அணு மின் நிலையம் பாதிரியார் விலகல்?

.தூத்துக்குடி மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ், அணு எதிர்ப்பு போராட்ட க்குழுவிலிருந்து திடீரென விலகியுள்ளார்.  நெல்லை மாவட்ட ஆட்சியர் செல்வராஜுக்கு, தன் உதவியாளர் பாதிரியார் சத்தியநேசன் மூலம், கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், "அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. எனக்கு அதில் நாட்டம் இல்லை. மதபோதகர் பணியில் இருக்கும் நான், அணுசக்தி துறையில் தொடர்புடைய நிபுணர் அல்ல. எனவே, இந்த விஷயத்தில், என் ஒப்புதலின்றி, என் பெயர், தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதுஅணு உலை தொடர்பான தமிழக மாநிலக்குழுவில் நான் இடம் பெற மாட்டேன். இப்பிரச்னை தொடர்பான குழுக் கூட்டங்கள் உள்ளிட்டஎந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டேன்,' என அவர் எழுதி உள்ளதாக அரசுதகவல் தெரிவித்துள்ளது.
ஆலோசனை கூட்டம் முடிந்தபின், போராட்டக்குழுவினர், ""எங்கள் எதிர்பார்ப்புகளை, 50 கேள்விகளாக்கி மனுவாக கொடுத்துள்ளோம். இதுவரை என்ன பணிகள் இங்கு நடந்துள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை தரவேண்டும்,'' என தெரிவித்தனர்.
மத்திய குழுவின் தலைவர் முத்துநாயகம் கூறுகையில், ""எங்களின் நோக்கம் மக்களின் நலன், நாட்டின் நலன் மட்டும் தான். முதல் கூட்டத்தில் அனைத்து தரப்பினரும் சுமுகமாக பங்கேற்றனர். இக்கூட்டம் நடந்த விதம் நம்பிக்கையூட்டும் விதமாக இருந்தது,'' என்றார்.மேலும், ""மக்களிடம் அணுஉலை குறித்த அச்சம் இருப்பதாக அறிகிறோம். எந்த வகையிலான அச்சம் என்பதை முதலில் அறிவோம். பின்னர், அச்சத்தை போக்க முயற்சிப்போம்,கூடங்குளம் அணுஉலைக்கு நேரில் ஆய்விற்கு செல்வதாகவும், 10 நாட்களில் மீண்டும் மாநில குழுவிடம் பேசி பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பதாகவும்,” என தெரிவித்தார்மாநிலக்குழு சார்பில், நெல்லை கலெக்டர் செல்வராஜ், எஸ்.பி., விஜயேந்திர பித்ரி, போராட்டஉறுப்பினர்கள் ஜேசுராஜ், மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய குழுமுத்துநாயகம் ( நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் )
அய்யர் (சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் கதிர்வீச்சு பாதுகாப்பு பிரிவு முன்னாள் இயக்குனர் )
மத்தியஸ்தா ( மங்களூரு பல்கலைக்கழக பேராசிரியர் )
சுகுமாறன் ( வேல்ஸ் பல்கலைக்கழக வாழ்க்கை அறிவியல் பள்ளி இயக்குனர் )
கண்ணன் அய்யர் (மும்பை ஐ.ஐ.டி.,)
எஸ்.கே.மேத்தா ( பாபா அணுஆராய்ச்சி மைய அணு உலை முன்னாள் தலைவர் )

பால் ( பாபா அணுக்கழிவு மேலாண்மை பிரிவு முன்னாள் இயக்குனர் ) எஸ்.எம்.லீ ( கல்பாக்கம் பாதுகாப்பு ஆராய்ச்சி பிரிவு )
ஸ்டீபன் அருள்தாஸ் (கல்பாக்கம் கனநீர் வாரிய முன்னாள் இயக்குனர்)
மாநிலக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி பிஷப் இவான் அம்புரோஸ்,  கூட்டத்தில் பங்கேற்றவில்லை.


---------------------------------------------------------------------------------------------

சாலையோர ஓவியர்கள் நம்நாட்டில் சாலகளில் அனுமன் உட்பட சாமிகளை வரைந்து தங்கள் திறமையை வெளிப்படுத்தி காசு பார்ப்பார்கள்.
இது மேலைநாட்டு சாலை யோர ஓவியரின் கைவண்ணம்.எவ்வளவு உண்மையானதோற்றத்தை தருகிறது பாருங்கள்.

                           படம் வரைந்தவர்தான் கட்டடத்தின் மேல் தவிக்கிறார்?
_________________________________________________________________________________
அடுத்த சாலை[யில் விடப்பட்ட]ப் பணியாளர்கள்.
                             
                   மக்கள் நலப் பணியாளர்கள் 12 ஆயிரம் பேர் மூன்றாவது முறையாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 1990ம் ஆண்டு தி.மு.க., அரசு ஆட்சியில் இருந்தபோது, அரசின் திட்டங்கள், கிராமப்புற மக்களுக்கு சென்று சேரவும், அரசின் நலத்திட்டங்களால் பயன் அடைந்தோர் பற்றிய விவரங்களை சேகரித்து தரவும், மக்கள் நலப் பணியாளர்கள். 25 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு. தொகுப்பு ஊதியமாக 200 ரூபாய் வழங்கப்பட்டது.

கடந்த 1991ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஜூலை மாதம் 13ம் தேதி, மக்கள் நல பணியாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர்.இதைத்தொடர்ந்து, 1996ல், மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் அத்தனை பேரையும், மறுநியமனம் செய்து உத்தரவிட்டது. அப்போது,தொகுப்பு ஊதியமாக 500 ரூபாய் அளிக்கப்பட்டது.

பின், 2001ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மக்கள் நல பணியாளர்கள் இரண்டாவது முறையாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த பிரச்னை மிகப் பெரிய அரசியல் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்தது.கடந்த 2006ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மக்கள் நல பணியாளர்கள் திரும்பவும் பணி நியமனம் செய்யப்பட்டனர். இம்முறை, 12 ஆயிரம் பேர் வரை பணியில் அமர்த்தப்பட்டனர். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, முழு அளவில் செயல்படுத்துவதில் மக்கள் நல பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுடைய, தொகுப்பு ஊதியத்தை 2009ம் ஆண்டு, 2 ஆயிரத்து 500 ரூபாய் சிறப்பு விகித ஊதியமாக, அப்போதைய தி.மு.க., அரசு நிர்ணயித்தது.
                          
 மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மக்கள் நல பணியாளர்கள் நிலைமை கேள்விக்குறியானது. பணிநீக்கம் செய்யப்படுவோம் என, பணியாளர்களும் பயத்தில் இருந்து வந்தனர். எதிர்பார்த்தபடி, கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி மக்கள் நல பணியாளர்களுக்கு, எவ்வித வேலையும் ஒதுக்கீடு செய்யக்கூடாது என, தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

இறுதியில், நேற்று தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். 86ன் படி, தமிழகத்திலுள்ள மக்கள் நல பணியாளர்கள், 12 ஆயிரம் பேரும், ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
அம்மையார் ஜெயலலிதாவுக்கு எப்போதும் யாரையாவது கட்சியிலும்,ஆட்சியிலும் நீக்கிக்கொண்டும்- பதவியை மாற்றம் செய்து கொண்டிருப்பதும் தான் அரசு நடத்துவது என்ற எண்ணம் போல்.சாலைப்பணியாளர்கள் இந்தமுறை தப்பிவிட்டார்களா?அல்லது அடுத்த கத்தி அவர்களுக்குத்தானா?
                        
ஆனால் அரசு அலுவலர் ஒருவர் கூறியதுபடி மக்கள் நலப்ணியாளர்களில் பலர் அ.தி.மு.க.ஆதரவாளர்கள்தானாம்.முந்தைய ஆட்சியில் அவர்கள் பசையுள்ள இடங்களைப்பிடித்து பணிக்கு வந்த அவர்கள் இந்த உள்ளாட்சித்தேர்தலில் அ.தி.மு.க.வுக்காக வேலை செய்தார்களாம்.
அவர்கள் ஆற்றியப்பணிக்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டது.


                                                                                                        _ பரிணாம வளர்ச்சி பற்றி>

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?