5 முதலாளிகளின் ஆட்சி -குடியாட்சி?

ந்தியா குடியரசு நாடாகி 62 ஆண்டுகளாகின்றன. அதாவது, கடந்த 62 ஆண்டுகளாக இந்திய மக்களுக்காக இந்திய மக்களால் நடத்தப்படும் மக்களாட்சி நடந்துவருகிறது. ஆனால், இன்றைய இந்திய மக்களின் சமூக&பொருளாதார நிலையை பார்க்கிற போது ஒரு (சிறு)பகுதி இந்தியர்களுக்காக ஒரு (சிறு)பகுதி இந்தியர்களால் நடத்தப்படும் ஆட்சியாகவே இது இருக்கிறது. 




மனித வளர்ச்சி குறியீட்டெண் பட்டியலில் மிகவும் பின்தங்கியிருக்கும் இந்தியா ஊழல் உணர்தல் குறியீட்டெண் பட்டியலில் முன்னணி நாடுகளுள் ஒன்றாக இருப்பது இந்தியாவில் நடக்கும் மக்களாட்சியின் லட்சனத்தை காட்டுகிறது. உலகின் மிக மோசமான விஷயங்களுக்கான எந்தப் பட்டியலை எடுத்தாலும் அதில் முதல் பத்து இடங்களுக்குள் ஒன்று இந்தியாவிற்கு கிடைத்துவிடுவது இந்தியர்கள் செய்த ‘‘பெரும் பேறு’’. உலகிலேயே ஊட்டச்சத்துக் குறைவால் பாதிகப்பட்ட குழந்தைகள் அதிகமிருக்கும் நாடு, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகம் இறக்கும் நாடு, எச்.ஐ.வி. தொற்று அதிகமிருக்கும் நாடு, எளிதில் குணப்படுத்தப்பட கூடிய நோய்களால் அதிகம் இறப்பவர்கள் இருக்கும் நாடு, படிப்பறிவற்றவர்கள் அதிகமிருக்கும் நாடு, வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் அதிகமிருக்கும் நாடு என பல விஷயங்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், பில்லியனர்களை அதிகமாக கொண்டிருக்கும் முதல் பத்து நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. தனியார் மருத்துவத்துறையில் புழங்கும் பணத்தில் உலகில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்திலிருக்கும் இந்தியா, பொதுமக்கள் மருத்துவத்திற்காக அரசாங்கம் செலவிடும் நிதி என்று வருகிற போது உலகின் ஆக மோசமான நாடுகளுள் ஒன்றாக இருக்கிறது. பள்ளிக் கல்வி என்று வருகிற போது இந்தியா செலவிடும் நிதியானது பல ஏழை ஆப்பிரிக்க நாடுகளை விட மிகக் குறைவு (ஜிடிபி சதவிகிதத்தில்). கடந்த பத்து ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் உலகின் தலைசிறந்த 500 பல்கலைக்கழங்களின் பட்டியலில் ஓரிரு முறைகள் தவிர (அதுவும் ஓரிரு பல்கலைக்கழகங்கள்) இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றதேயில்லை. முதல் 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் எப்போதும் இந்தியா எப்போதும் இடம்பெற்றதில்லை. ஆனால் சீனாவில் சுமார் 10 பல்கலைக்கழகங்கள் முதல் 100 இடங்களுக்குள் வருகின்றன. 21ஆம் நூற்றாண்டில், இந்தியா வல்லரசாகி வருவதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் இந்த யுகத்தில் சுமார் 75 சதவிகித இந்தியர்களுக்கு கழிப்பிட வசதி கிடையாது. தகவல் தொழில்நுட்பத்துறையில், குறிப்பாக மென்பொருள் துறையில் உலகின் முன்னணி நாடுகளுள் ஒன்றாக இந்தியாவில் கணிணி மற்றும் இணையத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 10 சதவிகிதம் கூட கிடையாது. 
  

இந்திய மக்களாட்சியின் முக்கிய அம்சமான மதச்சார்பின்மைக்கு சமீபத்திய ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டிக்கு ஏற்பட்ட கதியே சாட்சி. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான pew நடத்திய ஆய்வில் மத சகிப்பின்மையில் சவுதி அரேபியாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பது தெரியவந்தது. இது நம்மில் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும். அதற்குக் காரணம், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று நாம் அனைவரும் நம்பிக்கொண்டிருப்பதே. சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்பது மக்களாட்சியின் ஓர் அம்சம் மட்டுமே (இந்திய தேர்தல்களில் பணத்திற்கு இருக்கும் சுதந்திரம் வேறு எதற்கும் இல்லை). சட்டத்தின் மாட்சிமை, அதாவது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற முந்நூறு ஆண்டு கால பழமை கொண்ட மக்களாட்சியின் அடிப்படை தத்துவம் இன்றளவும் இந்திய சமூகத்தில் வேரூன்றவில்லை என்பதே யதார்த்தம். இந்தியாவில் நடக்கும் மக்களாட்சியின் யோக்கியதைக்கு காஷ்மீரிலும், சத்தீஸ்கரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் நடக்கும் நிகழ்வுகளே சான்று.


இத்தனைக்குப் பிறகும் உலகின் முதல் பத்து பெரும் பொருளாதார சக்திகளுள் இந்தியாவும் ஒன்று என்பதில் எந்த ஆச்சர்யமும் இருக்க முடியாது. இந்தியாவின் பரப்பளவு, மனித வளம் மற்றும் இயற்கை வளம் அத்தகையன. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 20 சதவிகிதமாக இருக்கும் பெரும் பணக்காரர்கள், பணக்காரர்கள், மேல் நடுத்தர மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கையானது அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகைக்கு சமம் என்பதை மனதில் கொண்டால் ஏன் இந்தியா உலக அரங்கில் முக்கியமான நாடுகளுள் ஒன்றாக கருதப்படுகிறது என்பது புரியும். ஏறக்குறைய  ஒரே காலகட்டத்தில் தங்களது பயணத்தை தொடங்கிய சுதந்திர இந்தியாவையும், மக்கள் சீனத்தையும் ஒப்பிட்டால் இந்தியா எந்த அளவிற்கு பின்தங்கியுள்ளது என்பது புரியும். கல்வி, மருத்துவம், தொழிற்துறை என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் சீனாவின் வளர்ச்சி இந்தியாவை விட மும்மடங்கு அதிகம். பலரும் நினைத்துக்கொண்டிருப்பதைப் போல இதற்குக் காரணம் சீனாவின் ஒரு கட்சி சர்வாதிகாரமல்ல. அது உண்மையெனில் பல ஆப்பிரிக்க நாடுகளும், வட கொரியாவும் அதை சாதித்திருக்க வேண்டும். மாறாக சீனா கடைபிடித்த அரசியல் பொருளாதாரக் கொள்கைகளே அதன் இன்றைய நிலைக்குக் காரணம். குறிப்பாக முதல் 25 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நில சீர்திருத்தமும் மற்றும் கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களும் சீனாவிற்கு பலமான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தன. இந்த எளிய உண்மையை, உலகப் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்யா சென் உட்பட பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். நீண்ட கால அடிப்படையில் பார்க்கிற போது, பல கட்சிகளைக் கொண்ட மக்களாட்சி இல்லாதது சீனாவிற்கான பலவீனமே தவிர பலமல்ல. இந்தியாவில் இத்தகைய அடிப்படையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேயில்லை என்பதே உண்மை.


கடந்த இருபது ஆண்டு கால இந்தியாவின் ஆட்சியை பார்க்கிற போது இந்தியாவில் நடப்பது பெருநிறுவனங்களுக்காக, பெரு நிறுவனங்களால் நடத்தப்படும் பெருநிறுவன ஆட்சி என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. மக்களாட்சி என்பது இந்தியர்களுக்கு இன்னமும் பல காலத்திற்கு கனவாகவே இருக்கும்.என்றே தெரிகிறது.


நன்றி:சண்டே இந்தியன்,
 ________________________________________________________________________
ஆப்கான் ஹெல்மாண்ட்  மாகாணத்தில் கார் குண்டு இன்று [26]வெடித்ததில் 4  பேர்கள்  கொல்லப்பட்டனர.31 பேர் படுகாயமடைந்தனர்.
_______________________________________________________________________
அலபாமா[அமெரிக்கா]வில்சூறாவளியால் பாதிக்கப்பட்டக்குடும்பம்.மிரட்சி மாறா குழந்தை.
_____________________________________________________________________




--------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பு உள்ளங்களே.

வணக்கம்.நமது “சுரன்” வலைப்பூ ஆரம்பித்து முதல் பதிவிட்டு இன்றுடன் ஓராண்டு ஆகிறது.
இன்றுவரை தொடர்ந்து வந்து படித்தவர்களுக்கும்,அவ்வப்போது எட்டி பார்த்து சென்றவர்களுக்கும் எனது நன்றிகள்.
அதிக அளவு என்னை பாதித்த செய்திகளையே மற்ற இதழ்கள்.வலைகளில் இருந்து  மீள்பதிவிட்டிருக்கிறேன்.
அவ்வப்போது சொந்த சரக்குகளும் எட்டி பார்த்துள்ளன.குறைகளை மன்னித்து-மறந்திட வேண்டுகிறேன்.
அவ்வப்போது வந்து சென்றவர்கள் தொடர்ந்து வந்து பார்வையிட வேண்டுகிறேன்.
தொடர்ந்து வந்தவர்கள்மேலும் தொடர விரும்புகிறேன்.அனைவருக்கும் நன்றி.
அதிக மற்றைய வேலைப்பளுதான் சொந்த படைப்புகளைமட்டும் வெளியிட தடையாக இருந்து வருகிறது.அதை விரைவில் சரி செய்ய முயல்கிறேன்.
மீண்டும் நன்றி.
உங்கள் அன்பில்
சுகுமாரன்,

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?