இந்தியா பட்ஜெட் -2


  • அரசு கடன் வாங்கலாமா?
  • பொதுத்துறை பங்குகளை மக்களுக்கு விற்கக்கூடாதா? பற்றாக்குறை பட்ஜெட் பாவச்செயலா? 
  • மத்திய பட்ஜெட் தொடர்பான அலசல்களில் தொட்டுக்காட்டப்படாத அடிப்படையான கூறுகளை இங்கே நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் பொருளாதார ஆய்வாளருமான வெங்கடேஷ் ஆத்ரேயா.
வெங்கடேஸஆத்ரேயா
                                                                                                                                                                 சந்திப்பு: அ. குமரேசன்
நேர்முக வரிகளில் செய்யப்படும் மோசடி பற்றி ஏற்கெனவே பார்த் தோம். அதில் முக்கியமான ஒன்று சொத்துவரி. இந்தியா முழுவதும் நடப்பு நிதியாண்டில் சொத்துவரி யாக பணக்காரர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது எவ்வளவு என்று பார்த்தால் அது எவ்வளவு அபத்தம் என்பது புரியும். ஒரு முகேஷ் அம் பானி 6,000 கோடி ரூபாயில் தனக் கென ஒரு வீட்டையே கட்டுகிறார். ஆனால், அகில இந்திய அளவி லேயே சொத்துவரியாக வசூலிக்கப் பட்டது வெறும் 500 கோடி ரூபாய் தான். இந்த ஆண்டு அதை 1,030 கோடி ரூபாயாக்கியிருக்கிறார் கள் - அவ்வளவுதான்.
மல்லையாக்களுக்காகஒரு சலுகையா? வெளிநாடுகளில் கடன் வாங்கி தொழில் முதலீட்டுச் செலவுகளுக்கு பயன்படுத்தலாம் என்று சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. கிங் ஃபிஷர் விமான நிறுவனத்தை நடத் திக்கொண்டிருக்கும் விஜய் மல்லை யாவை மனதில் வைத்துக்கொண்டே இந்த சலுகையை அறிவித்திருப் பார்கள் போலிருக்கிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவுக்கு இருக்குமானால் இப்ப டிப்பட்ட வெளிநாட்டுக் கடன் முத லீடுகளால் பிரச்சனை இல்லை. ஆனால், போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லை என் பதுதான் நமது நிலைமை. பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்களது முதலீட்டுச் செலவுக்கென வெளி நாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து கடன்பெற்று, அதனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என்றால் அந்த வட்டிச் சுமை சுற்றிவளைத்து நம் மக்களின் தலையில்தான் ஏற்றப் படும்.
suran

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 விழுக்காட்டிற்கும் குறைவாகவே மானியச் செலவு இருக்க வேண்டும் என்பது நமது கொள்கையென நிதி யமைச்சர் தனது பட்ஜெட் உரையில் கூறியிருக்கிறார். ஏற்கெனவே சொன் னதைப்போல் ஏகபோக, பெரும் நிறுவனங்களுக்கு 46,000 கோடி ரூபாய் வரையிலும் சலுகை அளிப் பதை தேவையற்ற மானியமாக மத் திய அரசு கருதவில்லை. உணவுப் பாது காப்பு, சுகாதாரம், விவசாய இடு பொருள்கள் உட்பட எளிய மக்க ளுக்காக செய்யப்படும் சமூக செலவு களைத்தான் வெட்ட வேண்டிய மானியமாக இந்த அரசு கருதுகிறது. உண்மையில் மக்களுக்கு அளிக்கப் படும் மானியங்கள், அவர்கள் வாங் கும் சக்தியை அதிகரித்து, உற்பத்திப் பொருட்களுக்கான தேவைகளை யும் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சிக்குத்தான் உதவும். ஆட்சி யாளர்களோ அந்தக் கோணத்தில் சிந்திக்காமல் முதலாளிகளுக்கான நேர்முக வரிகளில் சலுகை அளித்து பொருளாதார வளர்ச்சியை ஏற் படுத்த முயல்கிறார்கள். பெரும் நிறு வனங்களுக்கு அளிக்கப்படும் இப் படிப்பட்ட சலுகைகளின் பலன்கள் ஒருபோதும் மக்களுக்கு வந்தடைவ தில்லை என்பதுதான் அனுபவம்.
பொதுத்துறை நிறுவனங்கள் யாருக்குச் சொந்தம்? பொதுவாக பொதுத்துறை நிறு வனங்களை அரசு தனக்குச் சொந்த மானதாக நினைத்துக் கொள்கிறது. எனவே அதை எப்படி வேண்டுமா னாலும் கையாளலாம் என்று நினைக் கிறது. ஆனால் அவை மக்களுக்குச் சொந்தமானவை. அவற்றில் கைவைக் கும் அதிகாரம் அரசுக்கு இல்லை. வேடிக்கை என்னவென்றால், நிதி யமைச்சர் பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை மக்கள் வாங்குவ தற்கு வழி செய்யப்படும் என்கிறார். இது எப்படி இருக்கிறதென்றால், ஒரு பொருளின் சொந்தக்காரரிடமே அந்தப் பொருளை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்வது போல் இருக்கிறது.மேலும், லாபகரமாக இயங்காத பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள்தான் தனியாருக்கு விற்கப் படுவதாக அரசு சொல்லிக்கொள் கிறது. லாபகரமாக இயங்காத எந்த ஒரு நிறுவனத்தின் பங்குகளை முட் டாள்கள் கூட வாங்க மாட்டார்கள். லாபகரமாக இயங்கும் என்று தெரிந் தால்தான் முதலாளிகள் பங்குகளை வாங்குவார்கள்.
அப்படி, லாபகர மாக இயங்கக்கூடிய நிறுவனங் களின் குறைபாடுகளைக் களைந்து தொடர்ந்து வெற்றிகரமாக செயல் படவைத்து மக்களின் சொத்தை பாதுகாப்பதுதான் பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமையாக இருக்க முடியும். ஆனால், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியா ருக்கு விற்கப்படுவதன் பின்னணியி லுள்ள இந்த மோசடிகளை பல பொருளாதார அறிஞர்களும் சொல்வ தில்லை, ஊடகங்களும் வெளிப் படுத்துவதில்லை. ஆகவேதான், தங்களுடைய சொத்து களவாடப் படுகிறது என்ற உண்மை தெரியாத வர்களாக, அதற்கு மக்களுடைய எதிர்ப்பு வராமல் இருக்கிறது. ‘டிஸ் இன்வெஸ்ட்மென்ட்’ எனப்படும் இந்த பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிப்புக்கு எதிரான குரல் பல மடங்கு வலுவாக ஒலித்தாக வேண் டும். மேற்கு வங்கத்திலும், கேரளத்தி லும் இடது முன்னணி செய்த ஒரு முக்கியமான சாதனை, நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்தி லாபகரமாக இயங்க வைத்ததுதான். திட்டமிட்டே ஊட கங்கள் அந்த தகவல்கள் மக்களுக்கு வராமல் தடுத்தன.
அரசு கடன் வாங்குவது அவமானமா? அரசு தனது செலவினங்களுக்காக கடன்பெறுவது என்பது ஏதோ செய்யக்கூடாத தவறு என்பதைப் போல சித்தரிக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து - அதுவும், பொதுத்துறை வங்கிகளிட மிருந்துதான் - கடன் பெற்றுத்தான் முதலீடு செய்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, சொந்த லாபத்திற்காக மட்டுமே இயங்குகிற தனியார் நிறுவனங்கள் வங்கிகளிட மிருந்து கடன் பெறுவது நியாயம் தான் என்றால், ஒரு அரசு தனது மக் களுக்குச் செய்ய வேண்டிய பணி களுக்காக கடன் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆகவே, அரசு கடன் பெற்று, முத லீடு செய்து, உபரியை ஈட்டி கடன் களை அடைக்க முடியும்.
சுரன்

இன் னொரு கோணத்தில் சொல்வதா னால், அரசாங்கம் கடன் வாங்கித் தான் செயல்பட வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. ஏற்கெனவே சொன்னதுபோல செல்வந்தர்களுக் கான நேர்முக வரியை முறையாக நிர்ணயித்து அதை வசூல் செய்தாலே அரசு கடன் வாங்க வேண்டிய அவ சியம் வராது. அதற்கு மேலாக, மக் கள் நலத் திட்டங்களை செயல் படுத்துவதற்கு நிதி தேவைப்படும் போது அதனை கடனாகப் பெறுவதி லும் தவறில்லை. அரசு கடன் பெறக் கூடாது என்று சொல்வதன்மூலம், மக்களுக்கான திட்டங்கள்தான் மீண்டும் அரிக்கப்படுகின்றன. அதை நாம் தடுத்தாக வேண்டும்.
பற்றாக்குறையாகும் பகுத்தறிவு ஆண்டுதோறும் பற்றாக்குறை இலக்கு என ஒன்றை பட்ஜெட்டில் அறிவிப்பார்கள். ஒரு தடவைகூட அந்த அளவிற்கு பற்றாக்குறையை குறைக்க முடிந்ததில்லை. ஒரு வாதத் திற்காக, 5 விழுக்காடு பற்றாக்குறை இலக்கு என அறிவிக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். அதை இரண்டு வழிகளில் அடைய முடியும். ஒன்று, செலவுகளைக் குறைப்பது, இன்னொன்று வரவை அதிகரிப்பது. செலவைக் குறைப்பது என்றால், அது மக்களுக்கான செலவைக் குறைப்பது என்றுதான் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
பெரும் முதலாளி களுக்கு வழங்கப்படும் மானியங் களையும், பெரும் நிலவுடைமை யாளர்களுக்கான வரிச்சலுகைகளை யும் குறைப்பது என்ற கோணத்தில் அரசு யோசிப்பது இல்லை.அதேபோல் வரவை அதிகரிப்பது என்றால், அது கடன் அல்லாத வர வாக இருக்க வேண்டும். நேர்முக வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூல மாகவும், பொதுத்துறை நிறுவனங் களை சிறப்பாகச் செயல்படுத்துவ தன் மூலமாகவும் கிடைக்கிற வரவாக இருக்க வேண்டும்.
சுரன்

மர்மமான மவுனம் எதற்காக? ஆனால், இப்படிப்பட்ட வழி களில் அரசாங்கத்தின் வரவை அதி கரிப்பது பற்றி ஆட்சியாளர்களும் பொருளாதார வல்லுநர்கள் எனப் படுவோரும் ஊடகங்களும் பேசு வதே இல்லை. அதற்கு அவர்கள் சொல்கிற வாதம் - அப்படியெல்லாம் செய்தால் முதலீட்டாளர்கள் ஊக்க மிழந்துவிடுவார்கள் என்பதுதான். முதலீடு செய்து லாபம் எடுப்பவர்கள் திரும்பத் திரும்ப அதைச் செய்து கொண்டுதான் இருப்பார்களே யல்லாமல் தொழிலை நிறுத்திவிட மாட்டார்கள். சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளுக்கு எடுத்துப் போகக் கூடாது என்று தடைவிதித்தால், அவர்கள் என்ன செய்வார்கள்? பணத்தைச் சாப்பிடவா போகிறார் கள்? 30 விழுக்காடு லாபம் ஈட்டிய வியாபாரத்தில் வரிகளின் காரண மாக 25 விழுக்காடு லாபம்தான் கிடைக்கும் என்றால் அதை முதலா ளிகள் வேண்டாம் என்று சொல்லி நிறுவனத்தை மூடிவிடுவார்களா என்ன?டாடாவிடமிருந்து ஒரு ரூபாயை எடுத்து சோற்றுக்கு வழி யில்லாதவர்களுக்குக் கொடுத்தால் டாடா உற்சாகம் இழந்துவிடுவார் என்பது போன்ற அபத்தமான வாதம் தான் இது. இங்கேதான் அரசியல் உறுதி வேண்டும் என்பது.
இதுதான் சட்டம், இதற்கு உட்பட்டு நீ தொழில் நடத்து, லாபம் ஈட்டு என்று சொல்கிற அரசியல் உறுதி ஏன் ஆட்சி யாளர்களுக்கு இல்லை என்பதே கேள்வி.
சுகுமாரன்

வாரிக்கொடுக்கும்‘வரிச் செலவு’!பட்ஜெட் முழு விவரங்களை இணையத்தில் வெளியிட்டிருக் கிறார்கள். அதில், யாரும் கண்டு கொள்ளாத ஒரு பகுதி - ‘டாக்ஸ் எக்ஸ்பெண்டிச்சர்’ என்ற தலைப் பில் இருக்கிறது. வரிச் சலுகைகளால் ஏற்படும் இழப்புக்குத்தான் இப்படி ‘வரிச் செலவு’ என்ற அர்த்தம் தருகிற தலைப்பை வைத்திருக்கிறார்கள். 2011-12ம் ஆண்டில் வசூலான வரியை விட மிகக் கூடுதலான வரி இழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்தத் தகவல் கூறுகிறது. எடுத்துக்காட்டாக, ஆயத் தீர்வையாக (உற்பத்தி வரி) வசூலிக் கப்பட்ட தொகை 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய், வரி இழப்பு 2 லட்சத்து 12 ஆயிரத்து 167 கோடி ரூபாய்! இது வரி வசூல் துறையின் செயலின்மையால் ஏற்பட்ட இழப்பு அல்ல, அரசு அளித்த வரிச் சலுகை களால் ஏற்பட்ட இழப்பு! சுங்கவரி மூலம் வசூலானது 1 லட்சத்து 53 ஆயி ரம் கோடி ரூபாய், சலுகைகளாக விட்டுக்கொடுக்கப்பட்டது 2 லட் சத்து 23 ஆயிரத்து 653 கோடி ரூபாய்! தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கு மான வருமான வரியில் சுமார் 1 லட் சம் கோடி ரூபாய் சலுகையாகத் தரப்பட்டிருக்கிறது... இப்படியாக ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகை தரப்பட்டிருக் கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இவ்வாறு தாரை வார்க்கப்பட்ட தொகை 20 லட்சம் கோடி ரூபாய் செல்வந்தர்களுக்கு வாரி வழங்கப் பட்டிருக்கிறது!உணவுப் பாதுகாப்பைச் செயல் படுத்துவதற்குத் தேவைப்படும் தொகை 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்.
சுரன்

அதற்குப் பணம் இல்லை என்று கையை விரிக்கிற அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக் கும் மற்ற செல்வந்தர்களுக்கும் இப்படி சலுகைகளாக 20 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத் திருக்கிறது! இது அநியாயம் இல் லையா?மாநில அரசுகளுக்குக் கடும் சிக்கல்களை ஏற்படுத்துகிற பட் ஜெட்டாகவும் இது இருக்கிறது. எரிபொருள் விலையேற்றத்திற்கு வழிசெய்யப்பட்டிருப்பதும் ஏழை களைத்தான் மேலும் நெருக்கடியான வாழ்க்கைக்குத் தள்ளும். விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற மக்கள் சார்ந்த ஒதுக்கீடுகள் இந்த பட்ஜெட் டில் மிகக் குறைவு, மொத்தத்தில் பண வீக்கம், வேலையின்மை, விவசாய நெருக்கடி ஆகிய மூன்று மையமான பிரச்சனைகளையும் எதிர்கொள்ள உதவாத பட்ஜெட்டைத்தான் மன் மோகன் சிங் அரசு தாக்கல் செய் திருக்கிறது. அது மட்டுமல்லாமல், நம்பகமில்லாத மதிப்பீடுகளுட னான இப்படிப்பட்ட வரவு- செலவு அறிக்கையைத் தாக்கல் செய்தாலும், இடைக்காலத்தில் அவ்வப்போது பெட்ரோல் விலை உயர்வு போன்ற பட்ஜெட்டிற்கு உட்படாத நடவடிக் கைகளையும் அரசு எடுக்கும் என்பது நமக்குத் தெரிந்ததுதான்.மக்கள் இதை எதிர்த்துப் போராட வேண்டுமானால், மறைக்கப்படுகிற இந்த உண்மைகளை அவர்களிடம் கொண்டு சேர்க்கிற பெரிய கடமை இடதுசாரி - ஜனநாயக இயக்கங் களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும், மக்கள் அமைப்புகளுக்கும் இருக் கிறது.
சுகுமாரன்


_________________________________________________________________________________

பரபரப்பு தளபதி 

இராணுவ தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான பேரத்தில் ஈடுபட்டிருந்த ஆயுத வியாபாரி ஒருவர் தனக்கு பெருமளவு லஞ்சம் வழங்க முன்வந்ததாக இந்திய இராணுவத் தளபதி தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு இந்திய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தரமில்லாத 600 இராணுவ வாகனங்களை வாங்குவதற்கு அனுமதியளித்திட தனக்கு2.7 மில்லியன் டாலர்கள் அதாவது 14 கோடி ரூபாய்கள் பணத்தை லஞ்சமாக வழங்க முயற்சிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் விகே.சிங் இந்து பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதியின் இந்தக் குற்றச்சாட்டு இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்சனையாக வெடித்தது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை நடத்துமென்று பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோனி கூறியுள்ளார்.
முன்னதாக, இந்த விவகாரத்துக்கு விளக்கமளிக்குமாறு நாடாளுமன்றத்தில் எதிரணிகள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதை அடுத்து சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

லஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே பாதுகாப்பு அமைச்சரிடம் தான் அதுதொடர்பில் முறையிட்டதாகவும் ஜெனரல் சிங் தெரிவித்துள்ளார்.இந்த ஜெனரல் சிங் தான் தனது ஓய்வு பெறும் வயது தொடர்பாக சமீபத்தில்.உச்ச நீதிமன்றம் வரை சென்றவர், அரசு தரப்பில் தவறில்லை என்று நீதிமன்றம் அறிவுறுத்தியதால்வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டவரென்பது குறிப்பிடத்தக்கது.
உலகம்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?