கோழி-65

உடலுக்கு ஆபத்தை உண்டாக்கும்.[ சிக்கன் 65]
சிவப்பு நிறத்தை பளிச்சென்று கடைகளில் அலங்காரமாக வைத்திருக்கும் சிக்கன் 65 உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்றும் சிக்கன் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரக கோளாறுகளும், மரபணு பாதிப்புகளும், கழுத்துக் கழலை நோயும், புற்று நோயும் ஏற்படும் வாய்ப்பு உண்டு என்றும் மருத்துவ ஆராய்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது சிவப்பு நிறத்தில் கண்களைக் கவரும் வகையிலும் குழந்தைகள் விரும்பும் வகையிலும் சிவப்பு நிறத்தில் சமைக்க வியாபாரிகள் கலர் பவுடரை அதிக அளவில் ஆபத்தை அறியாமல் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்கள் மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது அதுவும் குறிப்பிட்ட நிலையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த நிறங்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ்வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகை உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 இதை யாரும் கடைபிடிக்கவில்லை.அனுமதிக்கப்பட்ட உணவுவகைகளில் அளவிற்கு அதிகமாக செயற்கை நிறங்களை அளவுக்கு அதிகமாகவோ அல்லது பதப்படுத்தப்பட்ட சிக்கன், பன்றி இறைச்சி போன்ற உணவுப்பொருட்களை சேர்த்தால் நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி, போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று குடல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செயற்கை நிறங்களில் துணிகளுக்கு சாயம் ஏற்றப்பயன்படும் சூடான் டை, மெட்டானில் எல்லோ ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதனால் தான் புற்று
நோய் சிறுநீரகக்கோளாறுகள் ஏற்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சிவப்பு நிறத்தைக் கொடுக்க பயன்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக்கழலை நோய் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த செயற்கை நிறங்களை இனிப்புகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் காரவகைகளில் சேர்க்கக் கூடாது என்றும் மருத்து
வர்கள் கூறுகின்றனர்

------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகின் முக்கிய மா[ன] நகர்கள்.
அருகில் மக்கள் தொகை.
பீகிங்[சீனா] 19 மில்லியன்
மும்பை[இந்தியா]20.5 மில்லியன்.
கராச்சி[பாகிஸ்தான்] 18மில்லியன்
ஷாங்காய்[சீனா]  23 மில்லியன்
                                                              மாஸ்கோ[ரஷ்யா] 11 மில்லியன்.
=======================================================================
             தோஷிபா Md 270 டேப்லெட்.

                                                          
தோஷிபாநிறுவனத்தின் எடி270 டேப்லெட்டுகள் லாஸ் வேகாஸ் நுகர்வோர் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது நடக்கும் உலக மொபைல் கண்காட்சியில் இந்த டேப்லெட்டுகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.  இந்த புதிய டேப்லெட்டுகள் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது.
இந்த எடி270 டேப்லெட்டுகளின் முக்கிய அம்சங்கள்.7.7 இன்ச் அளவில் சூப்பர் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் ஒஎல்இடி டிஸ்ப்ளேயைஇந்த டேப்லெட்டுகள் கொண்டிருக்கின்றன. இதன் பிக்சல் ரிசலூசன் 1280 x 800 ஆகும். மேலும் இந்த டிஸ்ப்ளே மல்டி டச் வசதி கொண்ட 16 மில்லியன் வண்ணங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த டிஸ்பளேயின் பாதுகாப்பிற்காக கோர்னிங் கொரில்லா க்ளாஸ் திரையும் உண்டு.
இந்த டேப்லெட்டுகளில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்களைப் பார்த்தால் இவை ஆடியோ ப்ளேயர், 1920 x 1080 பி வீடியோ அவுட் கொண்ட வீடியோ ப்ளேயர் மற்றும் அனலாக் ரேடியோ ஆகிய வசதிகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் ரேம் மெமரி 1024 எம்பி ஆகும். இந்த மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு, மைக்ரோ எஸ்டிஎச்சி மற்றும் ட்ரான்ஸ் ப்ளாஷ் மூலம் 32 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

இந்த டேப்லெட்டுகள் ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்குதளத்தைக் கொண்டிருக்கின்றன. மேலும் இணைப்பு வசதிகளுக்காக எ2டிபியுடன் கூடிய ப்ளூடூத், வைபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி கனக்டருடன் கூடிய யுஎஸ்பி 2.0 எச்டிஎம்ஐ டி கனக்டர் போன்ற வசதிகளை இந்த டேப்லெட்டுகள் கொண்டிருக்கின்றன.
இந்த டேப்லெட்டுகளின் ஒலி அமைப்பு மிகவும் நன்றாக உள்ளது. அதற்காக இந்த டேப்லெட் ஸ்டீரியோ சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கரைக் இதில் உள்ளது. மேலும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் மோனோ மைக்ரோபோன்களும் இந்த டேப்லெட்டுகளில் பார்க்க முடியும்.
இந்த டேப்லெட்டுகள் க்வாட்கோர் என்விடியா டேக்ரா 3 டி33 ப்ராசஸர் மற்றும் என்விடியா ஜிஇபோர்ஸ் க்ராபிக்ஸ் ப்ராசஸரையும் கொண்டிருக்கின்றன.  இந்த டேப்லெட் பார்க்க மிக நளினமாக உள்ளது. விரைவில் விற்பனைக்கு வருகிறது.
_______________________________________________________________________ 
ரஷ்யா தேர்தலில் தில்லாலங்கடி செய்த புடினுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று மகளிர் தினம்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?