"கோலா'கல வியாதிகள்?

நாம் தினம் சுவைத்து பருகும் பல குடிபானங்களில், தின்பண்டங்களில் சேர்க்கப்படும்  நிறக்கலவைதான் 4மீ எனப்படும்4மெத்யில்இமிடாசோல் என்ற இராசயனப் பொருள்.
இது உடலில் சேர்வது புற்றுநோயைக் கொண்டுவரலாம் என்ற அச்சமிருப்பதால் குடிபானங்களிலும் தின்பண்டங்களிலும் அந்தக் கலவை இருப்பதற்கான எச்சரிக்கை பொறிக்கப்பட வேண்டும் என்று சட்டம் வந்துள்ளதாலேயே அவற்றின் தயாரிப்பில் உள்ள உட்சேர்க்கைப் பதார்த்தங்களில் மாற்றம் கொண்டுவர நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

எலிகளில் ஏற்படும் ஒருவகைப் புற்றுநோய்க்கும் இந்த இரசாயனப் பொருட்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அவை மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லைஎன்று அந்த மென்சுவை பானங்கள் தயாரிக்கும் கொக்ககோலா,பெப்சி போன்ற நிறுவனங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றன எலிகளைப்பாதிக்கும் பொருட்கள் மனிதர்களையும் பாதிக்கும் என்ற காரணத்தால்தான் எலிகளை ஆய்வுகளுக்கு பயன் ப்படுத்துகிறார்கள்.
ஆனால் பொதுவாக கார்சினோஜன் பொருட்கள், அதாவது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் என சில இரசாயனப் பதார்த்தங்களை பட்டியல் படுத்தியுள்ள அமெரிக்கா அப்பட்டியலில் 4மெத்யில்இமிடாசோல் ஐயும் சேர்த்துள்ளது. இதனால் இந்தப் பொருட்கள் காணப்படும் குடிபானங்கள் குறிப்பாக கொக்ககோலா மற்றும் பெப்சி போன்ற பானங்களும் இந்த புற்றுநோய் எச்சரிக்கை அறிவிப்பை தங்கள் புட்டிகளில் வெளியிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அறிவித்தலை 'விஞ்ஞான ரீதியில் உறுதிசெய்யப்படாதது' என்று அடம் பிடிக்கும் கொக்ககோலா நிறுவனம், அப்படியான எச்சரிக்கையை தனது புட்டியில் வெளியிடுவதை தவிர்ப்பதற்காக தனது கோலா தயாரிப்புமுறையை மாற்றியமைக்குமாறு தன் தொழிற்சாலைகளுக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, பரிசோதனைக் கூடத்தில் சோதிக்கப்பட்டுள்ள எலிகளில் புற்றுநோயை ஏற்படுத்தியுள்ள இந்த இராசயனப் பொருளின் அளவைப் பார்க்கும்போது அதிகமாககோலா பானங்கள் பருகி வருபவர்களை அது பாதிக்கலாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாடு நிறுவனம் கூறியுள்ளது.ஏற்கனவே கோலாக்கள் தங்கள் மென்பானத்தின் சுவைக்காகவும்-திரும்ப,திரும்ப வாங்கி அருந்த வேண்டும் என்பதற்காகவும் சில தடை செய்யப்பட்ட ரசாயனங்களை சேர்க்கிறது.அதை பற்றி கேட்டால் தனது தயாரிப்பு ரகசியம் ஏழு கடல்,ஏழு மலை தாண்டி கிளியின் வயிற்றுக்குள் ரகசியமாக உள்ளது என்று கதைத்துவருகின்றன.
ஆனால் வெறு வழியின்றி இப்போதைக்கு அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் தமது தயாரிப்புகளில் மாற்றம் கொண்டுவந்தி்ருப்பதாகக் கூறும் கொக்ககோலா மற்றும்பெப்சிகோலா நிறுவனங்கள், அவற்றின் மற்ற ஆலைகளிலும் தயாரிப்புமுறையில் மாற்றம் வரும் என்று அறிவித்துள்ளன.ஆனால் இப்புதிய மாற்றத்தால் கோலாக்களின் சுவையில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறியுள்ளது.

_________________________________________________________________________________________________________
 பெரிய மாநிலம் சின்ன[வயது] முதல்வர்!


உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் அகிலேஷ் யாதவ் உரிமைகோ ரியுள்ளார்.  அம்மாநில ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த பிறகு,  மார்ச் 15ம் தேதி அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.


கட்சியின் மூத்த தலைவரான ஆஸம் கான், முலாயமின் தம்பி ஷிவ்பால் சிங் யாதவ் ஆகியோர்அகிலேஷை முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை அளிப்பதாகக் கூறி அஸம் கானையும், நமக்கு வயதாகி விட்டது. எனவே இளம் தலைமுறையினருக்கு வழி விட வேண்டும் என்று  தம்பி ஷிவ்பாலையும் முலாயம் சிங் யாதவ் சமாதானப்படுத்தியுள்ளார்.
 சமாஜ்வாடிக் கட்சிக் கூட்டம் நடைபெறும் பகுதியில் இவர்கள் இருவரது ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால்சமாஜ்வாடிக் கூட்டத்தில் முதல்வர் பதவிக்கு அஸம் கான் அகிலேஷ் யாதவின் பெயரை முன்மொழிந்தார், ஷிவ்பால் சிங் யாதவ் வழிமொழிந்தார்.
அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டால், அம்மாநிலத்தில் மிக இளம் வயதில் முதலமைச்சராக பொறுப்பேற்றவராக அகிலேஷ் யாதவ் திகழ்வார்.
____________________________________________________________________________________________________________
மரகதக்கல் மோசடி?



படத்தில் ஏலம் விடுவதற்காக வைத்துள்ள மரகதக்கல் உலகிலேயே மிகப்பெரிதாக கர்ய்தப்பட்டது.கனடாவில் ஒருவர் மூலம் ஏலத்திற்கு வந்த இந்த பச்சைக்கல் போலி என்று கண்டறியப்பட்டது.இதன் உரிமையாளர் தற்போது இக்கல்லுடன் சிறையில் உள்ளார்.
_________________________________________________________________________________
புகைபடங்களுடன் உலக செய்திகள் 
ஜப்பான் சுனாமியி சுவடுகள்.16000 பேர்கள் இறப்பு,3300 பேர்கள் காணவில்லை.போன்ற அவலங்களைத் தந்த சுனாமி சீரழிவு மிச்ச்சம்தான் மேலே.
கீழே சுனாமி தின நினைவு கூறல்

உலகில் அரிதாகிப் போன சாம்பல் நிற ஆந்தை.
பெருவில் உள்ள 82 வயதான பெரிய அனாதைகள் விடுதியின் குழந்தைகள் வெளி உலகைப்பார்க்கிறார்கள்.
பகோடா நகர போராட்டத்தின் போது படம் எடுப்பவரை தாக்கும் காவலர்.

340 டன் எடை பாறையை ஏற்றி செல்லும் சுமையுந்து.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?