உலக அணை வலம்,

முல்லைப்பெரியாறு அணை விடயத்தில் அடித்துக்கொள்ளும் உம்மன்சாண்டி போன்ற கேரள மாநிலத்தவர்கள் கவனத்திற்கு மட்டுமல்ல நம்மவர்களும் பார்த்து வியக்க உலகில் உள்ள பிரமாண்ட அணைகள் ஒரு பருந்து பார்வை.

 Nurek Dam  இது தாஜிக்ஸ்தானில் உள்ளவாக்ஸ் ஆற்றில் கட்டப்பட்டது.  1961 கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1980-ல் முடிக்கப்பட்டது. 300 மீட்டர் உயரமானது இவ்வணை.இப்போதைக்கு உலகில் இதுதான் உயரமான அணையாகும்.
  இந்த அணையில் மின்னுற்பந்தி  செய்யப்படுகிறது.

02. 

 Xiaowan Damதெற்கு சீனாவில் உள்ள லான்சாங் ஆற்றில் கட்டப்ப்பட்ட அணை.நாஞியான் நகர அருகில்  உள்ள இவ்வணையில் 4200 மெ.வாட்ஸ்மின்சாரம் தயாரிக்கப்படுகிறது 292 மீட்டர் உயரமுள்ள இந்த அணை 2002 இ ல் ஆரம்பிக்கப்பட்டு 2010 கட்டி முடிக்கப்பட்டது.

03. 

 Grande Dixence

04. 

 Inguri Dam, 1980இல் ஜார்ஜியாவில்இங்குரி ஆற்றில் கட்டி முடிக்கப்பட்ட அணை.680 மீட்டர் உயரமுள்ளது.இதில் 1,300மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

05. 

 Vajont Dam  1959இல் கட்டப்பட்ட அந்த அணை 262மீட்டர் உயர்முள்ளது.இந்த அணையின் பின் சோகம் உள்ளது.09-10-1963இல் இந்த அணையில் ஏற்பட்ட பொறியியல் கோளாறில் அணை மொத்தமாக திறக்கப்பட்டதில் சீறிப்பாய்ந்த அணை நீரால் 5 கிராமங்கள் காணாமல் போயின.கிட்டதட்ட 2000 பேர்கள் பலியாயினர்.பின்னர் அணை சீரமைக்கப்பட்டு சம்ர்த்தாக நீரை ச்செகரிக்கிறது.
________________________________________________________________________________-
Today the remembrance day of Japan Tsunami.



ஜப்பானில், கடந்தாண்டு மார்ச் 11ம் தேதி கடற்பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தையடுத்து, ஜப்பானை சுனாமி தாக்கியது. இதில், ஐவேட், மியாகி, புக்குஷிமா ஆகிய மூன்று மாகாணங்கள் இதில் பேரிழப்பைச் சந்தித்தன. இச்சோக சம்பவத்தில், 15 ஆயிரத்து 800 பேர் பலியாயினர். 3,200 பேர் காணாமல் போயினர். புக்குஷிமா மாகாணத்தில் உள்ள அணுமின் நிலையங்கள் பெரும் அபாயத்திற்குள்ளாயின. அவற்றில் இருந்து ஏற்பட்ட கதிர்வீச்சு, இன்றளவும் அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. மூன்று லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் அழிந்தன. ஒரு லட்சத்து 60,000 பேர் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். 

1986ல், உக்ரைன் நாட்டின் செர்னோபிள் அணுமின் நிலைய விபத்திற்குப் பின், நிகழ்ந்த பெரும் விபத்தாகக் கருதப்படும் ஜப்பான் சுனாமியின் ஓராண்டு நினைவு நாள், இன்று அந்நாட்டில் அனுசரிக்கப்படுகிறது.,  ஐவேட் உள்ளிட்ட மூன்று மாகாணங்களில், அஞ்சலி செலுத்துவதற்கான நினைவிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பான்நேரப்படி, இன்று நண்பகல் 2.46 மணிக்கு அதாவது சுனாமி தாக்கிய நேரத்தில், நாடு முழுவதும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.  நினைவு நாளை முன்னிட்டு, நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒசாகா நகரில், சுனாமியில் பலியானோரின் நினைவாக, நேற்று 16 ஆயிரம் மெழுகுவத்திகள் பொருத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?