முதல் கொலை.?


01-01-2012 விடிகாலை 12-10 க்கு கனடாவின் வான்கூவர் நகரில் 20 வயது மதிக்கத்தக்க நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதுதான் 2012 புத்தாண்டின் முதல் கொலையாக பதிவு செய்யப்பட்டது.என்று எண்ணப்படுகிறது.

இவர் ஓர் உணவகத்தில் சுடப்பட்ட நிலையில் கிடந்தார். இதுவரை இவரைப்பற்றிய தகவல் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. காவல்துறையினரால் தேடப்படுவோர் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெறவில்லை.சுட்டவர் யார் என்றும் தெரியவில்லை.
இதற்கு கனடா பெருமையடித்துக்கொள்வதில் நமக்கு உடன்பாடில்லைஇந்தியாவை குறிப்பாக தமிழ் நாட்டை இந்த சாதனைக்கான கண்க்கெடுப்பில் இவர்கள் சேர்த்துக்கொள்ளாதது .தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்.

ஜனவரி01முதல் இன்றுவரை நாளுக்கு இரண்டு கொலை என்ற முறையில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது.மேலும் இது பற்றி  நாள்வாரி பட்டியல்வேண்டுமானால் கலைஞரையோ, தெருவாரியான உலக அளவு புள்ளி விபரம் தேவை என்றால் கேப்டனையோ ஐ.நா.சபை அணுகி பெற்றுக்கொள்ளட்டும்.
_________________________________________________________________________________

மேற்கு வங்கத்தில் பலூர்கட்டில் நகரில்உள்ள சக்ரம் பிரஜாலல் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ள பரிஜத் சஹா என்பவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ 10 ஆயிரம் எடுத்துவிட்டுதுண்டு சீட்டில் நிலுவைத் தொகையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.காரணம் அச்சீட்டில் நிலுவைத் தொகை [49570,08,17,538] 49570 கோடி என்று இருந்தது. இதனால் அதிர்ச்சியானவர் ஒருவாரம் இதைப்பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை. பின்னர் கமாரபரா எஸ்பிஐ வங்கிக்கிளையில் பணியாற்றும் தனது நண்பரிடம் இதைத் தெரிவித்துள்ளார். அவருடன்இதை பற்றி வங்கியின் மேலாளரிடம் தெரிவித்துள்ளார்.
மேலாளர் உயர் அதிகாரிகளுக்கும், மும்பை ஐ.டி துறைக்கும் தகவல் அளித்தார்.


தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தொழில்நுட்பக் கோளாறால்தான் இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது சரிசெய்யப்பட்டது. என எஸ்பிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊழலானாலும் சரி.தொழில் நுட்பக்கோளாறானாலும் சரி .இப்போது எல்லாம் லட்சம் கோடி கணக்கில்தானா?
____________________________________________________________________________________________





ஆரோக்கியத்திற்கு உதவும் சோற்றுக்கற்றாழை 
சோற்றுக்கற்றாழையை சருமம் மற்றும் தலையில் தேய்ப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகளைப்பற்றி தெரிந்திருக்கலாம். சோற்றுக்கற்றாழை சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள்  தெரியுமா?.  சோற்றுக்கற்றாழை சாறை பருகுவதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம், அதிலிருக்கும் வைட்டமின், மினரல் மற்றும் அமினோ அமிலங்கள் தான்.


இனி கற்றாழைச் சாறின்நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.தினமும் சோற்றுக்கற்றாழை சாறு குடிப்பதால், நம் உணவினை ஜீரணிக்கும் அமைப்பு சுத்தம் செய்யப்படுகிறது. இதனால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதில்லை. மேலும், குடலையும் சுத்தம் செய்து மலச்சிக்கலையும் தடுக்கிறது. வயிற்றுப்போக்கு காலங்களில் அதனை குறைக்கவும் உதவுகிறது.

உடலுக்குத் தேவையான சக்தியை தருவதிலும், உடல் எடையை ஒழுங்குபடுத்துவதிலும்இதன்பங்குஅதிகம்.
 தினமும் இச்சாறை குடிப்பதால், உடலை நல்ல நிலையில் வைத்திருக்க முடியும். அதேபோல், உடல் சக்தியை அதிகரிக்கவும் முடியும்.நாம் மேற்கொள்ளும் முறையற்ற உணவுப் பழக்கத்தால், நம் உடலில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் உடலில் நச்சுப் பொருட்கள் உருவாகும் நிலை உள்ளது. இதனை நீக்கவும் இச்சாறு உதவுகிறது.மூட்டுகளை வலுப்படுத்துகிறது. இதனால் மூட்டு தசைகளில் ஏற்படும் வலி, கட்டி, வீக்கம், சுளுக்கு போன்றவற்றையும் இந்த சோற்றுக்கற்றாழையால் கட்டுப்படுத்தப்படுகிறது.
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
யாரானாலும் மஞ்சள் கோட்டை மதித்து நடக்கணும்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?