர். இதேபோல், கூடங்குளத்தைச் சுற்றி வாடகை வீடுகளில் தங்கிருந்த, வெளிமாநில தொழிலாளர்கள் அடித்து விரட்டப்பட்டனர். வேலைக்கு செல்ல விடாமல் ஒரு குழு, அவர்களை தடுத்ததுடன், அவர்களை ஊரை விட்டு வெளியே விரட்டியது. இதனால், 2,000க்கும் மேற்பட்ட அணுமின்நிலையத்தில் வேலை செய்த கூலித்தொழிலாளர்கள்பயந்து தங்கள்ஊர்களுக்கு திரும்பிவிட்டனர். கான்ட்ராக்டர்களும் விரட்டியடிக்கப்பட்டனர்.
 அணு விஞ்ஞானிகள், அதிகாரிகள் தங்கியிருக்கும் அணுவிஜய் நகரியத்திற்கு செல்லும் குடிநீர் குழாய்களை,போராட்டக்குழுவைச்சேர்ந்தவர்கள் உடைத்து விட்டனர். இதுபோன்ற வன்முறை சம்பவங்களால்ரஷ்யா மற்றும் வெளிநாட்டு விஞ்ஞானிகளும் பாதுகாப்பில்லாததால் தங்கள் நாடுகளுக்கு திரும்பி விட்டனர். கூடங்குளம் அணு உலை பணிகள் பாதிக்கப்பட்டது. இந்திய அணுசக்தி துறை அதிர்ச்சி அடைந்தது.இதனால் மத்திய அரசின் உத்தரவின் பேரில், அணுசக்தி அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள், தொழிலாளர்கள் என, பல தரப்பில் நெல்லை மாவட்டகாவல்துறையினரிடம்புகார் அளித்தனர்.

இதுகுறித்து, மத்திய உள்துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்களீன்படி,வன்முறை சம்பவங்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களும் காவல்துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளது.இவற்றின் பேரில், அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் மீது, போலீசார் இதுவரை, 66 வழ்க்குகளைப் பதிவு செய்துள்ளனர். இவற்றில், வன்முறையாளர்கள், அவர்களை தூண்டிவிடுவோர், உடந்தையாக இருந்தோர், சட்டவிரோதமாக உண்ணாவிரதம் இருந்தோர், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தோர், போராட்டக்களத்தில் பங்கேற்றோர் என, அனைவரது பெயர்களும் இணைக்கப்பட உள்ளது.தொழிலாளர்களை விரட்டியோர், கான்ட்ராக்டர்களை மிரட்டியோர், மத்திய அரசின் குடியிருப்புக்கு சொந்தமான தண்ணீர் குழாய்களை உடைத்தோர் பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இவர்களின் மீது” இந்திய அரசுக்கு எதிராக செயல்படுதல், நாட்டின் இறையாண்மைக்கு களங்கம் விளைவித்தல், இந்திய அரசின் ரகசிய விவகாரங்களில், அத்துமீறி தலையிடுதல், நாட்டுக்கு துரோகம், அனுமதியின்றி சட்டவிரோதமாக கூடுதல், பொய்த்தகவல்களால், அப்பாவி மக்களை பீதிக்குள்ளாக்குதல் ”என்பன போன்ற குற்றப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே இவர்கள் மீது, தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை பாயும் எனத்தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை செய்துவருவதாகத் தெரிகிறது.
ஏற்கனவே அணுமின்நிலையம்  அமைந்தால் காவல்,கட்டுப்பாடுகள் கடலில் அதிகரித்து விடும் தாங்கள் முன் போல் அத்து மீறி கடலில் தொழில் செய்யவோ,கடத்தலில் ஈடுபடுவதோ முடியாது என்ற நோக்கிலேயே போராடுவதாகவும் செய்திகள் போராடும் மீனவர்களுக்கு எதிராகப் பரப்பப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
143-வது சாட்சி. தயாளு அம்மையார்?
                                     
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்பட 14 பேர், 3 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள், ஆ. ராசாவின் தனிச் செயலாளர், உதவியாளர்கள், கலைஞர் டி.வி. அதிகாரிகள் உள்பட 150-க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன.

இதன் அடிப்படையில், குற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இரண்டாவதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார், ஆசிப் பல்வா, கரீம் மொரானி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றன.

இதில் முன்னாள் மத்திய அமைச்சரிடம் பணியாற்றிய அலுவலர்கள், அதிகாரிகளை முக்கிய சாட்சிகளாகச் சி.பி.ஐ. கருதுகிறது. முதல் குற்றப் பத்திரிகையில் 125 சாட்சிகளும் இரண்டாம் குற்றப் பத்திரிகையில் 29 சாட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

கலைஞர் டி.வி., குசேகாவ்ன் பழங்கள், காய்கறி நிறுவனம், சினியுக் பட நிறுவனம் ஆகியவற்றுடன் தொடர்புள்ள 28 பேர் சாட்சிகள் பட்டியலில் உள்ளனர்.

இவர்களில் கலைஞர் டி.வி. இயக்குநரான அமிர்தம் 132-வது சாட்சியாக உள்ளார். கலைஞர் டி.வி. யில் 60 சதவீதப் பங்குகளை வைத்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் 143-வது சாட்சியாக உள்ளார்.
                             

கலைஞர் டி.வி. வங்கி கடனாகப் பெற்றதாகக் கூறப்படும் ரூ. 214 கோடி தொடர்பான பணப் பரிமாற்றம் குறித்து இவர்கள் சிபிஐயிடம் சாட்சியம் அளித்துள்ளனர். இவர்கள் ஒருவர் பின் ஒருவராக நீதிமன்றத்தில் ஆஜராவார்கள். இவர்களை சாட்சி விசாரணைக்கு அழைக்க குறைந்தது 4 மாதங்களுக்கு மேலாகும் என்று தெரிகிறது.

முதல் கட்டமாக முதல் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 125 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும். நவம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக 28 சாட்சிகளுக்கு சி.பி.ஐ. சம்மன் அளித்துள்ளது. பின்னர் நடைபெறும் விசாரணையில் இரண்டாம் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள சாட்சிகள் ஆஜராவார்கள். சாட்சிகளிடம் நடத்தப்படும் விசாரணை இந்த வழக்கில் அடுத்த கட்டமாகும்.
  வழக்கில் சாட்சிகள் விசாரணை வெள்ளிக்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஏ.என். சேதுராமன், ஆனந்த் சுப்பிரமணியன், எடிசலாட் டி.பி. டெலிகாம் நிறுவனத்தில் பணியாற்றும் வினோத் குமார் ஆகிய மூன்று பேர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கும் விசாரணையில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. இதற்கான சம்மன் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய 154 சாட்சிகளை சிறப்பு நீதிமன்றம் இனி வரும் நாள்களில் விசாரிக்க இருக்கிறது. இந்த விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களை சி.பி.ஐ. தாக்கல் செய்ய உள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?