ஓளி மயமான வாழ்த்துக்கள்....


தமிழ்நாடு இருளில் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் தொழிற்சாலைகளுக்கு மாவட்ட வாரியாக வார மின்விடுமுறை நாட்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
ஈரோடு மாவட்டத்திற்கு திங்கட்கிழமை, சென்னை தெற்கு மற்றும் திருப்பத்தூர் பகுதிகளுக்கு திங்கட்கிழமை, சென்னை வடக்கு மற்றும் மதுரை பகுதிகளுக்கு புதன்கிழமையும், கோவை பகுதிக்கு வியாழக்கிழமையும், நெல்லை, திருப்பூர் மற்றும் நீலகிரி பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமையும், திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமையும் தொழிற்சாலை வார மின்விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 27ம் தேதி முதல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு 2 மணிநேரமாக அதிகரிக்கப்படுவதாகவும், மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு 4 மணிநேரமாக மின்வெட்டு இருக்கும். மாநிலத்தில், நாள் ஒன்றுக்கு 12,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், நமக்கு 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. தினந்தோறும் 4 ஆயிரம் மெகாவாட்ஸ் அளவிற்கு மின்பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆண்டுதோறும், மின்வெட்டு 10 சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பள்ளிகளுக்கு முடிந்தவரை தடையின்றி மின்சாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. காற்றாலை மின்உற்பத்தி ஜூன் மாதம் துவங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், அது துவங்கினால் மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தொழிற்சாலை மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு, 40 சதவீத மின்வெட்டு.
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, 2 மணி நேர மின் தடை.
* நகர மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு, 4 மணி நேர மின் தடை.
* வணிக பயனீட்டாளர்களுக்கு, மாலை 6 மணி முதல், 10 மணி வரை மின் பயனீட்டு கட்டுப்பாடு.
* தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் மின்சார விடுமுறை.
இதில், தொழிற்சாலைகளுக்கான மின்சார வார விடுமுறை, வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
மின்சார வார விடுமுறை விபரம்:--------------------------------------------------
திங்கள் ஈரோடு மண்டலம் (ஈரோடு, நாமக்கல், கோபி, சேலம், ஓமலூர், ராசிபுரம், வாழப்பாடி மற்றும் மேட்டூர்)
செவ்வாய் சென்னை தெற்கு மண்டலம் (அடையார், கே.கே., நகர், போரூர், கிண்டி, தாம்பரம், அண்ணா நகர், அம்பத்தூர், ஆவடி), திருப்பத்தூர் பகிர்மான வட்டம் (திருப்பத்தூர், வாணியம்பாடி, பள்ளிகொண்டா, ஆம்பூர், குடியாத்தம், பேர்ணாம்பூர்,
புதன் சென்னை வடக்கு மண்டலம் (அண்ணா சாலை, மயிலாப்பூர், எழும்பூர், தி.நகர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், பொன்னேரி) மற்றும் மதுரை மண்டலம் (மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, பழநி, காரைக்குடி, சிவகங்கை)
வியாழன் கோவை மண்டலத்தில், திருப்பூர் மற்றும் நீலகிரி மின்பகிர்மான வட்டம் நீங்கலாக
வெள்ளி திருநெல்வேலி மண்டலம் (திருநெல்வேலி, வள்ளியூர், சேரன்மகாதேவி, திசையன்விளை, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், சிவகிரி, தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, ஆலங்குளம், சங்கரன்கோவில், கலிங்கப்பட்டி) மற்றும் திருப்பூர், நீலகிரி பகிர்மான வட்டம்
சனி திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் மண்டலத்தில் திருப்பத்தூர் பகிர்மான வட்டம் நீங்கலாக
இந்த அடிப்படையில், மின்சார வார விடுமுறை அமலாகும் என, மின் வாரியம் அறிவித்துள்ளது.
இதில் ஞாயிற்றுக்கிழமையைக்காணோமே .அன்று எல்லா பக்கமும் விடுமுறையா?
இதில் அதாவது மின் தட்டுப்பாடு மற்றும் 10 மணி நேர மின் தடை தமிழ் நாட்டை உலுக்கி இருளாக்கிக்கொண்டிருக்கும்போதும் யாரவது அதிலும் குறிப்பாக பத்திரிகைகள் -ஊடகங்கள் முதல்வர் ஜெயலலிதா,மின் துறை அமைச்சரை குறை கூறி கண்டித்திருக்கிறார்களா?இல்லையே?

அதுவே கருணாநிதி ஆட்சிகாலத்தில் கருணாநிதியையும்,ஆற்காடு வீராசாமியையும் எப்படி எல்லாம் திட்டினார்கள்-நக்கலடித்து செய்திகள் வெளியிட்டார்கள்?அப்போதுஆங்காங்கே தலைகாட்டி இப்போது தலைவிரித்து ஆடும் மின் தடைக்கு அப்போது முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் மின் உற்பத்தி திட்டங்களே துவக்க வில்லை அதனால்தான் தட்டுப்பாடு என்று கருணாநிதி கூப்பாடு போட்டார்.புதிதாக மின் உற்பத்தி திட்டங்களும் துவக்கப்பட்டன.
இன்று ஜெயலலிதா கூறும் உடன்குடி திட்டமும் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டு வேலை ஆரம்பிக்கப் பட்டு .அய்யா வைகுண்டராஜன் மறைமுக எதிர்ப்பு வேலையால் ஆமைவேகத்தில் பணிகள் நடந்தன.இப்போது இவர் ஆள வந்து ஓராண்டு ஆகிறதே .அந்த திட்டத்தை ஏன் விரைவு படுத்த வில்லை? இன்னமும் கருணாநிதியை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்?

கருணாநிதிதான் மின் தடையால் பதவியை இழந்து வீட்டில் இருக்கிறாரே?அவரை இன்னமும் மைனாரிட்டி என்று சொல்லிக்கொண்டிருக்காமல் ஆக வேண்டிய வேலையை பாருங்கள் அம்மையாரே.உங்களுக்[காவது]கு ஒளி மயமான எதிர்காலம் பிறக்க பிறந்தநாள்[தாமதமான] வாழ்த்துக்கள்.!



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?