முறைகேடுகளே முறையாகக் கொண்டு.

 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்ற நிறுவனங்களில் தங்கள் நிறுவனத்தை மொரிசியஸ்நாட்டில் பதிவு செய்துள்ளதை முறைகேடாக பயன்படுத்தி ரூ.1,500 கோடிக்கு வருமான வரி மோசடி செய்திருப்பதாகத் தெரியவருகிறது.


வோடஃபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய 11,000 கோடி வருமான வரி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்நிறுவனத்துக்கு ஆதரவாக""வெளிநாடுகளில் நடந்த பரிமாற்றத்துக்கு இந்தியாவில் வரி செலுத்த வேண்டியதில்லை'' என்று தீர்ப்பளித்துள்ளதால், இந்த 1,500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு மோசடிக்கு எப்படி தண்டிப்பது, வரியை எப்படி வாங்குவது என்று வருமானவரித்துறை ஆய்வு செய்து வருகிறது.
இந்தியாவில் தொழில் செய்யும் "டெலிகாம்' நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஈட்டும் லாபத்தை, மூலதன ஆதாயமாகக் கருதித்தான் வருமான வரித்துறை வரி விதிக்கிறது.
ஆனால் இந்த வரி விதிப்பையே கேள்விகேட்டிருப்பதால் இந்த வரி ஏய்ப்பை எப்படித் தடுப்பது என்று சட்ட நிபுணர்களுடன் வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்க, மொரிசியஸ் நாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் வரிச் சலுகைகளை வேறு சிலரும் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால் இந்திய அரசுக்குக் கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வரி வருவாய் வராமலேயே போய்விடுகிறது.
இதற்கு அரசு உயர் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் உடந்தையாக இருப்பதால் வருமான வரித்துறை போன்ற அரசு அமைப்புகள் ஏதும் செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. இந்த வரிச்சலுகையை மத்திய அரசு ஆய்வு செய்யுமா, திருத்துமா, திரும்பப் பெறுமா என்பதற்கெல்லாம் இப்போதைக்கு விடை இல்லை.


வீட்டு மனை, அடுக்ககம் ஆகியவற்றைக் கட்டித்தரும் ஒரு நிறுவனமும் 2 ஜி அலைக்கற்றை உரிமத்தைப் பெற்று தொழில் செய்துவருகிறது.
அந்த நிறுவனம் மட்டுமே மூலதன ஆதாய வரியாக ரூ.80 கோடி செலுத்த வேண்டியிருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் அந்த நிறுவனம் அதை சட்டை செய்யவே இல்லை. மேற்கொண்டு என்ன சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று வருமான வரித்துறை ஆய்வு செய்துவருகிறது.
2ஜி சேவை அளிக்க உரிமம் பெற்றுள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தாலும் அவற்றின் பணப் பரிமாற்றங்கள் வெளிநாடுகளில்தான் நடைபெறுகின்றன. அவை மிகவும் சாதுர்யமாகச் செயல்பட்டு இந்திய அரசின் வரிவிதிப்பு எல்லையைத் தவிர்க்கின்றன.
வோடஃபோன் வருமான வரி பாக்கி வழக்கில் உச்ச நீதிமன்றம் அந்த நிறுவனத்துக்குச் சாதகமாக அளித்துள்ள தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வருமான வரித்துறை மனு தாக்கல் செய்திருக்கிறது.
அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது இந்த நிறுவனங்களின் உத்தியை விளக்க முடிவு செய்துள்ளது துறை. சொலிசிட்டர் ஜெனரல் ரோஹிங்டன் நாரிமன் இதற்கான தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


வோடஃபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய 11,000 கோடி ரூபாய் வருமான வரி கிடைக்காமல் போனதல்லாமல், பிற நிறுவனங்களும் அதே வகையில் சொல்லி வரி செலுத்தாமல் தப்பித்துவிடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
அதுமட்டும் அல்லாமல், மோரிஷஸ் நாட்டுடன் இந்தியா செய்துகொண்டுள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை இந்த நிறுவனங்கள் குயுக்தியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
பங்குகளின் உரிமையை மாற்றிக் கொண்டும், பெருந்தொகையைக் கடனாகப் பெற்றிருப்பதாகக் கணக்கு காட்டியும், ஏற்கெனவே வாங்கிய கடன் மீது மேலும் கடன் வாங்கியதைப்போல கணக்கு கொடுத்தும், அடித்தளக் கட்டமைப்புக்குச் செலவிட்டதைப்போல கணக்கு எழுதியும் வரி செலுத்துவதைத் தவிர்க்கின்றன.
ஏற்கனவே 2-ஜி ஒதுக்கீட்டில் முறைகேடு.இப்போது அதில் கிடைக்கும் வருமானத்துக்கும் வரி ஏய்ப்பு.
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பினை இது போன்ற முறைகேடுகளை செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள நிறுவனங்கள் முறைகேடுகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க மறுபரிசீலனை செய்ய வேண்டும். 


அத்துடன் இந்தியாவில் தொழில் நடத்துபவர்கள் இந்திய வருமான வரி சட்டத்துக்குட்பட்டவர்கள் என்றவிதியைக்கொண்டுவர வேண்டும்.பிற நாடுகளில் பதிவு செய்து இந்தியாவில் சலுகை பெறலாம் என்ற விதியையும் நீக்க வேண்டும்.இங்குள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் வரியைக்கட்டிக்கொண்டிருக்க பன்னாட்டு நிறுவனங்கள் பில்லியன் டாலர் தொழில் கொள்ளைக்கு சலுகைகள் வழங்குவது தேவையா?அப்படி நம் நாட்டுக்கு எந்த நன்மையும்-வருமானமும் இல்லாமல் மேற்கொண்டு தொல்லை தந்து கொண்டிக்கும் பன்னாட்டு தொழிலதிபர்களை இங்கு தொழில் துவக்க அழைப்பது சரியல்ல.இந்தியர்களே பல நாடுகளில் தொழில் துவக்கும் நிலையில் உள்ளோம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இலங்கைக்கு எதிராக அமெரிக்கா.
______________________________________

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்  19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தானே நேரடியாக முன்வைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிப்பட்டபோது அப்பாவி தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதற்காக  இலங்கைக்கு எதிராக இத்தகைய தீர்மானமொன்றை அமெரிக்காவின் ஆதரவுடன் கனடா கொண்டுவந்தது. எனினும் அதை பெரும்பான்மையான வாக்குகளால் அப்போது இலங்கை தோற்கடித்தது.

இந்நிலையில் இம்முறை தானே நேரடியாக தீர்மானத்தை முன்வைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்காவினால்  இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படும்போது பெரும்பலான நாடுகள் அதை ஆதரிக்கும் என அமெரிக்கா நம்புவதாக இலங்கை கருதுகிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்குமாறு ஏனைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கையில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் தனது தூதுவர்களை அமெரிக்கா ஈடுபடுத்தியுள்ளதாக ஜெனீவாவிலிருந்து ஆபிரிக்காவுக்கு நேற்று புறப்பட்ட அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார்.
இலங்கைக்கு ஆதரவாக சீனாவும் ,ரஷ்யாவும் பேசி வருவதால் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான நிலையை எடுத்துள்ளது.மற்றபடி கொல்லப்பட்ட தமிழ் மக்களின் மீதான அனுதாபம் காரணம் கிடையாது.ஆனால் ரஷ்யா,சீனாவிடம் வீட்டோ அதிகாரம் இருக்கிறது.எந்த தீர்மானத்தையும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட முடியும்.
---------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?