ஈரான் அதிரடி,

யுரேனியம் செறிவூட்டல் தொழில்நுட்பத்தில் ஈரான் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த காட்சிகளை நேரடியாக தனது வானொளிநிகழ்ச்சி மூலம் ஒளிபரப்பி, உலக நாடுகளை குறிப்பாக அமெரிக்காவுக்கு அதிர்ச்சி தந்துள்ளது ஈரான்.


அமெரிக்கா மற்றும் மேலைநாடுகளின் எதிர்ப்புகளுக்கிடையே தலைநகர் டெஹ்ரான் அருகில், போர்டோ மலைப்பகுதியில், பூமிக்கடியில் மிகபாதுகாப்பாக ,ரகசியமானமு றையில், அணுஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நடத்தி வந்தது. இதை மோப்பம் பிடித்த அமெரிக்கா ஈரான் அரசுக்குகடும் எதிர்ப்பு தெரிவித்தது. 
பொருளாதாரத்தடை கொணர முயற்சித்து வந்தது.
முதலில் அணு ஆயுத தயாரிப்பு, யுரேனியம் செறிவூட்டும் பணி தங்கள் நாட்டில் நடை பெறவில்லை என மறுத்துவந்த ஈராந்தற்போது வலிய தங்கள் நாடு அணு யுரேனிய செறிவூட்டலில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், செறிவூட்டுதலுக்கு பயன்படும் யுரேனிய பிளேட்டுகளை பொருத்தும் காட்சிகளையும் ஈரான் நாட்டின் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இப்பணிகளை அந்நாட்டின் அதிபர் அகமதின்ஜாட் பார்வையிடுவது போலவும் அவருடன் ஈரான் அணுவிஞ்ஞானிகள் உடன் இருப்பது போலவும் காட்சி ஒளி பரப்பப்பட்டது.

மேலும் மற்றொரு அதிர்ச்சியாக, 6 ஐரோப்பிய யூனியனைச்சேர்ந்த நாடுகளுக்கு தனதுபெட்ரோலிய சப்ளையையும் ஈரான் நிறுத்திவிட்டது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதால், அந்நாட்டிலிருந்து பெட்ரோல் இறக்குமதியை நிறுத்தப்போவதாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் அறிவித்திருந்தன. அவர்கள் நிறுத்தும் முன்பாகவே ஈரான் தனது பெட்ரோல் சப்ளையை நிறுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
ஈரானின் இந்த செயல் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 ஈரான் யுரேனியம் செறிவூட்டும் பணியை வெளிப்படையாக ஆரம்பித்திருப்பது அமெரிக்காவிற்குதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

தான் மட்டுமே அணு ஆயுதத்தை வைத்திருக்க வேண்டும்.மற்ற நாடுகள் வாளும்-வேலும் வைத்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதுதானே அமெரிக்காவின் விருப்பம்.




_________________________________________________________________________________
டைட்டான் கிரகம் தனது துணைக்கிரகத்துடன்.

_________________________________________________________________________________

காஸ்ட்ரோவின் நினைவுக் குறிப்புகள்.
______________________________________
கியூபாவின் முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ தனது வாழ்நாள் நினைவுக் குறிப்புகளை நூலாக வெளியிட்டுள்ளார். ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்நூல் அவரது இளமை நினைவுகளையும் கியூபாப் புரட்சியில் அவரது பங்களிப்பு போன்றவற்றை விளக்குகிறது.


பிடெல் காஸ்ட்ரோ
வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய பிடெல் காஸ்ட்ரோ, தனது நாட்டுக்காகவும் மனித இனத்துக்காகவும், இந்தப் பூமிக்காகவும் கியூபா நாட்டினன் ஒவ்வொருவரும் தமது கடைசி மூச்சு இருக்கும் வரை போராட வேண்டும் எனக் கூறினார். 85 வயதான காஸ்ட்ரோ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் பொது மக்கள் முன்னால் தோன்றியது இதுவே முதற் தடவையாகும்.

தலைநகர் அபானாவில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழா ஆறு மணித்தியாலங்கள் வரை நடைபெற்ரதாக கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திப்பத்திரிகை கிரான்மா தெரிவித்துள்ளது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த நினைவுக் குறிப்புகள் காஸ்ட்ரோ, மற்றும் ஊடகவியலாளர் கத்தியூஸ்க்கா பிளான்கோ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற உரையாடல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது.

கியூபாவின் அரசுத்தலைவர் பதவியை பிடெல் காஸ்ரோ 2006 ஆம் ஆண்டில் தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம்ஒப்படைத்தார்.
________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?