உ [ற்சாகம்] பி [றந்தது]

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதுவரை ஆட்சியில் இருந்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி கடும் தோல்விகண்டுஆட்சியை பறி கொடுத்தது.
உத்திரப்பிரதேசத்தில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை படுதோல்வியடைந்துள்ளன. 403 இடங்களைக் கொண்ட உ பி யில் சமாஜ்வாதி கட்சி 226 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 77 இடங்களிலும் வென்றுள்ளன.
பாரதிய ஜனதா கட்சிக்கு 50 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 38 இடங்களும் கிடைத்துள்ளன.

தமது கட்சிக்கு வாக்களித்த உத்திரப் பிரதேச மக்களுக்கு மிகுந்த நன்றிகளை தெரி்வித்துக் கொள்வதாக முலாயம் சிங் யாதவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"இந்தத் தோல்வியை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டிய அவசியமும் இல்லை, நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய தேவையும் இல்லை"
மாநிலத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகள் காரணமாக இதுவரை எந்தப் பிரதமரும் பதவி விலகியது கிடையாது. ஏன் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் எனவும் அவர்கூறியுள்ளார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

 மாயவாதி அரசால் 2000 கோடியில்பெரும் பொருட்செலவில் நிறுவப்பட்ட அவரது கட்சி சின்னமான யானை சிலைகள் மற்றும் மாயாவதி,கன்சிராம்  சிலைகள் ஆகியவைகளும் இடிக்கப்டாது எனவும அவர் கூறியள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் அகாலிதள-பா ஜ க கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடித்தது இதுவே முதல் முறையாகும்.

அங்கு அகாலிதளம் தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 117 இடங்களில் 68 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 46 இடங்கள் கிடைத்துள்ளன. இதர கட்சிகள் மூன்று தொகுதிகளில் வென்றுள்ளனர்.
அரசியல் குழப்பமிக்க மாநிலமான கோவாவில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து பா ஜ க ஆட்சியை கைப்பற்றியுளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள தோல்விக்கு தான் பொறுப்பேற்பதாக அக்கட்சியின் பொதுச் செயலர்களில் ஒருவரான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அங்கு தேர்தல் பிரச்சாரங்களுக்கு தான் தலைமையேற்றிருந்த நிலையில் இந்தத் தோல்விகள் தனக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் தேசியத் தலைவர் முலாயம் சிங் யாதவ் உத்திரப் பிரதேச மாநில முதல்வராக பொறுப்பேற்பார் என்று அவரது மகனும் கட்சியின் மாநிலத் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் முலாயம் சிங் யாதவ் மாநில சட்டமன்றத்துக்கு இடம்பெற்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
தமது கட்சிக்கு இந்த மகத்தான வெற்றியை அளித்துள்ள மாநில மக்களுக்கு தான் நன்றி கூறுவதாக  முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்
உத்திரகண்டில் காங்கிரஸ் மற்றும் பா ஜ க இடையே கடும் போட்டி நிலவுகிறது. அங்குள்ள 70 இடங்களில் பா ஜ க 32 தொகுதிகளையும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சி மூன்று இடங்களிலும், சுயேட்சைகள் மற்றும் இதர கட்சி நான்கு இடங்களையும் பெற்றுள்ளன.
மாநிலத்தின் தற்போதைய முதல்வர் பி சி கண்டூரி தேர்தலில்


 தோல்வியடைந்து அதிர்ந்து போயுள்ளார்இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதுதான் ஆர்வத்தையும்-குதிரை பேரத்தையும் ஏற்படுத்தும் கேள்வியாகும்.5 மாநிலங்களில் உத்திரகண்ட் மட்டும்தான் சுவாரசியமான முடிவை தந்துள்ளது.
உத்திரபிரதேசம்,பஞ்சாப்,கோவா ஆகிய மூன்று மாநிலங்களும் காங்கிரசுக்கு பலத்த அடியையும்,பாடத்தையும் கற்று கொடுத்துள்ளது.மணிப்பூர் மட்டும் "கை' கொடுத்துள்ளது.


ராகுல் கடந்த ஓராண்டாக உ.பி.தேர்தலை கணக்கிட்டு குடிசை,குடிசையாக கூழ் யாசித்து குடித்தும்,மண் சுமந்தும் நடித்து வாக்குகளை சேர்க்க முயற்சித்தும் அவரின் மத்திய ஆட்சியின் 

அலங்கோலத்தையும்.,பணக்காரர்களுக்கான ஆட்சி முடிவுகளையும்,பெட்ரோல் போன்ற அத்தியாவசியப் பொருட்களைன் விலை கடுமையான ஏற்றமும் படு தோல்வியை -நான்காம் இடத்தையே தந்துள்ளது,

இத்தேர்தலில் திடீரென போராளியாகி இட ஒதுக்கீடு பற்றி பேசி வாங்கிக்கட்டிக்கொண்ட சல்மான் குர்ஷித் மனைவி லூயிஸ் குர்ஷித் தான் போட்டியிட்ட பர்க்காபாத் தொகுதியில் சுயேச்சையிடம்படு தோல்வியை அடைந்து மூன்றாம் இடத்தையே அடைந்தார்.வாழ்க உ.பி.மக்கள்.




-----------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?