என்று தணியும் ,,இந்த

 சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும், எட்டு மணி நேரம் முதல் பத்து மணி நேரம் வரை மின் வெட்டு நிலகிறது.தொழிற்சாலைகள் முடங்கி தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவியருக்கும் தேர்வு நேரம் என்பதால் இதற்கு புதிய மின் திட்டத்தை அமல்படுத்த, எரிசக்தித் துறைக்கு அரசு ஒப்புதல் அளித்தது. 
இனி சென்னைக்கு இரண்டு மணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் மின் விடுமுறை, தொழிற்சாலைகளுக்கு, ஞாயிற்றுக்கிழமை வழக்கமான மின்சார கட்டுப்பாடு, தொழிற்சாலைகள், வணிக இணைப்புகளுக்கு 40 சதவீத மின்கட்டுப்பாடு, மாவட்டங்களுக்கு நான்கு மணி நேரமாக மின் வெட்டு குறைப்பு ஆகிய அம்சங்களை, மின்வாரியம் பந்தாவாக அறிவித்தது.

 கடந்த 27ம் தேதி, சென்னையில் கூடுதல் மின் வெட்டு அமலானது. ஆனாலும், மற்ற இடங்களுக்கு, பல மணி நேர மின் வெட்டு குறையவில்லை. நேற்று, தொழிற்சாலை மின் விடுமுறை, 40 சதவீத மின்சார கட்டுப்பாடு ஆகிய அனைத்து திட்டங்களும், முழுமையாக அமலுக்கு வந்து விட்டன. ஆனாலும்,மாவட்டங்களில் மின்வெட்டு கொஞ்சமும் குறையவில்லை. மாநிலம் முழுவதும், நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை வரை, நான்கு பிரிவுகளாக, எட்டு மணி நேர மின்வெட்டு வழக்கம் போல் இருந்தது. இரண்டு முறை மூன்று மணி நேரமும், இரண்டு முறை ஒரு மணி நேரம் என, மொத்தம் பத்து மணி நேரமும், சில இடங்களில்,  ஒன்பது மணி நேரமும் மின்வெட்டு ம் இருந்தது.
அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகளுக்கும் வழக்கம் போல், பல மணி நேர "பவர் கட்' நீடித்தது. இது குறித்து, சென்னை சிட்கோ தொழிற்சாலை நிர்வாகி ஒருவர் கூறும்போது, ""தொழிற்சாலைகளுக்கு மின் விடுமுறை விட்டால், அந்த ஒரு நாளில் மட்டும் முழுமையாக மின் வெட்டு இருக்கும். மற்ற நாட்களில், தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என நினைத்தோம். ஆனால், வழக்கமான தினசரி எட்டு மணி நேர மின்வெட்டும் அமலாகிறது. இதனால், முந்தைய நிலையை விட தொழிற்சாலைகள் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன,'' என்றார்.

புதிய மின்வெட்டு குறித்து, தமிழ்நாடு சிறு, குறுந்தொழில்கள் பாதுகாப்பு நலச்சங்க தலைவர் ஞானசம்பந்தன் கூறுகையில், ""புதியதிட்டத்தால் தீர்வு கிடைக்கும் என நினைத்ததற்கு மாறாக, பல மணி நேர மின் வெட்டும் தொடர்கிறது. மின்விடுமுறையும் அமலாகிறது. தீர்வை கேட்டால், கூடுதலாக மின் வெட்டைத்தான் இந்த அரசு கொடுத்துள்ளது,'' என்றார்.
தமிழகத்திற்கு மின்சாரம் தரும் மின் நிலையங்களில் ஏற்பட்ட கோளாறுகளாலும், காற்றாலை மின் உற்பத்தி குறைவாலும், மின் பகிர்மான மேலாண்மையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. 
 அனல்மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையம் மட்டுமே, நம்பிக்கையாக மின்சாரம் தரக்கூடியவை. இந்த மின்சார உற்பத்தியை கணக்கிட்டு தான், மின்வெட்டு முறை திட்டமிடப்படுகிறது. இந்நிலையில், அணுமின் நிலையங்கள், எந்த பாதிப்பும், கோளாறுமின்றி, தொடர்ச்சியான மின் உற்பத்தியில் உள்ளது. ஆனால், அனல்மின் நிலையங்களில், அடிக்கடி கோளாறு ஏற்பட்டு, உற்பத்தி பாதிக்கிறது. தமிழத்திற்கு மின்சாரம் தரும் அனல்மின்  நிலையங்களில் ஏற்பட்ட திடீர் கோளாறுகளால், நேற்று முதல், 900 மெகாவாட் மின்சார வரவு குறைந்துள்ளது. எண்ணூர் மின்நிலையத்தில், மூன்று அலகுகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதால், 330 மெகாவாட் குறைந்துள்ளது.

 வடசென்னை அனல்மின் நிலைய முதல் அலகில், கடந்த ஜன., 21ம் தேதி ஏற்பட்ட கோளாறு, இதுவரை சரி செய்யப்படவில்லை. இரண்டாம் அலகு, கடந்த 20ம் தேதி பழுதாகியது; அதுவும், இன்னும் கிடப்பிலிருந்து மீளவில்லை. இந்த இரண்டு அலகுகளால், 420 மெகாவாட் மின் உற்பத்தி நின்று விட்டது. தற்போது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிலையத்தின், முதல் நிலையிலுள்ள 6வது அலகில், நேற்று முன் தினம் கோளாறு ஏற்பட்டு, 50 மெகாவாட் உற்பத்தி நின்று போனது. ஆந்திராவில், ராமகுண்டம் நிலையத்தின் ஒரு அலகில் ஏற்பட்ட கோளாறால், 500 மெகாவாட் உற்பத்தி சரிந்து விட்டது.
 இப்படி பல்வேறு நிலைய கோளாறுகளால், இரண்டு நாட்களாக, 900 மெகாவாட் மின்சாரமும், நிலையான மின்சாரத்தை எதிர்பார்க்க முடியாத, காற்றாலையில் ஏற்பட்ட உற்பத்தி குறைவால், 400 மெகாவாட் மின்சாரமும், தமிழக மின்வாரியத்திற்கு கிடைக்காமல், மின் பகிர்மானமேலாண்மையில், கடுமையான நெருக்கடியும், குளறுபடியும் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இது பற்றி தமிழ் நாடு அரசும் ,முதல்வர் ஜெயலலிதாவும் ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை.மக்கள் மின் தடையால் அவதிபடுவதை ஒரு பொருட்டாக எண்ணி அதை நீக்க எந்தமுயற்சியும் எடுக்கவில்லை.இனியும் எடுக்கப்போவதாகவும் தெரியவில்லை.

மின் உற்பத்தியை நிறுத்தியுள்ள மின் உற்பத்திநிலையங்களை பழுது பார்த்து உற்பத்திக்கு வழி ஏற்படுத்துவதாக இந்த அரசுக்கு எந்த யோசனையும் இருப்பதாக தெரியவில்லை.
முந்தய கருணாநிதி அரசு மத்திய அரசிடம் கெஞ்சியும்,மற்றைய மாநிலங்களில் மின்சாரம் வாங்கியும் இரண்டு மணி நேர மின் வெட்டை மட்டும் கொண்டுவந்தது.அதுவே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியது.இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவோ மத்திய அரசை முறைத்துக்கொண்டு அவர்களாக அதிக மின்சாரம் தர வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார். 
கடந்த அரசில் மின் சாரம் வெளி மாநிலங்களில் வாங்கியதில் முறைகேடு என்று கூறி வாங்குவதையும் நிறுத்திவிட்டார்.ஆட்சி செய்யத்தெரிந்தவர் அல்லவா?ஆனால் அவர் மீது அதிருப்தி மக்களிடம் ஏற்பட்ட மாதிரியும் தெரியவில்லை.சென்ற காலங்களில் ஆற்காடு வீராசாமி குடும்பம் வரை மின் தடையின் போது திட்டியவர்கள் யாரும் இப்போது முதல்வரையோ,மின்அமைச்சரையோ [இப்போது யார் மின் அமைச்சர் என தெரியாதது வேறு ]திட்டுவதாக தெரியவில்லை.மின் வெட்டு பழகிப்போயிற்றா?அல்லது 5ஆண்டுகளுக்கு முன் சென்று விட்டதா தமிழ்நாடு?


மின் வெட்டால் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் முடங்கி பலர் வேலையை இழந்துள்ளனர்.விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தேர்வுக்கு படிக்க இயலவில்லை.இவை எல்லாம் போக வழிப்பறி,சங்கிலி பறிப்பு பரவலாகி விட்டது.தினசரி கன்னக்கோல் திருட்டு டாஸ்மாக் கடை குவார்ட்டர் திருட்டுவரை போய்விட்டது.ஆந்திரா போன திருடர்கள் அனைவரும் விடுப்பு முடிந்து வந்து விட்டனர்.ஆனால் அம்மையார் மட்டும் சிறுதாவூர் பங்களாவில் இவை எதையும் பற்றி கவலையின்றி ஓய்வெடுக்கிறார்.இப்போதைய அவரின் முன் நிற்கும் தலையாய பணி சங்கரன் கோவில் வாக்கு சேகரிப்பு மட்டும்தான்.கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றியும் வாயை இறுக்க மூடியுள்ளார்."மக்கள் ரொம்ப நல்லவங்க"என்பதை கண்டு பிடித்துள்ளார்.அதுதான் அவரின் மெஜரிட்டி பலம்.  
எப்படியாகிலும் சென்னையும் -சங்கரன் கோவிலிலும் மின் தட்டுப்பாடு இல்லை.வாழ்ழங்குள்ளவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.ஆமாம்-
நம்ம ஊரிலும் எப்போ இடைத்தேர்தல் வரும்?
 
()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))\))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


ராகுல் மண-யாகம்?
 



காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியின் திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கி விரைவில் அவருக்கு திருமணம் நடைபெற வேண்டி உத்திரபிரதேசத்தில் யாகம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம், மதேபுரா மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் விஷ்ணுதேவ் பிரசாத் யாதவ், நடத்திய இந்த யாகத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு ராகுலுக்கு சீக்கிரமாக திருமணம் நடக்க வேண்டினர்.
ராகுல் காந்தியின் திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கி, மிகப்பொருத்தமான மணமகளுடன் விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறவும்,பின் இணப்ப்பாக உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டியும் இந்த யாகம் நடத்தப்பட்டதாக விஷ்ணுதேவ் தெரிவித்துள்ளார்.
அப்படியாவது ராகுலுக்கு திருமணம் நடக்க நாமும் அவரவர் விருப்ப தெய்வங்களை வணங்குவோமாக.
**********************************************************************************\
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?