வந்து,வந்து சென்றவர்,

 மத்திய உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் நாகர்கோவிலில் தங்கி இருந்த ஜெர்மானியர் சோன்டெக் ரைனர் ஹெர்மன் கண்டறியப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டார் என கன்னியாகுமரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தெரிவித்தார்.


 " ஜெர்மானியர் இம்மாவட்டத்தில் ஒரு வாரமாகத் தங்கியுள்ளார். இவர் இங்கு தங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை எனக்கு தகவல் அனுப்பியது. விசாரணையில் நீதிமன்ற சாலையில் உள்ள ஒரு விடுதியில் அவர் தங்கி இருப்பது தெரிய வந்தது. இந்த தகவல் மத்திய உளவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையிலிருந்து க்யூ பிரிவு காவலர்கள் நாகர்கோவில் வந்து அவரை ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு அழைத்துச் சென்றனர் என்றார் .
ஒரு வெளிநாட்டுக்காரர் இந்தியாவில் வந்து அறையை வாடகைக்கு எடுத்து அடிக்கடி தங்குகிறார் என்றால் அதை இங்குள்ள காவலர்கள் நோட்டமிட வேண்டாமா?
அதுவும் இது போன்ற பரபரப்பான சூழலில் இடிந்தகரை,கூடங்குளம் என்று அவர் வந்து போயுள்ளார்.தமிழ்நாடு காவல்துறைக்கு தெரியாமல் போனதா.அல்லது கண்டுகொள்ளவில்லையா?
வெளி மாநில.வெளி நாட்டினரால் இந்தியாவில் ,தமிழ்நாட்டில் தீவிர வாத செயல்கள்,கொள்ளைகள்,கொலைகள் நடந்துவரும் கால கட்டத்தில் தமிழ் நாடு காவல்துறையின் செயல்பாடுகள் மிக அருமை.
திருப்பூரில் தங்கி வேலை பார்ப்பதாக,படிப்பதாகக்கூறும் நைஜிரியர்கள் தங்கள் பக்க தொழிலாக போதை மருந்து கடத்துவது பகிரங்கமாகி விட்ட நிலையில் அடிக்கடி வருந்து செல்லும் சுற்றுலா பயணிகளிடம் ஒரு கண் காவல்துறையினர் வைத்திருக்க வேண்டாமா?
வங்கிக்கொள்ளை நடந்த பின் வட மாநில தொழிலாளர்கள் அனைவரையும் குற்ற வாளிகள் நடத்தும் காவல்துறை முதலிலேயே அவர்கள் நடமாட்டங்களை கண்காணித்து வந்திருந்தால் 5 பேரை போட்டுத்தள்ள வேண்டிய நிலை வந்திருக்காது.
மத்திய உளவுத்துறை ஜெர்மானியர் தங்கியுள்ளார்.என்றும் அவரை விசாரியுங்கள் என்ற பின் அவரை பிடித்தோம் என்பது தமிழக காவல்துறைக்கு நல்ல பெயரா?
அல்லது கூடங்குளம் போராட்டத்திற்கு பண உதவி செய்பவர்தானே இருக்கட்டும் என்றகூடங்குள போராட்ட ஆதரவு நிலைபாடா?
____________________________________________________________________________________________________________
 ணினி மொழிகள் கற்கலவச தளம்'
--------------------------------------------------------------------


ம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழிகளைக் கற்று, பல்வேறு வகையான திட்டங்களுகு புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பலரின் ஆசையாக உள்ளது.கணினி தொடர்பான பணி எனப் பல இதன் அடிப்படை காரணம்.


இவை தவிர, புரோகிராமிங் செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே, புரோ கிராமிங் பாடங்களைக் கற்றுக் கொள்கின்றனர். இவர்களுக்காக, இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது. இதன் பெயர் கோட் அகடமி(Code Academy). புரோகிராம் எழுதுவதனை கோடிங் (coding)எனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் இணைய தள முகவரிwww.codeacademy.com இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் அக்கவுண்ட் திறக்கும் முன்னர், புரோகிராமிங் எப்படி இருக்கும் என நமக்கு மிக, மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது. நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும்பாடம், அப்படியேகொஞ்சம் கொஞ்சமாகநம்மை புரோகிராமிங் என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கிறது. அதன் பின்னரே, நம்மை தளத்தில் பதியச் சொல்லி கேட்கிறது. இது இலவசம். ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப் படுகின்றன. பாடங்களும் கற்றுத் தரும் முறையும் மிகவும் வியப்பாக உள்ளன. புரோகிராமிங் செய்திடும் பயிற்சியில் நமக்கு டிப்ஸ் தரப்பட்டு வழி காட்டப்படுகிறது. பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில், நாம் பெறும் மதிப்பெண்கள், அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது, நம் கற்றுக் கொள்ளும் செயல் பாட்டினத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் புரோகிராமிங் கற்றுக் கொள்ளலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?