பணக்கார கிராமமும்-ஆபத்தான கிருமிகளும்


இந்திய பணக்கார கிராமம்



ந்த பணக்காரக் கிராமத்தின் பெயர் மதாபர் நவ வியாஸ். வெளிநாடுகளிலிருந்து படேல்கள் சம்பாதிக்கும் பணம் இவ்விடத்தை செழுமையாக்கி உள்ளதாகக் குறிப்பிடுகிறார் மனீஷ் மக்வான்.

இந்தியாவில் உள்ள எந்தக் கிராமத்தோடும் மதாபரை ஒப்பிடமுடியாது. ஐந்து சதுர கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிராமம் இது. திட்டமிடப் பட்ட சாலைகளும், வளமான வீடுகளும் இக்கிராமத்தின் வாழ்க்கைத் தரத்தை சுட்டிக்காட்டுகின்றன. பெருநகரங்க ளைவிட நாகரிகமாக உள்ளது இக்கிராமம்.  மளிகைக் கடைகளைவிட வங்கிகளின் எண்ணிக்கை அதிகம். டெல்லி அல்லது மும்பையை ஒப்பிடும்போது இங்கு பங்கு வர்த்தகர் கள் அடர்த்தியாக உள்ளனர்.
இந்தக் கிராமத்தின் மக்கள் தொகை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்ந்துவிட்டது.   எல்லா கட்டடங் களிலும் மூன்று மாடிகள் உள்ளன. நன்றாகக் கட்டப்படாத ஒரு கடை அல்லது வீட்டைப் பார்க்கமுடியாது. மின்சாரமும் தண்ணீரும் 24 மணி நேரமும்  தடையின்றிக் கிடைக்கிறது. இங்கே அதிநவீன வசதி உள்ள ஆங்கிலப் பள்ளி ஒன்றும் இயங்குகிறது. அதில் உள்ள விளையாட்டுத் திடல் கிராமத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு இடம்தருகிறது. நல்ல சுகாதார மையம் ஒன்றும் பெரிய ஆலயம் ஒன்றும் உள்ளது. பெருநகரத்தில் உள்ள குடியிருப்பு தொகுதி என இந்தக் கிராமத்திற்குள் புகுபவர்கள் யாரும் எண்ணி விடமுடியும்.
லேவா பட்டேல்களின் தொழில் நேர்த்திக்கும் பொருளாதார வெற்றிக்கும் அடையாளமாக விளங்கும் இக்கிராமம் குஜராத்தில் உள்ள பூஜ் அஞ்ஜர் நெடுஞ்சாலைக்கு 4 கி.மீ. தூரத்தில் புஜியோ மலைப்பகுதியில் உள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு சௌராஷ்டிராவிலிருந்து லேவா பட்டேல்கள் கட்ச் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 1800 களில் கடல்கடந்த வணிகம் இவர்களுக்கு பெரிய வாய்ப்புகளைத் திறந்தது. கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு வியாபாரிகளாகவும், கொத்தனார் களாகவும், தச்சர்களாக வும் சென்றனர். கூலிகளாகச் சென்றவர்களும் உண்டு. இப்படிச் சென்றவர்களில் நிறையபேர் தான்சானியாவில் உள்ள சான்சிபாரிலும் நிரந்தரமாகக் குடியேறிவிட்டனர். அத்துடன் சோமாலியா, உகாண்டா, காங்கோ மற்றும் ருவாண்டாவில் குடியேறியவர்களும் உண்டு. 1960களில் அங்கிருந்து இங்கிலாந்து, அராபிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு மீண்டும் புலம்பெயர்ந்தனர்.
அங்கு குடியேறிய பட்டேல்கள் தொடர்ந்து தங்கள் உறவினர்கள் மற்றும் மூதாதையர்கள் கிராமங்க ளுடன் உறவிலேயே இருந்தனர். அந்தக் கிராமங்களில் ஒன்றுதான் மதாபர். ஆனால் 1990களில் ஆரம்பத்தில்தான் லேவா பட்டேல்கள் தங்களது பூர்வீக இடங்களுக்குத் திரும்ப அதிக ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் அப்படி திரும்பி வந்து குடியேறிய இடம்தான் மதாபர் நவ வியாஸ் என்று தற்போது அழைக்கப் படுகிறது. அவர்களது பழைய கிராமத்திற்கு அருகே இப்புதிய பகுதி உருவாகியுள்ளது. வெளிநாடுகளில் உழைத்துவிட்டு ஓய்வுக்குத் திரும்பும் என்ஆர்ஐ ஓய்வு கிராமமாக இவ்விடம் உள்ளது. இங்குள்ள 60 சதவிகித மக்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர் கள்.
மதாபர் கிராமத்தில் 17 வங்கிகள் உள்ளன. பிராந்திய, தனியார், தேசிய வங்கிகள் அனைத்தும் தங்கள் கிளைகளை இங்கே கடைபரப்பி உள்ளன. 2005 ஆம் ஆண்டில் இந்த வங்கிகள் வெளியிட்ட கணக்கின்படி 2000 கோடி ரூபாயை இந்தக் கிராமத்தினர் சேமிப்புக் கணக்கில் போட்டுள்ளனர். ஒரு தனிநபரின் ஆண்டு வருமானம் 13 லட்சமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. “ஒரு வருக்கு வங்கி இருப்பு 20 லட்சமாவது இருக்கும்” என்கிறார் நகைக்கடை உரிமையாளர் பவேஷ் பரே. இந்த வங்கிகளில் அதிகம் கடன்கள் கேட்டு யாரும் வருவதில்லை.

லண்டன், கிழக்கு ஆப்பிரிக்கா, கனடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் பட்டேல்கள் ஆண்டுதோறும் பிக்செட் டெபாசிட்டாக 10 முதல் 15 கோடி ரூபாய் சேர்க்கப் படுகிறது. கிராமத்தில் உள்ள கட்டட வசதிகளுக்காக கொஞ்சம் பணம் பொதுவாக  தொடர்ந்து  செலவழிக்கப் படுகிறது. இங்குள்ள சொத்துகளின் விலை அதிகம். ஒரு சதுர மீட்டருக்கு 35 ஆயிரம் ரூபாய் விலை என பெயர் சொல்ல விரும்பாத நிலத்தரகர் ஒருவர் தெரிவிக்கிறார். இங்குள்ள எல்லா வீடுகளிலும் அதிநவீன ஃப்ளாட் ஸ்கிரீன் தொலைக் காட்சிகள் உள்ளன. துவைக்கும் எந்திரங்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளும் இல்லாத வீடுகள் கிடையாது. ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.
1990&ல் ஜோவர் சிங் ஜடேஜா, கிராம பஞ்சாயத்துத் தலைவராக முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பஞ்சாயத்து அலுவலகம் களிமண்ணில் கட்டப்பட்டிருந்தது. ஆறு ஆண்டுகளில் இப்போது நவீன அலுவலகமாக அது மாறிவிட்டது.  குளிர்சாதன வசதி, கணிப்பொறி வசதியும் இங்குள்ளது.
2001-ல் குஜராத்தை குலுக்கிய நில அதிர்ச்சி மதாபரை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. ஆனாலும் அரசு 20 கோடி ரூபாயை நிவார்ணப் பணி களுக்காக மதாபர் தபால் துறையில் செலுத்தியது.  இதுவரை அந்தப் பணத்தில் இதுவரை நிவாரணம் கேட்டு யாரும் வரவில்லை. இதைவிட ஒரு வசதியான கிராமத்தை  இந்தியாவில் வேறு பார்க்க முடியும் என்பது சந்தேகம்தான்.
புத்தாண்டில் இது போன்ற மகிழ்வு தரக்கூடிய செய்திகளையாவது படிப்போம்.
                                                                                                நன்றி:சுண்டே இந்தியன்,
__________________________________________________________________________________________________________
ஹாலிவுட் தீ விபத்து.
________________________________


  ஹாலிவுட்டில் காரில் தீவைத்து படமெடுப்பதுதான் வாடிக்கை ,ஆனால் அங்கு வைக்கப்பட்ட கார்களில் தீப்பிடித்து பெரும் விபத்தே ஏற்பட்டுவிட்டது.ஆனால் அதை லாஸ் ஏஞ்சல் தீயணைப்பு வீரர்கள்தான் அனைத்து காப்பாற்றியுள்ளனர்.அந்த பக்கம் எந்த கதாநாயகனும் எட்டியே பார்க்கவில்லை.
___________________________________________________________________________________________ 
தானே புயல் புதுவை,தமிழக வட மாவட்டங்களை பாதித்துள்ளது.சுமார் 1000-ம்கோடிகளுக்கு மேல் சேதவிபரம் வந்துள்ளது.
மழை ஓய்ந்திருந்தாலும் வெள்ளம் வடியவில்லை.இதுவரை புயல் கோரத்திற்கு 33 பேர் பலியாகியுள்ளனர்.

அறுவடைக்கு தயாரான பயிர்கள் நீரால் நாசமாகியுள்ளன.
____________________________________________________________________________________________

நாசமாக போக ஒரு ஆராய்ச்சி?
நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பாலூட்டிகளுக்கிடையே குறிப்பாக மனிதர்களிடையே பறவை காய்ச்சல்கிருமிகளை எவ்வாறு மனிதர்களுக்கும் பரப்ப முடியும் என்பதை தனது ஆய்வு மூலம் கண்டுபிடித்திருந்தது.

உயிரியல் தீவிரவாதம்[பயோ டெரரிஸ்ட் ] உயிரியல் பொருட்களை, குறிப்பாக ஆபத்தான கிருமிகளைக் கொண்டு அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் விஞ்ஞானத்தின் நோக்கம் தோற்றுப்போகக்கூடிய நிலை ஏற்படலாம்.
இந்த வைரஸ்களை எவ்வாறு உருவாக்குவது, அவற்றை எவ்வாறு பயன்படு்த்துவது போன்ற விடயங்கள் வெளியாருக்கு தெரியவந்தால் அந்த வைரஸ்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் அதனால்ஏற்படக்கூடிய ஆபத்துக்களை எப்படி குறைக்க முடியும் என்பது தொடர்பாகவும் ஆய்வுகள் நடக்கிறது.
பறவைக் காய்ச்சல் வைரஸான எச்5என்1 உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய கிருமிதான், ஆனால் தற்போதிருக்கின்ற கிருமிகள் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் தன்மை உடையதாக இல்லை.ஆனால் ஆய்வின் மூலம் உர்ய்வாக்கப்பட்ட கிருமிகள் மனிதருக்கும் பரவும் தன்மையை கொண்டுள்ளது.
தரவுகளை மறைக்குமாறு வற்புறுத்தல்இந்தஆய்வு அமெரிக்காவில் பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு அந்த கண்டுபிடிப்பு தகவல்களை பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரையாக வரைந்தவர்கள், அவற்றைவிஞ்ஞான சஞ்சிகைகளில் வெளியிட வேண்டுமானால் முக்கிய சில தகவல்களை மறைக்க வேண்டுமென்று அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர்.
இவ்வாறான தகவல்கள் வெளிவருவது பயங்கரவாத நோக்கங்களுக்கு சாதகமாக அமைந்துவிடுமென்று அந்நாட்டு சுகாதாரதுறை அதிகாரிகள் வாதி்ட்டுள்ளனர்.
ஆனால், ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த தகவல்களை தாராளமாகப் பயன்படுத்த உத்தரவாதம் கிடைக்கும்வரை கட்டுரைகளை மாற்றியமைக்க சைன்ன்ஸ் மற்றும் நேச்சர் பத்திரிக்கைகள் மறுத்துவிட்டன.

ஆய்வுக் கட்டுரையை மாற்றியமைக்கக் கோரும் அமெரிக்காவின் உயிரியல் பாதுகாப்பு தொடர்பான தேசிய விஞ்ஞான ஆலோசனை சபையின் விளக்கத்தை தம்மால் ஏற்க முடியாது என்று இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவைச் சேர்ந்த நெதர்லாந்து ஆய்வாளர் அல்பேர்ட் ஒஸ்டர்ஹோஸ் கூறியுள்ளார்.
கிருமிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கு இந்த தகவல்களைப் பயன்படுத்த தாராளமாக அனுமதியளிக்கப்பட வேண்டுமென்று நேச்சர் சஞ்சிகைக்கு அவர் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானிகளுக்கு தங்கள் ஆய்வு என்ற ஒன்றைத்தவிர உலகமக்களின் நலன்,பாதுகாப்பு பெரியதாக இல்லை.இது போன்ற தகவல்கள் தவறான தீவிரவாதிகள் கைகளில் அகப்படுமேயானால் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி கவனத்தில் கொள்ள அறிஞர்கள் எனப்படும் இவர்கள் ஏன் சிந்திக்க மாட்டேன் என்கிறார்கள்.ஆராய்ச்சி என்ற பெயரில் நாசகார கிருமிகள்,குளோனிங் என்று இயர்கைக்கு மாறாக இது போன்று ஆய்வுகள் செய்வதின் விளைவுதான் எய்ட்ஸ் போன்ற தீர்க்க இயலா வியாதிகள் உருவாகி வரிகின்றன.
உலக சுகாதார நிறுவனம் இது போன்ற நாசம் விளைவிக்கும் தேவையற்ற ஆபத்தான ஆய்வுகளை தடை செய்ய வேண்டும். 


                                                  எப்போதான் இந்த மனுசங்க திருந்துவாங்க/ளோ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?